Welcome

WELCOME to Education++

Wednesday, January 26, 2022

UPSC Engineering Exam


 இந்திய பொறியியல் பணி தேர்வுகள்

Engineering Services Examination (ESE/IES)

மத்திய அரசின் பாதுகாப்பு துறை , தொலை தொடர்பு துறை, மின் உற்பத்தி துறை, ரயில்வே துறை போன்ற பல்வேறு அரசு துறைகளில் பொறியியல் சார்ந்த அதிஉயர் பதவிகளில் சேர UPSC ஆண்டு தோறும் IES (Indian Engineering Service) என்ற தேர்வை நடத்துகின்றது. இது மத்திய அரசு பணியில் IAS, IPS-க்கு இணையான தரத்தில் உள்ள தேர்வாகும். இதற்க்கு பொறியியல் (B.E / B.Tech) படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய தேர்வாணையக் கழகத்தினால், பொறியியல் துறை சேவைத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வு இயந்திரவியல், சிவில்,மின்னியல் மற்றும் மின்னணுவியல், தொலைத் தொடர்பு பொறியியல் (Electronics and Telecommunication) ஆகிய நான்கு துறைகளில் உள்ள மத்திய அரசு பணிகளுக்காக நடத்தப்படுகிறது.
பொறியியல் துறை சேவைத் தேர்வில் கலந்து கொள்ள ஒரு பொறியியல் பட்டமோ அல்லது அதற்கு இணையான AMIE போன்ற தகுதியோ வேண்டும். ஒரு சில பதவிகளுக்கு மின்னணுவியல், கம்பியில்லா தகவல் தொடர்பு (Wireless Communication), வானொலி பொறியியல் (Radio Engineering), வானொலி இயற்பியல் (Radio Physics) போன்றவற்றில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 30, பின்தங்கிய வகுப்பினர், தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்குத் தகுந்த வயது வரம்பு தளர்வு உண்டு.

இந்த தேர்வு மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் நிலை (Stage I) கொள்குறி வகையைச் (Objective Type) சார்ந்திருக்கும். இதில் இரண்டு தாள்கள் இருக்கும். முதல் தாள் பொது பொறியியல் (General Engineering). இது எல்லா மாணவர்களுக்கும் பொதுவானது. இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ள இத்தாளின் மதிப்பெண் 200 ஆகும்.
இரண்டாவது தாளானது குறிப்பிட்ட பொறியியல் துறையைச் (இயந்திர இயல், மின்னியல் போன்றவை) சார்ந்தது. இதற்கு மூன்று மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது இத்தாளின் மதிப்பெண் 300 ஆகும். மேலே குறிப்பிட்டவாறு இந்த இரண்டு தாள்களும் கொள்குறி வகையைச் சார்ந்தன. மொத்த மதிப்பெண்கள் 500 ஆகும்.

முதன்மைத் தேர்வு (Main Examination) என்றழைக்கப்படும் இரண்டாம் நிலைத் (Stage II)தேர்வில் கட்டுரை வடிவில் (Conventional Type) இரண்டு தாள்கள் இருக்கும். மூன்று மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ள இத்தாள் ஒவ்வொன்றுக்கும் மொத்த மதிப்பெண்கள் 300 ஆகும். ஆக இரண்டாம் நிலைக்கு ஓதுக்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் 600 ஆகும். இவ்விரண்டு தாள்களும் குறிப்பிட்ட பாடத்தோடு தொடர்புடைய தேர்வாகும்.

மூன்றாம் நிலை (Stage III) என்று கருதப்படும் நேர்முகத்தேர்வு 200 மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. ஆக பொறியியல் துறைத் தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 1,300 ஆகும்.
பொறியியல் சேவைத் தேர்வு, மத்திய அரசைச் சார்ந்த கிட்டத்தட்ட 30 சேவைகளுக்காக நடத்தப்படுகிறது. எப்படி பொது நிர்வாகத்திற்கு (Generalist) சிவில் சர்வீஸஸ் தேர்வு மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறதோ, அதே போல் தொழில் சார்ந்த (Technical) அல்லது குறிப்பிட்ட துறை சார்ந்த (Specialists) சேவைகளுக்கு மத்திய தேர்வாணையக் கழகத் தேர்வுகளில் மிக உயர்ந்ததாகக் கருதப்படுவது பொறியியல் சேவைத் தேர்வு ஆகும்.

