Welcome
Showing posts with label IT. Show all posts
Showing posts with label IT. Show all posts
Wednesday, January 26, 2022
Computer Courses
காலத்தின் தேவை... கம்ப்யூட்டர் படிப்புகள்!
நவீனம் என்ற முறையில் இன்று அனைத்துத் துறைகளும் கணினிமயமாகிவிட்டன. இதனால் கணினி படிப்புகளுக்கும் சமீப காலத்தில் அதிகமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. எந்தவொரு துறையானாலும் எந்தவொரு வேலையானாலும் கணினி தொடர்பின்றி எதுவும் இல்லை என்ற நிலை வந்துவிட்டது. வேலையை எளிதாகச் செய்யவும் தரவுகளைச் சேமித்து அதனை நொடிப்பொழுதில் பயன்படுத்தவும் கணினிமயம் அவசியமே.
அந்தவகையில், அனைத்து நிறுவனங்களும் தங்கள் துறைகளில் சமீபத்திய தொழில்நுட்பங்களைத் தெரிந்தவர்களையே வேலைக்கு அமர்த்துவதில்
முன்னுரிமை கொடுத்து வருகின்றன.
தொழில்நுட்பங்களிலும் தொடர்ந்து வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருப்பதால் மிகவும் வேகமாக அவற்றை நாம் கற்றுக் கொள்ள வேண்டியதுஅவசியமாகிறது.
இனி வரும் காலங்களில் இளைஞர்கள் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய கணினி தொடர்பான முக்கிய படிப்புகள் எவை என்று பார்ப்போம்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியரிங் வரும் காலத்தில் இன்னும் கணினிமயமாகும் சூழலில் கண்டிப்பாக ஐடி துறை மேலும் வளர்ச்சி காணும் வாய்ப்பு அதிகம். வளர்ச்சி இல்லை எனினும் இதே நிலையிலாவது இருக்கும். எனவே, பொறியியல் படிக்க விரும்புபவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ்என்ஜினியரிங் படிப்பைத் தேர்வு செய்யலாம். இது 4 ஆண்டு இளங்கலைப் பட்ட படிப்பாகும். வன்பொருள், மென்பொருள், நெட்வொர்க்கிங், கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது இந்தப் படிப்பு.
அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் உள்ள இந்த படிப்பை ஐஐடி போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் படிக்க விரும்பினால் ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும்.
டேட்டா சயின்ஸ்டிஜிட்டல்மயமாக்கலின் ஒரு முக்கியமான வேலை, தரவுகளைச் சேமித்து வைப்பது. அத்துடன் தேவைப்படும் தரவுகளை, தேவைப்படும் நேரத்தில் தரவிறக்கம் செய்வது.
அனைத்துத் துறைகளும் தற்போது தரவுகளைகணினியில்/ஆன்லைனில் சேமித்து வைப்பதாலும்தரவுகளின் அளவு அதிகரித்து வருவதாலும் வரும் காலத்தில் டேட்டா சயின்ஸ் படிப்புக்கான தேவைஇன்னும் அதிகரிக்கும்.
இந்தப் படிப்பின்கீழ், பகுப்பாய்வு, மாடலிங், தரவு காட்சிப்படுத்துதல், இயந்திர கற்றல் உள்ளிட்டவை பற்றி படிக்கலாம். படிப்பை முடித்த பிறகு, பகுப்பாய்வு மேலாளர், தரவு ஆய்வாளர், புள்ளியியல் நிபுணர் போன்ற பணிகள் காத்திருக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தகவல் தொழில்நுட்பம், வங்கிகள் என அனைத்து துறைகளிலும் வேலைகளிலும் இன்று ஆன்லைனில் ஒரே நேரத்தில் அனைவரும் கையாளக் கூடிய விஷயங்கள் அனைத்துக்கும் காரணம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் வரைபடிப்புகள் உள்ளன. பட்டயப் படிப்பு முடித்தவர்கள், சான்றிதழ் படிப்புகளையும் படிக்கலாம்.
