Welcome

WELCOME to Education++

Wednesday, January 26, 2022

ADOBE PHOTOSHOP


 அடோப் போட்டோஷாப் - ஓர் அறிமுகம்


போட்டோஷாப் - மென்பொருள் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. இன்றைய காலத்தில் கிராபிக்ஸ் செய்ய பயன்படும் அற்புதமான மென்பொருள் அது. பிளக்ஸ் பேனர் (flex Banner) , திருமண பத்திரிக்கைகள், பத்திரிக்கை அட்டை படங்கள், விதவிதமான மணமக்கள் போட்டோக்கள் (The bride's photos) என அனைத்துவித விஷேசங்களுக்கும் எடுக்கப்படும் புகைப்படங்களை மேலும் அழகூட்ட பயன்படும் மென்பொருள் போட்டோஷாப்.

போட்டோஷாப் (Adobe Photoshop) என்பது அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட அடோப் சிஸ்டம்ஸ் இன்கார்ப்பரேட்டட் என்கிற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ‘வரைகலை மென்பொருள்’ ஆகும். 90-களிலேயே இதன் முதல்பதிப்பு (வெர்ஷன் 1.0 ) உருவாக்கப்பட்டது.

இருந்தாலும் பலதரப்பட்ட மக்கள் இதைப்பயன்படுத்தத் தொடங்கியது என்னவோ 2000-களில்தான்.

இப்படி போட்டோஷாப் 5.5,போட்டோஷாப் 6.0, போட்டோஷாப் 7.0 என அடுத்தடுத்தவெர்ஷன்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தகுந்தார்போல் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

போட்டோஷாப் மேக் மற்றும் விண்டோஸ் கணினிகளில் (Mac OS and Windows) இயங்கக்கூடிய ஒரு மென் பொருளாகும்.

போட்டோஷாப் பதிப்பானது சிஎஸ் என்கிற க்ரியேட்டிவ் சூட் பதிப்புகளைத் தாண்டி போட்டோஷாப் சிசி பதிப்புகள் வரத் தொடங்கிவிட்டன.

இப்போது கடைசியாக வெளியானது போட்டோஷாப் சிசி 2020 ( வெர்ஷன் 23.1).

சரி, இவ்வாறு அப்டேட் செய்யப்படும் வெர்ஷன்களால் அதைக் கற்பது சவாலாக இருக்கும் என்று நினைத்துநாம் பயப்படத் தேவையில்லை. நமக்குத் தேவை போட்டோஷாப்பின் அடிப்படையான திறன்கள் என்ன? அதை எப்படி நாம் எளிதாகக் கற்கலாம்? என்பதே.

போட்டோஷாப் பற்றி ஓரளவுதெரிந்துகொண்டாலே உங்களுக்குள் அது கூடுதலாக ஒரு திறமையைக் கொண்டுவந்துவிடும். அதில் இன்னும்கொஞ்சம் இறங்கிக் கற்றால்,ஏகப்பட்ட வேலைவாய்ப்புகளை உங்களுக்கு நிச்சயமாக உருவாக்கிவிடக்கூடும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்த மென்பொருள் ஏதோ போட்டோகிராஃபர்களுக்காகமட்டுமே என்றே பலரும் நினைக்கின்றனர். அது தவறு.

தொழில்ரீதியிலான ஒரு புகைப்படக்காரர், கிராஃபிக் டிசைனர், லே அவுட் டிசைனர்,வீடியோ கேம் உருவாக்குபவர், அனிமேஷன் படங்களைத் தயாரிப்பவர், விளம்பரப் பதாகைகளைத் தயாரிப்பவர், ஓவியர், காமிக்ஸ் உருவாக்குபவர் என இந்தமென்பொருளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும்நீளமானது. எனவே இந்தபோட்டோஷாப்பை அனைத்துஇளைஞர்களும் ஓர் எஸ்ட்ராகரிக்குலர் ஆக்டிவிட்டியாக கற்றுக்கொள்வதில் நிறைய நன்மைகளே உள்ளன. அதைஅடுத்த வாரம் முதல் நாம் கற்கத் தொடங்கலாம்!

போட்டோ ஸ்டுடியோ (Photo Studio) வைத்துள்ள நண்பர்கள், போட்டோ கிராபர்கள், செல்போனில் படம் எடுப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் போட்டோஷாப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதில் அடிப்படையான இன்னும் நிறையபேர் பயன்படுத்துவது போட்டோஷாப் 7.0.

சாதாரண பாஸ்போர்ட் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றாலும் ஸ்டுடியோவில் பயன்படுத்துவது போட்டோஷாப் மென்பொருள்தான்.


அப்படிப்பட்ட போட்டோஷாப் 7 மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.

அதைப் பயன்படுத்துவதும் மிக எளிதுதான்.

போட்டோஷாப் டுடோரியல்

லட்சக்கணக்கான போட்டோஷாப் டுடோரியல்கள் (Photoshop Tutorials) இணையத்தில் உள்ளன. வீடியோ டுடோரியல்கள், PDF பைல்கள், வெப்சைட் டுடோரியல்கள் என பல விதங்களில் போட்டோஷாப் கற்றுக்கொள்ள டுடோரியல்கள் உண்டு. டுடோரியல்கள் மூலம் மிக விரைவாக போட்டோஷாப் கற்றுக்கொள்ள முடியும்.

