Welcome

WELCOME to Education++

Wednesday, January 26, 2022

CLAT - Common Law Admission Test


 சட்டப்படிப்புக்கான நுழைவு தேர்வு: கிளாட் (CLAT)


நாடு முழுவதும் உள்ள 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் 40க்கு அதிகமான கல்வி நிறுவனங்களில் சட்டபடிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க CLAT தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.

சட்டபடிப்புகளில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க CLAT-UG தேர்வும், முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க CLAT-PG தேர்வும் நடத்தப்படுகின்றன.

இந்த படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் கல்வித்தகுதியாக இளங்கலை படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பில் 45 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முதுகலை படிப்பான எல்.எல்.எம் படிப்பில் சேர, இளங்கலை எல்.எல்.பி., அல்லது பி.எல் படிப்புகள் படித்திருக்க வேண்டும். மேலும் அதில் 55 சதவிகிதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த நுழைவுத் தேர்வு எழுத அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை. இந்த படிப்புகளில் சேர SC/ST மாணவர்களுக்கு மதிப்பெண்களில் 5 சதவிகித சலுகை வழங்கப்படும்.

தேர்வுக்கான பாடத்திட்டங்கள்:

இந்த நுழைவுத் தேர்வுகளில் ஆங்கில அறிவு, பொது அறிவு, கணிதம், லீகல் ஆப்டிடியூட் மற்றும் லாஜிக்கல் ரீசனிங் போன்றவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். CLAT-UG தேர்வில் மொத்தம் 150 ஆப்ஜெக்டிவ் டைப் கேள்விகளும், CLAT-PG தேர்வில் மொத்தம் 100 ஆப்ஜெக்டிவ் டைப் கேள்விகளும் கேட்கப்படும். இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனுப்ப ஏப்ரல் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இது குறித்த கூடுதல் விவரங்கள் பற்றி அறிய https://consortiumofnlus.ac.in/ இணையதளத்தை பார்க்கலாம்.

இந்த தேர்வுகள் ஜூன் 2022 நடைபெற உள்ளது.

தேர்வு முறை:

ஆங்கில அறிவு, பொது அறிவு, கணிதம், லீகல் ஆப்டிடியூட் மற்றும் லாஜிக்கல் ரீசனிங் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். கிளாட் -யு.ஜி., தேர்வில் மொத்தம் 150 அப்ஜெக்டிவ் வடிவிலான கேள்விகளும், கிளாட் - பி.ஜி., தேர்வில் மொத்தம் 100 அப்ஜெக்டிவ் வடிவிலான கேள்விகளும் இடம்பெறும்.

பங்குபெறும் சிறந்த பல்கலைக்கழகங்கள்:

* நேஷனல் லா ஸ்கூல் ஆப் இந்தியா யுனிவர்சிட்டி, பெங்களூரு

* நல்சார் யுனிவர்சிட்டி ஆப் லா, ஹைதராபாத்

* நேஷனால் லா இன்ஸ்டிடியூட் யுனிவர்சிட்டி, போபால்

* தி வெஸ்ட் பெங்கால் நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் ஜுடிசியல் சயின்ஸ், கொல்கத்தா

* நேஷனல் லா யுனிவர்சிட்டி, ஜோத்பூர்

* ஹிதயத்துல்லா நேஷனல் லா யுனிவர்சிட்டி, ராய்புர்

* குஜராத் நேஷனல் லா யுனிவர்சிட்டி, காந்திநகர்

* டாக்டர் ராம் மனோகர் லோகியா நேஷனல் லா யுனிவர்சிட்டி, லக்னோ

* ராஜீவ் காந்தி நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் லா, பஞ்சாப்

* சாணக்கியா நேஷனல் லா யுனிவர்சிட்டி, பாட்னா

* நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் அட்வான்ஸ்ட் லீகல் ஸ்டடீஸ், கொச்சி

* நேஷனல் லா யுனிவர்சிட்டி, ஓடிசா

* நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் ஸ்டடி அண்டு ரிசர்ச் இன் லா, ராஞ்சி

* நேஷனல் லா யுனிவர்சிட்டி அன்ட் ஜுடிசியல் அகாடமி, அசாம்

* தாமோதரம் சஞ்சிவயா நேஷனல் லா யுனிவர்சிட்டி, விசாகப்பட்டினம்

* தமிழ்நாடு நேஷனல் லா ஸ்கூல், திருச்சி

* மஹாராஷ்டிரா நேஷனல் லா யுனிவர்சிட்டி, மும்பை

* மஹாராஷ்டிரா நேஷனல் லா யுனிவர்சிட்டி, நாக்பூர்

* மஹாராஷ்டிரா நேஷனல் லா யுனிவர்சிட்டி, அவுரங்கபாத்

* ஹிமாச்சல் பிரதேஷ் நேஷனல் லா யுனிவர்சிட்டி, சிம்லா

* தரம்சாஷ்த்ரா நேஷனல் லா யுனிவர்சிட்டி, ஜாபல்பூர்

* டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் நேஷனல் லா யுனிவர்சிட்டி, சோனேபட்

விபரங்களுக்கு: https://consortiumofnlus.ac.in/

No comments:

Post a Comment

Gate Exam - Topper's Tips

GATE 2022: தேர்வுக்கு எப்படி தயார் ஆகப் போறீங்க? டாப்பர்ஸின் டிப்ஸ் இதோ! GATE மாதிரி தேர்வுகளை பல பயிற்சி மையங்கள் நடத்தி வருகின்றன. முடிந்...