நிரலாக்கம், இயற்கணிதம், புள்ளியியல்,அல்காரிதம் மற்றும் தொழில்நுட்பத்தில் சிக்கலைத்தீர்க்கும் நுட்பங்கள் குறித்த படிப்பு. பெங்களூருமற்றும் ஹைதராபாத்தில் இதற்கென தனித்துவம் பெற்றகல்லூரிகள் உள்ளன.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் - எஸ்இஓடிஜிட்டல்
மார்க்கெட்டிங் என்பது எஸ்இஓ எனப்படும் சர்ச் என்ஜின் ஆப்டிமேஷன் பணியையும்உள்ளடக்கியது. தங்கள் நிறுவனங்களின் இணையதளங்கள் எந்த அளவுக்கு மக்களைச் சென்றடைந்துள்ளன, கூகுள் தேடலில் முன்னுரிமை கிடைக்க வழிகள், சமூக வலைதளங்களில் மார்க்கெட்டிங் உள்ளிட்டதகவல்களைத் தெரிந்து கொள்ள இந்தப் படிப்பு உதவும்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறைக்குச் செல்பவர்கள் கண்டிப்பாக இது குறித்த அடிப்படை அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.
கணினிமயமாக்கலில் எஸ்இஓ பணிகளுக்கான வேலைவாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. எனினும் புதிதாக பணியைத் தொடங்குபவர்கள் அதிக
ஊதியத்தை எதிர்பார்க்க முடியாது.
நெட்வொர்க் அண்ட் சைபர் செக்யூரிட்டி
எந்தவொரு துறை வளர்ச்சி அடைகிறதோ அந்தஅளவுக்கு அச்சுறுத்தல்களும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் முழுக்க முழுக்க தொழில்நுட்பங்கள் மூலமாக இயங்கும் கணினியில் அதே மாதிரியானமற்றொரு தொழில்நுட்பம் மூலமாக பாதுகாப்புஅச்சுறுத்தல்களும் வரும். எனவே, வேறு யாரும் நமது தரவுகளை பயன்படுத்தா வண்ணம் பாதுகாக்கவே நெட்ஒர்க் அண்ட் சைபர் செக்யூரிட்டி படிப்புகள் பயன்படுகின்றன.
பாதுகாப்பான ஆன்லைன் பரிவர்த்தனைகள் முதல் ஆன்லைன் வணிகம் வரை அனைத்தும் இதில்அடங்கும். இதற்கான ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளும் தற்போது அதிகம் இருக்கின்றன.
மொபைல் அப்ளிகேஷன் டெவலப்மெண்ட்
செல்லிட பேசிகளின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், பயனர்கள் எளிதாகப் பயன்படுத்தும் பொருட்டும், ஆன்லைன் தளங்களைப் போலவே செல்லிட பேசிகளுக்கான செயலிகளும் அதிகரித்துவிட்டன. செல்லிட பேசியில் பயன்படுத்துவதெற்கென பிரத்யேகமாக செயலிகள் வடிவமைக்கப்படுகின்றன.
"அப்ளிகேஷன் டெவலப்பர்' எனும் இந்த பணியில் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் போன்ற ஓ.எஸ். தொழில்நுட்பங்களில் இணையதளங்களுக்கான செயலிகளை வடிவைமைக்க வேண்டும்.
இதற்காக சி, சி++, ஜாவா போன்ற கணினி மொழிகளை அறிந்திருக்க வேண்டும். கணினி அறிவியல் தொடர்பான ஒரு பட்டப்படிப்பை முடித்த பின்னர்தனியார் கல்வி நிறுவனங்களில் இந்த படிப்பைபடிக்கலாம்.
வெப் டிசைனிங் அண்ட் டெவலப்மென்ட்
வணிக நிறுவனங்களுக்காகவோ தனிப்பட்ட பயன்பாட்டுக்காகவோ ஓர் இணையதளத்தை உருவாக்கும் வேலையே வெப் டிசைனிங் அண்ட் டெவலப்மென்ட் . மொபைல் செயலிகளுக்கே அடித்தளமாக இருப்பவை இணையதளங்களே.
சிறு, குறு தொழில் செய்வோரும் தங்கள் பொருள்களை ஆன்லைனில் விளம்பரப்படுத்த, விற்க இணையதளங்கள் அவசியம். எனவே, வரும் காலத்தில் வெப் டிசைனிங் அண்ட் டெவலப்மென்ட் படிப்பின் தேவை அதிகமாகவே இருக்கும். இதற்காக பிஎச்பி, பைதான், ஏஎஸ்பி.நெட், ஜாவா, அடோப் போட்டோஷாப் போன்றவற்றைப் படிக்க வேண்டும். கணினி அறிவியல் தொடர்பான பட்டப்படிப்பு முடித்து இதனையும்சான்றிதழ் படிப்பாக முடித்திருக்க வேண்டும்.