எடுத்துக்காட்டாக, ரயில்வேயில் உள்ள முதல்நிலை சேவைகளில் Indian Railway Traffic Service, Indian Railway Personnel Service, Indian Railway Accounts Service, Railway Protection போன்ற பணிகளுக்கு, முதல்நிலை அதிகாரிகளை சிவில் சர்வீஸஸ் மூலமாக தேர்ந்தெடுக்கிறார்கள்.
அதுபோல Indian Railway Service of Mechanical Engineers (IRSME), Indian Railway Service of Electrical Engineers (IRSEE), Indian Railway Store Supply Service (IRSSS) போன்ற சேவைகளுக்கு முதல்நிலை அதிகாரிகளை (Group I Officers) பொறியியல் சேவைத்தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கிறார்கள்.
சிவில் சர்வீஸஸ் தேர்வில் வேலை பெறுபவர்களைப் போல் இவர்களுக்கும் இணையான பதவி உயர்வுகள் கிடைக்கும்.

மத்திய தேர்வாணையக் கழகம் நடத்தும் பல்துறை சார்ந்த தேர்வுகளில் மிக அதிகமாக பதவி இடங்கள் உள்ள தேர்வுகளில் பொறியியல் சேவைத் தேர்வும் ஒன்றாகும். சிவில் சர்வீஸஸ் தேர்வில் கிட்டத்தட்ட முப்பதுக்கு மேற்பட்ட பாடங்களில் சிறந்து விளங்குவோர் பங்கேற்பார்கள். இவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெறுவதென்பது சற்று கடினமான செயலாகும். ஆனால் பொறியியல் சேவைகள் தேர்வில் அத்துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத முடியும். ஒரு சில பதவிகளுக்கு மட்டும் சில குறிப்பிட்ட பிரிவுகளைச் சார்ந்த முதுகலை அறிவியல் பட்டதாரிகள் கலந்து கொள்ள முடியும்.

சிவில் சர்வீஸஸ் தேர்விற்கு பல்வேறு துறைகளிலும் பரந்த, நுணுக்கமான அறிவு தேவை. ஆனால், பொறியியல் சேவை தேர்விற்கு சிவில், இயந்திரவியல், மின்னியல், மின்னணு மற்றும் தொடர்புத்துறை போன்றவற்றில் ஏதாவது ஒன்றில் ஆழ்ந்த அறிவு இருந்தால் போதும், வெற்றிக்கனியை எட்டிப் பறிக்க முடியும்.

2022 தேர்வு

விண்ணப்ப தொடக்கம்: ஏப்ரல் 2022

முதல்கட்ட தேர்வு: ஜூலை 2022

முதன்மை தேர்வு: அக்டோபர் 2022

தமிழகத்தில் சென்னை, மதுரையில் தேர்வு நடைபெறும்.

IES தேர்வை பற்றிய முழு விபரங்களுக்கு: https://www.upsc.gov.in

••••
Engineering Services Examination(ESE/IES)
Indian Engineering Services remains the most sought-after career for the engineering graduates in India. Engineering Services Examination commonly known as ESE is conducted annually by UPSC to recruit engineers in four domains such as Civil, Mechanical, Electrical, Electronics & Telecommunications for the techno –managerial posts. The examination constitutes a two-stage written examination followed by an interview. ESE is considered as one of the toughest examinations in India due to fewer posts and tough competition. Owing to highly competitive selection procedure, IES officers carry high respect and status and are mandated to manage and execute activities in diverse technical and managerial fields.
These candidates after the final selection are posted in various Ministries and Departments of GOI such as Railways, Telecom, Border Roads, CPWD, CWC, CPES, NHAI, Naval Armaments, IDSE, MES, Ordnance Factories etc., however, the selected candidates can move to any cadre, organisation, agency, department, ministry and PSU of the Government of India. All these final selected candidates are designated as class-1 officers.

More details:

https://prepp.in/ies-exam/ies-2021

https://studygrades.com/upsc-ies/amp/

No comments:

Post a Comment

Gate Exam - Topper's Tips

GATE 2022: தேர்வுக்கு எப்படி தயார் ஆகப் போறீங்க? டாப்பர்ஸின் டிப்ஸ் இதோ! GATE மாதிரி தேர்வுகளை பல பயிற்சி மையங்கள் நடத்தி வருகின்றன. முடிந்...