வெப்சைட்டில் உள்ள கட்டுரைகள் மூலமும் போட்டோஷாப் கற்றுக்கொள்ள முடியும். படித்து உணர்ந்து அதில் கொடுத்துள்ள செயல்முறைகளை அப்படியே செய்தால், ஆச்சர்யமான போட்டோ டிசைன்கள், கிராபிக்ஸ்களை நீங்களே செய்து முடிக்க முடியும்.

ஆன்லைன் போட்டோ டிசைன் டூல்கள்

தற்காலத்தில் மிக விரைவாக ஒரு போட்டோவிற்கு பேக்ரவுண்ட்மாற்றுவது,போட்டோ ஸ்டைல் மாற்றுவது, விதவிதமான கிராபிக்ஸ் (Graphics) செய்வது என வசதிகள் வந்துவிட்டன.

அதற்கென பலதரப்பட்ட இணையதளங்கள் அந்த சேவைகளை வழங்குகின்றன. ஆன்லைன் போட்டோ டிசைன் டூல்கள் என அழைக்கபடும் அந்த வசதிகள் ஒரு சில கிளிக்குகளில் செயல்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

போட்டோஷாப் போன்ற மென்பொருட்கள் (Similar softwares)

போட்டோஷாப்பில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட வசதிகளை மட்டும் உள்ளடக்கிய சிறு சிறு மென்பொருட்கள் (Portable Photo Edit software) எண்ணிக்கையில் அதிகம் உள்ளன. உதாரணமாக போட்டோவை ரீசைஸ் (Resize) செய்வது, போட்டோவின் பிக்சல் (Pixel) அளவை குறைப்பது, இன்வர்ட் செய்வது போன்ற பயன்பாடுகளை கொண்டிருக்கும்.

ஸ்மார்ட்போன் பில்டர் ஆப்ஸ்கள்

போட்டோக்களை வித விதமாக மாற்றுவதற்கு ஆன்ட்ரோய்ட் ஆப்ஸ்கள் (Android Photo App) நிறைய வந்துவிட்டன. ஸ்மார்ட்போனில் எடுக்கப்படும் படங்களை உடனுக்குடன் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் பில்டர் ஆப்சன்களை பயன்படுத்தி அழகூட்ட முடியும்.

முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குவது, முகத்தை பளபளப்பாக மாற்றுவது, ரெட் ஐ ரீமூவல் (Red Eye Removal) , லிப்ஸ்டிக் பூசுவது, கண்களின் பிரைட்னஸ் அதிகமாக்குவது என நிறைய வசதிகள் அதிலேயே உள்ளடங்கி வந்துவிட்டது.

வேடிக்கையான போட்டோ பில்டர்கள்:

ஆன்லைன் வசதிகளிலும் சரி, ஆன்ட்ராய்ட் ஆப்களிலும் சரி, முகத்தின் தன்மையை மாற்றக்கூடிய ஆப்ஸ்கள், பயன்பாடுகள் நிறைய வந்துவிட்டன.

ஒருவரின் முகத்தை வயதான தோற்றத்தில் எப்படி இருக்கும் என்பதை மாற்றிட முடியும். பெண் தோற்றத்தில் (face look) எப்படி காட்சியளிக்கும் என மாற்ற முடியும். சினிமா கேரக்டர்களில் மாற்ற முடியும், ஓவியமாக மாற்ற முடியும், 3D படமாக மாற்ற முடியும். இப்படி கணக்கிலடங்கா வசதிகள் வந்துவிட்டன.

இப்படிப்பட்ட வசதிகள் அருமையாக இருக்கும். இருப்பினும் அனைவருக்கும் அது திருப்தியை தருமா என்றால், நிச்சயமாக இருக்காது. ஏனெனில் அவர்கள் விரும்பும் தனிப்பட்ட விஷயத்தை அதுபோன்ற ஆப்ஸ்களால் கொடுக்க முடியும்.

அதற்கு ஒரே வழி போட்டோஷாப் மென்பொருள்தான். தனிப்பட்ட முறையில், மிகச் சிறப்பாக கற்பனைக்கு ஏற்றவாறு போட்டோக்களை மாற்றிட பயன்படும் ஒரு மென்பொருள் உண்டென்றால் கண்டிப்பாக அது Adobe Photoshop மென்பொருள் தான். போட்டோஷாப் அடிப்படைகளை கற்றுக்கொள்ள மிக மிக எளிதாக இருக்கும் மென்பொருள் Adobe Photoshop தான்.

- வெங்கி

கூடுதல் தகவல்களுக்கு:

https://www.adobe.com/products/photoshop.html

https://en.m.wikipedia.org/wiki/Adobe_Photoshop 

No comments:

Post a Comment

Gate Exam - Topper's Tips

GATE 2022: தேர்வுக்கு எப்படி தயார் ஆகப் போறீங்க? டாப்பர்ஸின் டிப்ஸ் இதோ! GATE மாதிரி தேர்வுகளை பல பயிற்சி மையங்கள் நடத்தி வருகின்றன. முடிந்...