விஃஎப்எக்ஸ் அண்ட் அனிமேஷன்
ஆன்லைன் கேமிங் துறை, 3டி தொழில்நுட்பம் ஆகியவற்றில் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் அனிமேஷனின் பயன்பாடு பெரிதும் முக்கியமானது. இதற்காக விஎப்எக்ஸ் மற்றும் அனிமேஷன் படிப்புகளை முடித்த பின்னர் மாயா, அடோப் போட்டோஷாப் மற்றும் சினிமா 4டி ஆகியவற்றைப் பயன்படுத்துவது உங்கள் திறமைகளை வளர்க்க உதவும்.
இது தொடர்பான டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.
கம்ப்யூட்டர் ஹார்ட்வேர்
ஒரு மென்பொருள் இயங்க கணினி சரியானநிலையில் இருக்க வேண்டும். தரவுகளை செயல்படுத்தும் மதர்போர்டுகள், சேமித்து வைக்கும் ஹார்ட் டிஸ்க்குகள் என கணினியின் செயல்பாடுகளைக் கண்காணித்து சரி செய்யக் கூடிய பணியைச் செய்ய விரும்புபவர்கள், பட்டப்படிப்பை முடித்த பிறகு கணினிவன்பொருள் படிப்பை முடிக்க வேண்டும். குறைந்தது 6 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை படிக்க வேண்டியதிருக்கும்.
டேலி அண்ட் எம்எஸ் ஆபீஸ்
எம்எஸ் ஆபீஸ் என்பது கணினியில் வேலை செய்வதற்கான அடிப்படை அறிவாகும். அதுபோன்று அக்கவுண்ட்ஸ் பணிகளைச் செய்வதற்கு அவசியம் டேலி படிக்க வேண்டும்.
அதிகபட்சமாக மூன்று மாதங்களில் கற்றுக்கொள்ளலாம். பட்டப்படிப்பு முடித்த பின்னர் இந்த பயிற்சிகளையும் கற்றுக் கொண்டால் எளிதாக வேலைகிடைக்கும்.
- இளைஞர்மணி
Digital Marketing
இணையவழி சந்தைப்படுத்துதல்... புதிய உத்திகள்!
இணையவழியில் சந்தைப்படுத்துதல் (டிஜிட்டல் மார்க்கெட்டிங்) தற்போது மிகவும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள் ஆகியவற்றின் வாயிலாகப் பொருள்களையும் சேவைகளையும் விளம்பரப்படுத்துவதே இதற்கு முன்பு அதிகமாக இருந்து வந்தது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தற்போது இணையத்தில் செலவிடும் நேரம் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகஇணையவழி சந்தைப்படுத்துதல் அதிகமாகி வருகிறது.
நிறுவனங்களும் இணையவழி விளம்பரப்படுத்துதலை அதிகப்படுத்தி வருகின்றன. யூ டியூப், கூகுள்உள்ளிட்டவற்றிலும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் விளம்பரங்கள் அதிகமாகி வருவதைக் காண முடிகிறது. செய்தி ஊடக நிறுவனங்களின் வலைதளங்கள் உள்ளிட்டவற்றிலும் கூட விளம்பரங்கள்தனியிடம் பெறுகின்றன.
பல்வேறு வழிகளில் தற்போது இணையவழிச்சந்தைப்படுத்துதல் வளர்ந்துள்ளது. எத்தகைய நிறுவனங்களாக இருந்தாலும், இணையவழியில் விளம்பரப்படுத்தாவிடில் அந்நிறுவனம் இளைஞர்கள் உள்ளிட்டோரைச் சென்றடைய முடிவதில்லை. எனவே, இணையவழி சந்தைப்படுத்துதலில் நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
பல்வேறு காரணங்களால் இணையவழி விளம்பரப் படுத்துதல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. முதலில் அதிக எண்ணிக்கையிலான நபர்களை இணையவழியில் சென்றடைய முடிகிறது. தற்போது இளைஞர்களில் பெரும்பாலானோர் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களைத் தொடர்பு கொள்வதற்கு இணையமே சிறந்த வழியாக உள்ளது. எனவே, இணையவழி சந்தைப்படுத்துதல் மூலமாக அவர்களைக் கவர்வது எளிதாகிறது. மற்ற வழக்கமான சந்தைப்படுத்துதல் முறைகளை விட இணையவழி விளம்பரப்படுத்துதலில் கூடுதல் நபர்களைச் சென்றடைய முடிகிறது.
