Welcome

WELCOME to Education++

Wednesday, January 26, 2022

NMMS - National Means Cum Merit Scholarship Exam

NMMS கல்வி உதவித்தொகை தேர்வு அறிவிப்பு – 8 ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

NMMS - தேசிய வருவாய் வழி திறனாய்வு உதவித்தொகை தேர்வு:

ஏழை மாணவ, மாணவிகளின் மேல்நிலைக் கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்தியாவில் என்.எம்.எம்.எஸ்., (NMMS - National Means cum Metric Scholarship) எனப்படும் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு ஆனது வருடந்தோறும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும்.

தமிழகத்தில் 2021-2022ம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து 12.01.2022 முதல் 27.01.2022 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பங்களை தங்களின் பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்து விண்ணப்பக்கட்டணம் ரூ.50 சேர்த்து தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் 27.01.2022ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

இந்த தேர்வானது இந்த ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் தேதி நடைபெறும்.

இந்த தேர்வில் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 50 மாணவர்களுக்கும், 50 மாணவிகளுக்கும் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.12 ஆயிரம் மத்திய அரசால், அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

தகுதி

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் பங்கேற்க, ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சம் இருப்பதுடன், ஏழாம் வகுப்பின் முழு ஆண்டு தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள், 50 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருந்தால், இந்த தேர்வு எழுதலாம்.

இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு முடிய 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ரூ.48 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை பெறமுடியும். பணம் அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் நடக்கும் இத்தேர்வில், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்ச்சி பெறுகின்றனர். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் தேர்வு முடிவுகளானது வருடந்தோரும் மார்ச் மாதத்தில் வெளியாகும்.

தேர்வுக்கு மாணவர்கள் தயாராவது எப்படி?

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு குறைவாக உள்ளதாக கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, என்எம்எம்எஸ் தேர்வு குறித்து எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளிக் கல்வித்துறை எடுத்துவருகிறது.

பாடதிட்டம்:

முந்தைய வகுப்பு பாடத்திட்டங்கள் மற்றும் பொது அறிவு சார்ந்த கேள்விகள், இந்தத் தேர்வில் இடம்பெறும்.

90 மதிப்பெண்ணிற்கு மனத்திறன் தேர்வு, 90 மதிப்பெண்ணிற்கு படிப்பறிவு திறன் தேர்வு என 2 வகையான தேர்வுகள் நடந்தப்படும்.

எட்டாம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல், கணிதம் தொடர்பான பாடத்திட்டங்களுக்கான வகுப்புகள், மனத்திறன் தேர்வு மற்றும் படிப்புத்திறன் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

(NMMS Exam 2020 Syllabus

Mental Ability Test

Analogy
Classification
Numerical series
Pattern perception
Hidden figures
Testing verbal and non-verbal meta-cognitive abilities like reasoning and
critical thinking

Scholastic Aptitude Test

Science
Social studies and
Mathematics

as taught in classes VII and VII)

குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்ச்சி

ஆண்டுதோறும் நடக்கும் இத்தேர்வில், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்ச்சி பெறுகின்றனர்.
அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், தேர்வுக்கான பாடத்திட்டம், வினாக்களின் வகை, மாதிரி வினாக்கள் போன்றவற்றை, அரசு தேர்வுத்துறை தற்போதே அறிவித்தால், கிராமப்புற மாணவர்கள், தேர்வுக்கு தயாராக முடியும் என, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் விபரங்களைக்கு:

https://scholarships.gov.in/.../schem.../NMMSSGuidelines.pdf

http://www.dge.tn.gov.in

https://www.buddy4study.com/article/nmms
 

No comments:

Post a Comment

Gate Exam - Topper's Tips

GATE 2022: தேர்வுக்கு எப்படி தயார் ஆகப் போறீங்க? டாப்பர்ஸின் டிப்ஸ் இதோ! GATE மாதிரி தேர்வுகளை பல பயிற்சி மையங்கள் நடத்தி வருகின்றன. முடிந்...