Welcome

WELCOME to Education++

Wednesday, January 26, 2022

நெட்வொர்க் இன்ஜினியரிங்


 நெட்வொர்க் இன்ஜினியரிங்


நெட்வொர்க் இன்ஜினியரிங் என்கிற வலைத்தள பொறியியல் துறை (Network Engineering) என்பது மென்பொருள் அல்லது வன்பொருள் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் கணினிகளுக்கு வலைத்தள இணைப்பை அமைப்பது மற்றும் பராமரிப்பது, வலைத்தள அமைப்புகளில் ஏற்படும் சிக்கல்களை சரி செய்வது போன்றவற்றை நிர்வகிப்பது ஆகும்.

வலைத்தள பொறியியலாளர் (Network Engineer) என்பவர் ஒரு நிறுவனத்தில் உள்ள வலைத்தளங்களை, அமைப்பது, நிர்வகிப்பது மற்றும் அதனை பராமரிப்பது போன்ற பணிகளைச் செய்பவர் ஆவார். இத்தகையவர்களை வலைத்தள வடிவமைப்பாளர்கள் (Network Architects) என்றும் சில நிறுவனங்களில் கூறுவதுண்டு.

பொறியியல் துறையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் துறையில் படித்தவர்களுக்கு வளைத்தல பொறியியலாளர் ஆவதற்கு அடிப்படைத் தகுதி உள்ளது.
ஒரு வலைத்தள வடிவமைப்பாளரின் முக்கிய இலக்கானது நிறுவனத்திற்காக மிகச் சிறந்த முறையில் வலைத்தள கட்டமைப்புகளை அமைத்துக் கொடுப்பதே ஆகும். மேலும் தாங்கள் அமைத்துள்ள வலைத்தள கட்டமைப்புகள் பாதுகாப்புடனும் உயர்ந்த செயல் திறனுடனும் செயல்படுகின்றன என்பதை நிர்வகித்துக் கொள்ளும் முக்கிய பொறுப்பும் வலைதள பொறியியலாளர் ஏற்கவேண்டும். பல்வேறு நாடுகளில் தங்கள் கிளைகளை வைத்திருக்கும் மென்பொருள் அல்லது வன்பொருள் நிறுவனங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் பல வலைத்தள பொறியியலாளர்களைப் பணியில் ஈடுபடுத்தி இருப்பார்கள்.

வலைத்தள பொறியியலாளர் ஆவதற்கு தேவைப்படும் திறன்கள்:

1. வலைத்தள கட்டமைப்பு அமைப்பதற்கு தேவையான திறன்கள்.

2. அமைத்த வலைத்தள கட்டமைப்புகளில் செயல்படும் குரல் சார்ந்த வலைத்தளங்கள்(Voice), தரவு சார்ந்த வலைத்தளங்கள்(Data), காணொளி சார்ந்த வலைத்தளங்கள்(Video), கம்பியில்லா பிணையங்கள் (Wireless Network) போன்றவற்றை முறையே பராமரிப்பது. இவற்றுள் ஏதேனும் சரியாக செயல்படவில்லை என்றால் அதனை விரைவாக மீண்டும் செயல்பட வைக்கும் திறன்கள்.

3. வலைத்தள பொறியியலாளர்கள் ஒரு புதிய வலைத்தளம் அமைக்க வேண்டும் என்றால் அதற்காக புதிய செயல்முறை திட்டம் (Planning) அமைக்க வேண்டும், பின்னர் வடிவமைக்க வேண்டும்(Design), மேலும் வலைத்தளங்களுக்கு தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் (Technical Specifications) எழுதவேண்டும்.

வலைத்தள நிர்வாகிகள்(Network Administrator) என்று ஒரு பிரிவினர் உண்டு. அவர்கள் வலைத்தள பொறியியலாளர்கள் அமைத்த வலைத்தளங்களை நிர்வகிப்பது, தினமும் பராமரிப்பது மற்றும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதனை கண்டறிந்து தீர்த்து வைப்பது போன்றவற்றை பணியாக கொண்டிருப்பார்கள்.

தொழில்நுட்ப திறன்களோடு (Technical skills) , சிறந்த பகுப்பாயும் தன்மை(Analytical skills), தலைமைத்துவம் (Leadership skills) போன்ற தகுதிகளும் வலைத்தள பொறியியல் துறைக்கு அவசியம்.
தற்கால தரவுகளின்படி வலைத்தள பொறியியலாளர்களின் சராசரியான ஆண்டு வருமானம் 46,500 டாலர்கள் முதல் 115,000 டாலர்கள் வரை இருக்கின்றது.

வலைத்தள பொறியியலாளர்கள் ஆவதற்கு கற்க வேண்டிய சான்றிதழ்கள் பின்வருமாறு (ஏதேனும் ஒன்று கற்கலாம்):

சி சி ஐ இ (CCIE - Cisco Certified Internetwork Expert)

சி சி என் பி - (CCNP - A Cisco Certified Network Professional)

ஜே என் சிஐ இ - இ என் டி
கம்ப்டியா நெட்வொர்க்+ (Compatia Network+)

டபிள்யூ சி என் ஏ - (WCNA - Wireshark Certified Network Analyst)

வலைத்தள பொறியியல் துறையில் உள்ள பிரிவுகள்:

நீங்கள் வலைத்தள பொறியியலாளராக வேண்டும் என்றால் முதலில் வலைத்தள பொறியியலில் உள்ள எந்த பிரிவில் உங்களுக்கு ஆர்வம் என்று அறிந்து கொள்ளுங்கள்.

1. வலைத்தள பாதுகாப்பு (Network Security)

2. சேவையக நிர்வகிப்பு (Server Administration)

3. பரந்த பகுதி வலைத்தள மேற்பார்வை(Wifi monitoring)

4. வலைத்தள செயல்பாட்டு மையத்தில் மேற்பார்வை (Network Operation Centre monitoring)

5. கேபிள் மற்றும் கணினியின் உபகரணங்கள் நிறுவல்(Cable and equipment installation)

வலைத்தள பொறியியல் துறையில் உள்ள பிற வேலை வாய்ப்புகள்:

வலைத்தள நிபுணர் (Network Specialist)

வலைத்தள தொழில்நுட்ப வல்லுனர்(Network Technician)

வலைத்தள நிர்வாகி (Network Administrator)

வலைத்தள ஆய்வாளர் (Network Analyst)

வலைத்தள மேலாளர் (Network Manager)

வலைதள பாதுகாப்பு நிபுணர்(Network Security Specialist)

வலைத்தள தீர்வுகள் வடிவமைப்பாளர்(Network Solutions Architect)

கிளவுட் வலைத்தள வடிவமைப்பாளர்(Cloud Network Architect)

வலைத்தள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிபுணர்(Network Research and. Development Specialist)

வை பை வலைத்தள நிபுணர்(Wifi Network Specialist)

தரவு மையத்தின் வலைத்தள நிபுணர்(Data Operation Center Specialist)

மேலும் பல விவரங்களை அறிய கீழுள்ள இணையை சொடுக்குங்கள்.

https://www.fieldenwhat-is-network-engineer-definitiongineer-definition

Network Engineer Jobs | Chegg CareerMatch

படங்கள் : கூகுள்

No comments:

Post a Comment

Gate Exam - Topper's Tips

GATE 2022: தேர்வுக்கு எப்படி தயார் ஆகப் போறீங்க? டாப்பர்ஸின் டிப்ஸ் இதோ! GATE மாதிரி தேர்வுகளை பல பயிற்சி மையங்கள் நடத்தி வருகின்றன. முடிந்...