மேலும் இணையவழி சந்தைப்படுத்துதல் முறையில் செலவு குறைவாக உள்ளது. மரபு வழியான விளம்பர நடைமுறைகளில் செலவு அதிகமாக உள்ளது. அதுவே இணையவழியில் விளம்பரத்தின் செலவு குறைவாக உள்ளது.
விளம்பரங்களால் யார் அதிகமாக ஈர்க்கப்படுகிறார்கள்? எந்த நேரத்தில் விளம்பரம் அதிகமாகப் பார்க்கப்படுகிறது உள்ளிட்டவற்றை இணையவழியில் எளிதில் கண்காணிக்க முடியும். அதன் மூலமாக விளம்பரப்படுத்துதலை மேலும் வலுப்படுத்த முடியும். இந்த வசதி மரபு வழி விளம்பரங்களில் இல்லை.
இணையவழி விளம்பரங்கள் மூலமாக வாடிக்கையாளர்களை எளிதில் கவர முடிகிறது. விளம்பரத்தைக் காணும் வாடிக்கையாளர்கள், அப்பொருளையோ
அல்லது சேவையையோ உடனடியாக இணையவழியிலேயே வாங்கும் முயற்சிகளை மேற்கொள்வார்கள். எனவே, இணையவழி சந்தைப்படுத்துதல்
முக்கியத்துவம் பெறுகிறது.
இணையவழி விளம்பரப்படுத்துதலிலும் பல்வேறு முறைகள் உள்ளன. விளம்பரப்படுத்தப்படும் பொருள்கள் குறித்தோ சேவை குறித்தோ விரிவான விவரங்களை விளம்பரங்களில் வழங்குவது அவற்றில் ஒன்று. தற்போதைய வாடிக்கையாளர்கள் பொருள்கள் மற்றும் சேவைகளின் தரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
தாங்கள் வாங்கும் பொருள் அதிக தரமாகவும், நீடித்து உழைக்கும் வகையிலும் இருக்க வேண்டுமென விரும்பும் வாடிக்கையாளர்கள், அப்பொருள்கள் குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள விழைகின்றனர். எனவே, பொருள்கள் குறித்த விரிவான விவரங்களை விளம்பரங்களில் தெரிவிப்பது
பலனளிக்கும்.
ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக விளம்பரப்படுத்தினால் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை எளிதில் சென்றடையும். பல நிறுவனங்கள் தற்போது மின்னஞ்சல் மூலமாக விளம்பரப்படுத்துவதை அதிகரித்துள்ளன. இத்தகைய விளம்பரங்கள் அதிகப்படியான வாடிக்கையாளர்களுக்குச் சென்றடைவதோடு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட நிறுவனத்துடனான வாடிக்கையாளர்களின் தொடர்பை வலுப்படுத்தவும் உதவுகிறது.
குறிப்பிட்ட நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்படும் புதிய பொருள்கள், புதிய சேவைகள், மாற்றப்பட்ட விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து வாடிக்கையாளர்களுக்கு எளிதாக மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த முடிகிறது. எனவே, பல்வேறு நிறுவனங்கள் மின்னஞ்சல் வாயிலான சந்தைப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றன.
தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதற்கேற்ப விளம்பரப்படுத்தும் உத்திகளும் மாறி வருகின்றன. புதிய வாடிக்கையாளர்களைக் கவர வேண்டுமெனில் நிறுவனங்கள் அந்த உத்திகளைக் கையாள வேண்டியது அவசியமாகிறது. புதிய நிறுவனங்களைத் தொடங்கும் இளைஞர்கள் இதில் கவனம் செலுத்தினால் வாடிக்கையாளர்களை எளிதில் அணுக முடியும்.
SEO - Search Engine Optimization
What is a SEO?
(ஐடி பதம்: தேடல் இயந்திரம் மேம்படுத்தப்படுதல்)
Search engine optimization (SEO) is the process of improving the quality and quantity of website traffic to a website or a web page from search engines.
