Welcome

WELCOME to Education++

Wednesday, January 26, 2022

Amazon Scholarship

                   உலகின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் 'ப்யூச்சர் இன்ஜினீயர்' என்ற பெயரில் தகுதியுடைய மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்குகிறது.

கணினி சார்ந்த படிப்பை ஊக்குவிக்கவும் அந்தத் துறையில் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டவும் அமேசான் முன்வந்திருக்கிறது. வருடத்திற்கு ரூ.40,000/- என நான்கு வருடங்களுக்கு ரூ.1,60,000/- தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் கல்வி உதவி தொகை பெறலாம். யார் இந்த ஸ்காலர்ஷிப்புக்கு தகுதியுடையவர்கள்?
1.) பி.இ/ பி.டெக் முதலாம் ஆண்டு மாணவர்கள் மட்டும் இந்த ஸ்காலர்ஷிப்க்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் கீழ்கண்ட ஏதேனும் ஒரு துறையில் பயில்பவர்களாக இருக்க வேண்டும்,
Computer Science And Engineering
Information And Communication Technology
Information Science
Information Science And Engineering
Information Technology
2.) தங்களுடைய உயர்நிலை கல்வியை 2019 க்கு பிறகு நிறைவு செய்தவராக இருக்க வேண்டும். (டிப்ளமோ மாணவர்களுக்கு இந்த ஸ்காலர்ஷிப் கிடையாது)
3.) குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
4.) பெண்கள் மற்றும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தங்களுடைய கரியரை அமைத்துக்கொள்ள அமேசான் வல்லுநர்களால் வழிகாட்டுதலும் அமேசானில் இன்டர்ன்ஷிப் பெறும் வாய்ப்பும் இந்த மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தரப்படும் என அமேசான் தெரிவித்துள்ளது.
இந்த ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 31. மார்ச் 31-ல் தேர்வு பெற்ற மாணவர்கள் அறிவிக்கப்படுவர். முதற்கட்டமாக 200 மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும். பின்னர் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என அமேசான் இணையதளம் தெரிவிக்கிறது.
விண்ணப்பிக்க: இணையதள முகவரி https://ffe.org/amazon-future-engineer/
நன்றி : விகடன்

No comments:

Post a Comment

Gate Exam - Topper's Tips

GATE 2022: தேர்வுக்கு எப்படி தயார் ஆகப் போறீங்க? டாப்பர்ஸின் டிப்ஸ் இதோ! GATE மாதிரி தேர்வுகளை பல பயிற்சி மையங்கள் நடத்தி வருகின்றன. முடிந்...