Welcome

WELCOME to Education++

Wednesday, January 26, 2022

AUTOCAD


 ஆட்டோகேட் (AutoCAD)


ஆட்டோகேட் என்பது வணிக ரீதியான கணினி உதவி வடிவமைப்பு (CAD Computer aided design software) மற்றும் வரைவு மென்பொருள் ஆகும்.

ஆட்டோடெஸ்க் நிறுவனம் இதனை உருவாக்கி டிசம்பர் 1982 முதல் விற்பனை செய்து வருகிறது. ஆட்டோகேட் தரமான கிராபிக்ஸ் கார்டு கொண்ட கம்ப்யூட்டர்களில் இயங்கும்.

ஆட்டோகேட், கட்டட வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் மற்றும் கட்டுமான வல்லுநர்கள், துல்லியமான 2D மற்றும் 3D வரைபடங்களை உருவாக்க பெரிதும் பயன்படுத்துகின்றனர்.

மேலும் இதைக்கொண்டு திட, சமதல மற்றும் வலைப்போன்ற பரப்புகளையுடைய 2D மற்றும் 3D மாதிரிகளை வடிவமைக்க முடியும்.
வரைவு, சிறுகுறிப்பு மற்றும் வடிவமைப்பு வரைபடங்களை ஒப்பிடுவது, தொகுதிகள் சேர்ப்பது, அட்டவணைகளை உருவாக்குதல் போன்ற பணிகளை தானியக்கமாக்க முடியும்.

ஆட்டோகேட் டூல்கிட்

இது தொழில் சார்ந்த அம்சங்கள் மற்றும் கட்டிடக்கலை, இயந்திர பொறியியல், மின் வடிவமைப்பு மற்றும் பலவற்றிற்கான சிறப்பு டூல்களை உள்ளடக்கியது.

சந்தா விலை: ஆண்டுக்கு ₹75,225

வேலைவாய்ப்பு:

ஆட்டோகேடை முறையாக கற்றுக்கொண்டால் நல்ல வேலைவாய்ப்பு உள்ளது. முக்கியமாக டிராப்ட்ஸ்மேன் (Draftsman) வேலையில் சேரயிருப்பவர்களுக்கு இதில் நிபுனராக இருப்பது அடிப்படை தகுதியாகும்.

சிவில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் பட்டதாரிகள், ஆர்கிடெக்ட்கள், மெக்கானிகல் இன்ஜினியரிங் பட்டதாரிகள்,
ஆட்டோகேடை முறையாக கற்றுக்கொண்டால் சிறந்தது.

படிப்புகள்:

ஆட்டோகேடை தனியார் கேட் சென்டர்களில், சான்றிதழ் படிப்பாக படிக்கலாம்.

AutoCAD is a commercial computer-aided design (CAD) and drafting software application. Developed and marketed by Autodesk, AutoCAD was first released in December 1982 as a desktop app running on microcomputers with internal graphics controllers.

https://www.autodesk.in/products/autocad/overview...

AutoCAD online courses:

https://www.udemy.com/course/autocad3d/...

https://skill-lync.com/.../autocad-essentials-mechanical...

No comments:

Post a Comment

Gate Exam - Topper's Tips

GATE 2022: தேர்வுக்கு எப்படி தயார் ஆகப் போறீங்க? டாப்பர்ஸின் டிப்ஸ் இதோ! GATE மாதிரி தேர்வுகளை பல பயிற்சி மையங்கள் நடத்தி வருகின்றன. முடிந்...