SEO targets unpaid traffic (known as "natural" or "organic" results) rather than direct traffic or paid traffic. Unpaid traffic may originate from different kinds of searches, including image search, video search, academic search,news search, and industry-specific vertical search engines.
As an Internet marketing strategy, SEO considers how search engines work, the computer-programmed algorithms that dictate search engine behavior, what people search for, the actual search terms or keywords typed into search engines, and which search engines are preferred by their targeted audience. SEO is performed because a website will receive more visitors from a search engine when websites rank higher on the search engine results page (SERP). These visitors can then potentially be converted into customers.
Cloud Computing Skills
15 types of cloud skills that IT professionals should know
Cloud computing has spawned a spectrum of new IT roles, and professionals must sharpen their technology expertise to remain competitive in the job market. Review these top skills that IT pros should focus on.
What is Cloud Computing?
Cloud computing refers to a range of computing services that are available over the Internet and not stored on your own computers or servers. Users pay for cloud-based services on an as-needed basis, whether it’s the amount of storage needed, the number of users of a software application, or the variety of services used.
There are three main types of cloud computing services:
Infrastructure (servers, storage, and networking)
Platform (databases, operating systems, and development tools)
Software (applications)
Cloud computing is often beneficial for organizations that don’t want to buy and maintain physical technology infrastructure, especially if they aren’t planning to access applications or databases 24/7. Organizations such as hospitals, however, who often run mission-critical software in their own onsite data centers, are less likely to benefit from cloud services.
Meanwhile, major cloud services providers, like Amazon Web Services, Google Cloud, and Microsoft Azure, benefit from scale. They can provide the same single service to thousands of customers of various sizes and in various industries.
1. Programming
This is a critical skill for any software developer, but cloud architects and administrators will also have to write code from time to time. Certain popular programming languages are better suited for cloud-based software. These include Java, JavaScript, and Python, as well as emerging languages such as Go and Scala. For database programming, you’ll need to be familiar with SQL, NoSQL, and Linux.
2. Platform Expertise
Amazon, Microsoft, and Google lead the cloud services market. Knowing how each of these three platforms works is a necessary skill for cloud computing professionals. Other companies with cloud platforms include IBM, Dell, Oracle, and Alibaba, which has a large presence in China. While each of the major vendors offers a certification program, a Graduate Certificate in Cloud Software Development will provide a well-rounded look at the cloud platforms as a whole.
3. Selecting the Right Services
Each cloud platform has specific strengths. Amazon is a leader in infrastructure; Microsoft is known for software; Google integrates with other vendor’s products; IBM focuses on artificial intelligence; Cisco Systems is a leader in networks, and so on. To work with cloud services, you need to be able to evaluate each platform and select the best option for a particular need.
4. Managing an Integrated Environment
Because platforms have different strengths, organizations are unlikely to use a single cloud platform. Data integration across different platforms is a highly sought skill among cloud computing professionals. This is especially true for organizations that use cloud services alongside legacy onsite client-server applications. Additionally, a multi-cloud strategy is beneficial for the sake of redundancy, as it gives an organization a fallback option if one cloud service is down.
5. Maintaining Databases
Storing data on the cloud isn’t the same as using an onsite data center. Challenges include storage limitations, security, and database performance. What’s more, vendors typically offer a variety of databases, with some better suited for analyzing large data files and others optimized for processing transactions, Gorton says. Cloud computing professionals need to understand which databases and services best suit a particular business need.
6. Managing a Network
With multiple cloud services interacting with one another, network management is a critical skill for cloud engineers. As with databases, different networks are suitable for different cloud services. For example, organizations often require employees to log into a virtual private network to access applications with access to sensitive information such as financial reports or personnel files; meanwhile, services such as videoconferencing may be routed on a different network because of performance requirements. As more employees continue to work remotely in the wake of COVID-19, effective network management will be an increasingly important cloud computing skill.
7. Securing the Cloud Environment
Ensuring that an organization’s cloud services are secure requires particular attention to detail. It’s not enough to secure the data itself; organizations need to protect the applications that use the data as well as the servers on which the applications run. Devices that transmit data to the cloud must be secured as well, whether they’re the smartphones in employees’ hands or the sensors transmitting data from the hospital room. Staying on top of emerging trends in cybersecurity will help you keep your organization a step ahead of major threats.
