Welcome

WELCOME to Education++

Wednesday, January 26, 2022

VIT ‘ஸ்டார்ஸ்’ திட்டத்தின் கீழ் இலவச கல்வி


 விஐடி ‘ஸ்டார்ஸ்’ திட்டத்தின் கீழ் இலவச கல்வி


அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி வழங்க வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி) ‘ஸ்டார்ஸ்’ எனும் திட்டத்தை தொடங்கி சேவையாற்றி வருகிறது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பள்ளிகளில் படித்து மாவட்ட அளவில் முதலிடம் பெறும் ஒரு மாணவன், ஒரு மாணவிக்கு இந்த வாய்ப்பை விஐடி ( VIT - Vellore Institute of Technology) நிர்வாகம் வழங்கி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் சேரும் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில மொழித் திறன் பயிற்சி, கணினிப் பயிற்சி, பேச்சு திறன் மற்றும் ஆளுமை வளர்ச்சி, ஆலோசனை/வழிகாட்டுதல், அனுபவமிக்க ஆசிரியர்களின் சிறப்பு வகுப்புகள் மற்றும் வளாக நேர்காணலுக்கு உறுதுணையாக இருத்தல் என தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படுகின்றன.

2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 727 பேர் வாய்ப்பு பெற்றிருக்கின்றனர்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் 2021 ஆண்டு ‘ஸ்டார்ஸ்’ திட்டத்தின் மூலம் தேர்வான மாணவ மாணவிகளுக்கு சேர்க்கைக்கான அனுமதிக் கடிதத்தை சென்ற நவ.16 அன்று தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்தக் கல்வி ஆண்டில் (2021-22) சென்னையின் 3 வருவாய் மாவட்டங்களிலிருந்து 5 பேர் உட்பட பிற மாவட்டங்களிலிருந்து 74 மாணவ மாணவிகள் ‘ஸ்டார்ஸ்’ திட்டத்தின் மூலம் விஐடியின் வேலூர் மற்றும் சென்னை வளாகங்களில் இலவசக் கல்வி பெற உள்ளனர்.

கூடுதல் தகவல்களுக்கு:

STARS-SUPPORT THE ADVANCEMENT OF RURAL STUDENTS:

https://vit.ac.in/stars-support-advancement-rural-students-0

For further details contact:
Dr.S. Meenakshi,
STARS Co-ordinator
stars.coordinator@vit.ac.in
0416-220 2201 

No comments:

Post a Comment

Gate Exam - Topper's Tips

GATE 2022: தேர்வுக்கு எப்படி தயார் ஆகப் போறீங்க? டாப்பர்ஸின் டிப்ஸ் இதோ! GATE மாதிரி தேர்வுகளை பல பயிற்சி மையங்கள் நடத்தி வருகின்றன. முடிந்...