Welcome

WELCOME to Education++

Wednesday, January 26, 2022

கிளவுட் கம்ப்யூட்டிங் என்றால் என்ன?


 கிளவுட் கம்ப்யூட்டிங் என்றால் என்ன?


கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing) என்ன என்பதனை மிக எளிமையாக புரிந்துகொள்ள வேண்டுமா? நமது வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை தயாரிப்பதற்கு ஒரு காற்றாலை அல்லது மின்சாரம் தயாரிக்கக்கூடிய ஒரு அமைப்பை நமது வீட்டிலேயே உண்டாக்குகிறோம் என வைத்துக்கொள்வோம். அந்த அமைப்பை உருவாக்கவும் பராமரிக்கவும் ஆகின்ற செலவானது நாம் பயன்படுத்துகின்ற மின்சாரத்தை அரசாங்கம் உள்ளிட்ட வெளி அமைப்புகளில் இருந்து வாங்கினால் பெறுவதற்கு ஆகின்ற செலவை விட மிக மிக அதிகாமாக இருக்கும்.

இதே ஐடியா தான் ஐடி துறையில் கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing) உருவாவதற்கும் மிக முக்கிய காரணம். கூகுள் (Google) போன்ற மிகப்பெரிய கம்பெனிகள் கிளவுட் கம்ப்யூட்டிங் என்ற அமைப்பை உருவாக்குகின்றன. அவை அதிக செயல்திறன் கொண்ட சர்வர்ஸ் (Servers), ஸ்டோரேஜ் (Storage), டேட்டாபேஸ் (database), நெட்வொர்க்கிங் (networking), சாப்ட்வேர் அப்ளிகேஷன் (software application) போன்றவற்றை வழங்குகின்றன. இவற்றை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனில் மிகக்குறைந்த பணத்தை கொடுத்து இன்டர்நெட் (Internet) உதவியுடன் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது தற்போது நாம் பயன்படுத்திக்கொண்டு இருக்கக்கூடிய கணினி மற்றும் அப்ளிகேஷன் முதலியவற்றினை முன்னேறிய வகையில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை குறிக்கின்ற சொல். இன்டர்நெட் உடன் இணைக்கப்பட்டு இருக்கின்ற எந்தவொரு கிளவுட் கம்ப்யூட்டிங் இல் இருக்கக்கூடிய ஸ்டோரேஜ் , அப்ளிகேஷன் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும். மிகப்பெரிய நிறுவனங்கள் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்துக்காக மிகப்பெரிய இடங்களில் கோடிக்கணக்கான எலக்ட்ரானிக் கருவிகளை ஒருங்கிணைத்து அவற்றினை பராமரித்து வருகின்றன.

கிளவுட் கம்ப்யூட்டிங் நன்மைகள்

1. குறைந்த செலவு (Low Cost)

ஒரு இணையதளத்தை உருவாக்க வேண்டுமெனில் அதற்குரிய பைல்களை சேமித்துவைக்க ஸ்டோரேஜ் இடம் தேவை. அதற்காக அதிக செயல்திறன் கொண்ட கணினி மற்றும் ட்ரைவ்களை வாங்கி 24 மணிநேரமும் ON செய்தே வைத்திருப்பதும் அதற்க்கு பராமரிப்பு வேலை செய்வதும் அதிக செலவு மற்றும் வேலைப்பளுவை ஏற்படுத்தும். அதற்கு நீங்கள் மிகப்பெரிய நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் மூலமாக மிகக்குறைந்த விலையில் தேவையான ஸ்டோரேஜ் ஐ வாங்கிக்கொள்ள முடியும்.

2. அதிவேக சேவை (High Speed)

கோடிக்கணக்கான சர்வர்ஸ், அதிவேக தொழில்நுட்பம், குளிர்சாதன வசதி, பராமரிக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கிளவுட் கம்ப்யூட்டிங் இல் இருப்பதனால் அதிவேக சேவையினை உங்களால் பெற முடியும்.

3. நல்ல செயல்திறன் (Performance)

மிகப்பெரிய நிறுவனங்கள் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையினை வழங்குவதற்காக மிகப்பெரிய டேட்டா சென்டர்களை நிர்வகித்து வருகின்றன. அங்கு தற்போதைய தொழில்நுட்ப மேம்பாடுகள் ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேரில் செய்யப்படுகின்றன. நீங்கள் தனியாக டேட்டா சென்டர்கள் வைத்திருக்கும் போது இதனை செய்தால் அதிகம் செலவு ஏற்படும். செய்யாவிட்டால் வேகம் உள்ளிட்டவற்றில் குறைபாடு ஏற்படும்.