8. Adapting to New Roles and Technologies
The rise of cloud computing has led to a shift away from the traditional specialization of IT roles. While an onsite data center may have a system administrator, network engineer, security analyst, and storage engineer, today’s IT professionals need to be comfortable wearing each of those four hats—and taking on additional responsibilities or learning new technologies as necessary.
Advanced Cloud Computing Skills
These seven skills apply to long-term cloud computing projects that an organization is likely to undertake as its use of cloud services matures. Developing these skills will further demonstrate your cloud expertise and enable you to take on additional responsibilities, which will help you build your resumé and advance your cloud computing career.
9. Migrating Data
There are two major types of data migration to the cloud: Moving an old (or legacy) application from an onsite server to the cloud and moving from one cloud platform to another. To successfully migrate data, cloud professionals must be able to assess and map out their infrastructure, understand each cloud platform’s process for data migration, and indicate where data has been moved to—all while ensuring that nothing is lost during the process.
10. Automating Key Tasks
Automation is a major benefit of cloud services. When a piece of software can input information and decide the next action in response, an end-user doesn’t have to make that decision, which further improves efficiency. Programming this automation requires knowledge of artificial intelligence and machine learning, as they enable the creation of complex algorithms that help computers make decisions. The ability to automate multiple tasks also requires knowledge of the organization’s cloud architecture, namely which individual systems interact with or depend upon each other.
11. Designing Distributed Systems
Cloud computing is less about building new systems from scratch and more about putting systems together based on existing services, Gorton says. Assembling these distributed systems—so named because resources are located in different places—requires several skills, Gorton adds. These include predicting and monitoring system performance and comparing attributes of different services and data models.
12. Managing Change
It’s important to be able to draft plans for migrating data, bringing a new database online, creating a new network connection, or introducing another change to an organization’s cloud environment. These plans should include a written step-by-step procedure and a fallback option, which returns the project to its original state if a problem arises. The plans that organizations use for onsite changes such as server migrations or network upgrades can be applied here, though updates will be necessary to accommodate for the cloud.
13. Estimating Cost and Workload
Cost and workload estimation are critical skills due to how cloud service providers write their contracts, Gorton says. For example, if a data limit is exceeded, or an application requires more computing power to complete data analysis, organizations can expect to be hit with an overage. Another essential but often-overlooked consideration is what Gorton calls “orphaned resources,” or features that are created, misplaced, and created again, at a cost to an organization. Keeping a watchful eye on whether features are no longer being used can help keep costs down.
14. Measuring and Analyzing
Employers value job candidates with expertise in metrics and analytics. For example, it’s important for organizations using third-party cloud services to monitor application performance, as this ensures that they are getting their money’s worth from a service provider’s contract. Or, a network engineer may be tasked with evaluating and comparing cloud-based communication services as a way to replace landline telephones. Understanding which metrics set apart a certain service, or which features will cost the most money in the long run, is an important cloud computing skill.
15. Communicating
Beyond your range of technical skills, soft skills such as communication and decision-making are valuable for a career in cloud computing. Internal stakeholders will turn to you for advice as they evaluate cloud platforms for their departments (or the entire company), so it’s important that you can clearly explain the benefits and drawbacks of each option. Cloud engineers working in customer-driven industries such as retail or travel should also be comfortable communicating directly with a company’s vendor—especially when experiencing problems or negotiating a new service contract.
AUTOCAD
ஆட்டோகேட் (AutoCAD)
ஆட்டோகேட் என்பது வணிக ரீதியான கணினி உதவி வடிவமைப்பு (CAD Computer aided design software) மற்றும் வரைவு மென்பொருள் ஆகும்.
ஆட்டோடெஸ்க் நிறுவனம் இதனை உருவாக்கி டிசம்பர் 1982 முதல் விற்பனை செய்து வருகிறது. ஆட்டோகேட் தரமான கிராபிக்ஸ் கார்டு கொண்ட கம்ப்யூட்டர்களில் இயங்கும்.
ஆட்டோகேட், கட்டட வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் மற்றும் கட்டுமான வல்லுநர்கள், துல்லியமான 2D மற்றும் 3D வரைபடங்களை உருவாக்க பெரிதும் பயன்படுத்துகின்றனர்.
மேலும் இதைக்கொண்டு திட, சமதல மற்றும் வலைப்போன்ற பரப்புகளையுடைய 2D மற்றும் 3D மாதிரிகளை வடிவமைக்க முடியும்.
