புருனே (புரூணை) அரசு தாருஸ்ஸலாம் உதவித்தொகை 2022
புருனே பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
புருனே போர்ணியோத் தீவில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இது வடக்கில் தென் சீனக் கடலாலும் ஏனைய பக்கங்களில் மலேசியாவின் சறவாக் மாநிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. சுல்தான்களால் ஆளப்படும் இந்நாடு 1984 சனவரி 1 இல் ஐக்கிய இராச்சியத்திடமிருந்து (UK) முழுச் சுதந்திரம் பெற்றது.
தலைநகரம்: பண்டர் செரி பெகவன்
ஆட்சி மொழி: மலாய்
அரசாங்கம்: இசுலாமிய சுல்த்தானிய முடியாட்சி
படிப்புகள்:
டிப்ளமோ, இளநிலை பட்டப்படிப்புகள், முதுநிலை பட்டப்படிப்புகள்.
கல்வி நிறுவனங்கள்:





தகுதிகள்: இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமா படிப்புகளில் சேர்க்கை பெற 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற 35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
மேலும், படிப்புகள், கல்வித்தகுதிகள் குறித்த விரிவான தகவல்களுக்கு அந்தந்த கல்வி நிறுவனங்களின் இணையதளத்தை பார்க்கலாம்.
உதவித்தொகை
விபரம்:
கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம், புருனே சென்றுவர விமானச் செலவு, மாதம் சுமார் ரூ.27,500, உணவு செலவினங்களுக்கு மாதம் சுமார் ரூ.8 ஆயிரம், புத்தகங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ. 33 ஆயிரம் உட்பட பல்வேறு சலுகைகள் இந்த உதவித்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
உரிய ஆவணங்களுடன் http://www.mfa.gov.bn/Pages/bdgs/bdgs2022.aspx எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்தபின் பதிவிறக்கம் செய்து, பிறப்பு சான்றிதழ் நகல், பாஸ்போர்ட் நகல், கல்லூரி / பல்கலைக்கழக சான்றிதழ் நகல், காவல்துறை சரிபார்ப்பு சான்று போன்ற ஆவணங்களுடன் es3.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 10
Brunei is a tiny nation on the island of Borneo, in 2 distinct sections surrounded by Malaysia and the South China Sea. It's known for its beaches and biodiverse rainforest, much of it protected within reserves. The capital, Bandar Seri Begawan, is home to the opulent Jame’Asr Hassanil Bolkiah mosque and its 29 golden domes. The capital's massive Istana Nurul Iman palace is the residence of Brunei’s ruling sultan.
Capital: Bandar Seri Begawan
Currency: Brunei dollar
No comments:
Post a Comment