4. பாதுகாப்பு (Security)

இணைய பாதுகாப்பு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய நிறுவனங்கள் தாங்களாகவே தங்களுடைய டேட்டா சென்டர்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்திக்கொண்டே இருக்கும். ஆகையினால் உங்களது தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பானதாக இருக்கும்.

கிளவுட் கம்ப்யூட்டிங் எங்கு கிடைக்கும்?

அமேஜான், கூகில், மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்த சேவைக்கான டாட்டா சென்டர்களை நிறுவி, இதன் மூலம் தங்கள் சேவைகளை வழங்குகின்றன.

தற்போது சந்தையில் பிரபலமான சில கிளவுட் சேவைகள் இதோ:

AWS - Amazon Web Services
Microsoft - Azure
Google Cloud
IBM Cloud

https://www.eweek.com/cloud/cloud-service-providers/

கிளவுட் சேவைகளில் என்னென்ன வசதிகள் கிடைக்கும்?

தற்போது கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது வணிக நிறுவனங்களுக்கு இன்றியமையாததாகிவிட்டது. உள்கட்டமைப்பு, சேவைகள், ஹோஸ்ட் பயன்பாடுகள், உள்ளடக்க விநியோக நெட்வொர்க் (CDN), இயந்திர கற்றல், மென்பொருள் மேம்பாட்டைக் கையாளுதல் என, கிட்டத்தட்ட ஒவ்வொரு நிறுவனமும் கிளவுட் கம்ப்யூட்டிங்கினை ஏதோ ஒரு வகையில் பயன்படுத்துகிறது.

1. IaaS - Infrastructure as as Service: ஒரு கம்பெனிக்கு தேவையான கணனி (Hardware) சார்ந்த அடிப்படை வசதிகளை கிளவுட் மூலம் பெறும் வசதி. இவற்றில் பேக்அப் வசதி, ஸ்டோரேஜ் வசதி, சேரிங் போன்றவை அடங்கும்.

2. PaaS - Platform as as Service: கணனி செயல்பட தேவையான இயங்குதளம், அப்ளிகேஷன்ஸ் போன்ற வசதிகளை கிளவுட் மூலம் பெறும் வசதி

3. SaaS - Software as as Service: கணனி அப்ளிகேஷன்களை மட்டும் கிளவுட் மூலம் பெறும் வசதி. உதாரணமாக MS office, email, Adobe software

4. Serverless Service: நிறுவனத்தில் சர்வர் கணனி இல்லாமலே அதனை கிளவுட் மூலம் பெறும் வசதி.

https://azure.microsoft.com/en-in/overview/what-is-iaas/...

AWS எனும் அமேஜான் வெப் சர்வீசஸ்

உலகளவில் அமேசான் வெப் சர்வீசஸ் மான் தற்போது கிளவுட் சேவைகளில் நம்பர்1 உள்ளது. இது பொது மற்றும் கலப்பின (Hybrid) சேவைகள் உட்பட 200க்கும் மேற்பட்ட IaaS, PaaS மற்றும் SaaS கிளவுட் சேவைகளை வழங்குகிறது. இதில் உயர் செயல்திறன் கம்ப்யூட்டிங், எட்ஜ் கம்ப்யூட், இ-காமர்ஸ், கன்டெய்னர்கள், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், மெஷின் லேர்னிங், விர்ச்சுவல் ரியாலிட்டி/ஆக்மென்ட் ரியாலிட்டி மற்றும் சர்வர்லெஸ் கம்ப்யூட் ஆகியவை அடங்கும். AWS 245 நாடுகளில் 81 கிடைக்கும் மண்டலங்களுடன் உள்ளது.

No comments:

Post a Comment

Gate Exam - Topper's Tips

GATE 2022: தேர்வுக்கு எப்படி தயார் ஆகப் போறீங்க? டாப்பர்ஸின் டிப்ஸ் இதோ! GATE மாதிரி தேர்வுகளை பல பயிற்சி மையங்கள் நடத்தி வருகின்றன. முடிந்...