வரைவு, சிறுகுறிப்பு மற்றும் வடிவமைப்பு வரைபடங்களை ஒப்பிடுவது, தொகுதிகள் சேர்ப்பது, அட்டவணைகளை உருவாக்குதல் போன்ற பணிகளை தானியக்கமாக்க முடியும்.
ஆட்டோகேட் டூல்கிட்
இது தொழில் சார்ந்த அம்சங்கள் மற்றும் கட்டிடக்கலை, இயந்திர பொறியியல், மின் வடிவமைப்பு மற்றும் பலவற்றிற்கான சிறப்பு டூல்களை உள்ளடக்கியது.
சந்தா விலை: ஆண்டுக்கு ₹75,225
வேலைவாய்ப்பு:
ஆட்டோகேடை முறையாக கற்றுக்கொண்டால் நல்ல வேலைவாய்ப்பு உள்ளது. முக்கியமாக டிராப்ட்ஸ்மேன் (Draftsman) வேலையில் சேரயிருப்பவர்களுக்கு இதில் நிபுனராக இருப்பது அடிப்படை தகுதியாகும்.
சிவில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் பட்டதாரிகள், ஆர்கிடெக்ட்கள், மெக்கானிகல் இன்ஜினியரிங் பட்டதாரிகள்,
ஆட்டோகேடை முறையாக கற்றுக்கொண்டால் சிறந்தது.
படிப்புகள்:
ஆட்டோகேடை தனியார் கேட் சென்டர்களில், சான்றிதழ் படிப்பாக படிக்கலாம்.
AutoCAD is a commercial computer-aided design (CAD) and drafting software application. Developed and marketed by Autodesk, AutoCAD was first released in December 1982 as a desktop app running on microcomputers with internal graphics controllers.
https://www.autodesk.in/products/autocad/overview...
AutoCAD online courses:
https://www.udemy.com/course/autocad3d/...
https://skill-lync.com/.../autocad-essentials-mechanical...
ADOBE PHOTOSHOP
அடோப் போட்டோஷாப் - ஓர் அறிமுகம்
போட்டோஷாப் - மென்பொருள் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. இன்றைய காலத்தில் கிராபிக்ஸ் செய்ய பயன்படும் அற்புதமான மென்பொருள் அது. பிளக்ஸ் பேனர் (flex Banner) , திருமண பத்திரிக்கைகள், பத்திரிக்கை அட்டை படங்கள், விதவிதமான மணமக்கள் போட்டோக்கள் (The bride's photos) என அனைத்துவித விஷேசங்களுக்கும் எடுக்கப்படும் புகைப்படங்களை மேலும் அழகூட்ட பயன்படும் மென்பொருள் போட்டோஷாப்.
போட்டோஷாப் (Adobe Photoshop) என்பது அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட அடோப் சிஸ்டம்ஸ் இன்கார்ப்பரேட்டட் என்கிற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ‘வரைகலை மென்பொருள்’ ஆகும். 90-களிலேயே இதன் முதல்பதிப்பு (வெர்ஷன் 1.0 ) உருவாக்கப்பட்டது.
இருந்தாலும் பலதரப்பட்ட மக்கள் இதைப்பயன்படுத்தத் தொடங்கியது என்னவோ 2000-களில்தான்.
இப்படி போட்டோஷாப் 5.5,போட்டோஷாப் 6.0, போட்டோஷாப் 7.0 என அடுத்தடுத்தவெர்ஷன்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தகுந்தார்போல் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
போட்டோஷாப் மேக் மற்றும் விண்டோஸ் கணினிகளில் (Mac OS and Windows) இயங்கக்கூடிய ஒரு மென் பொருளாகும்.
போட்டோஷாப் பதிப்பானது சிஎஸ் என்கிற க்ரியேட்டிவ் சூட் பதிப்புகளைத் தாண்டி போட்டோஷாப் சிசி பதிப்புகள் வரத் தொடங்கிவிட்டன.
இப்போது கடைசியாக வெளியானது போட்டோஷாப் சிசி 2020 ( வெர்ஷன் 23.1).
சரி, இவ்வாறு அப்டேட் செய்யப்படும் வெர்ஷன்களால் அதைக் கற்பது சவாலாக இருக்கும் என்று நினைத்துநாம் பயப்படத் தேவையில்லை. நமக்குத் தேவை போட்டோஷாப்பின் அடிப்படையான திறன்கள் என்ன? அதை எப்படி நாம் எளிதாகக் கற்கலாம்? என்பதே.
போட்டோஷாப் பற்றி ஓரளவுதெரிந்துகொண்டாலே உங்களுக்குள் அது கூடுதலாக ஒரு திறமையைக் கொண்டுவந்துவிடும். அதில் இன்னும்கொஞ்சம் இறங்கிக் கற்றால்,ஏகப்பட்ட வேலைவாய்ப்புகளை உங்களுக்கு நிச்சயமாக உருவாக்கிவிடக்கூடும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்த மென்பொருள் ஏதோ போட்டோகிராஃபர்களுக்காகமட்டுமே என்றே பலரும் நினைக்கின்றனர். அது தவறு.
தொழில்ரீதியிலான ஒரு புகைப்படக்காரர், கிராஃபிக் டிசைனர், லே அவுட் டிசைனர்,வீடியோ கேம் உருவாக்குபவர், அனிமேஷன் படங்களைத் தயாரிப்பவர், விளம்பரப் பதாகைகளைத் தயாரிப்பவர், ஓவியர், காமிக்ஸ் உருவாக்குபவர் என இந்தமென்பொருளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும்நீளமானது. எனவே இந்தபோட்டோஷாப்பை அனைத்துஇளைஞர்களும் ஓர் எஸ்ட்ராகரிக்குலர் ஆக்டிவிட்டியாக கற்றுக்கொள்வதில் நிறைய நன்மைகளே உள்ளன. அதைஅடுத்த வாரம் முதல் நாம் கற்கத் தொடங்கலாம்!
போட்டோ ஸ்டுடியோ (Photo Studio) வைத்துள்ள நண்பர்கள், போட்டோ கிராபர்கள், செல்போனில் படம் எடுப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் போட்டோஷாப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதில் அடிப்படையான இன்னும் நிறையபேர் பயன்படுத்துவது போட்டோஷாப் 7.0.
சாதாரண பாஸ்போர்ட் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றாலும் ஸ்டுடியோவில் பயன்படுத்துவது போட்டோஷாப் மென்பொருள்தான்.
அப்படிப்பட்ட போட்டோஷாப் 7 மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.
அதைப் பயன்படுத்துவதும் மிக எளிதுதான்.
போட்டோஷாப் டுடோரியல்
லட்சக்கணக்கான போட்டோஷாப் டுடோரியல்கள் (Photoshop Tutorials) இணையத்தில் உள்ளன. வீடியோ டுடோரியல்கள், PDF பைல்கள், வெப்சைட் டுடோரியல்கள் என பல விதங்களில் போட்டோஷாப் கற்றுக்கொள்ள டுடோரியல்கள் உண்டு. டுடோரியல்கள் மூலம் மிக விரைவாக போட்டோஷாப் கற்றுக்கொள்ள முடியும்.
வெப்சைட்டில் உள்ள கட்டுரைகள் மூலமும் போட்டோஷாப் கற்றுக்கொள்ள முடியும். படித்து உணர்ந்து அதில் கொடுத்துள்ள செயல்முறைகளை அப்படியே செய்தால், ஆச்சர்யமான போட்டோ டிசைன்கள், கிராபிக்ஸ்களை நீங்களே செய்து முடிக்க முடியும்.
ஆன்லைன் போட்டோ டிசைன் டூல்கள்
தற்காலத்தில் மிக விரைவாக ஒரு போட்டோவிற்கு பேக்ரவுண்ட்மாற்றுவது,போட்டோ ஸ்டைல் மாற்றுவது, விதவிதமான கிராபிக்ஸ் (Graphics) செய்வது என வசதிகள் வந்துவிட்டன.
அதற்கென பலதரப்பட்ட இணையதளங்கள் அந்த சேவைகளை வழங்குகின்றன. ஆன்லைன் போட்டோ டிசைன் டூல்கள் என அழைக்கபடும் அந்த வசதிகள் ஒரு சில கிளிக்குகளில் செயல்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
போட்டோஷாப் போன்ற மென்பொருட்கள் (Similar softwares)
போட்டோஷாப்பில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட வசதிகளை மட்டும் உள்ளடக்கிய சிறு சிறு மென்பொருட்கள் (Portable Photo Edit software) எண்ணிக்கையில் அதிகம் உள்ளன. உதாரணமாக போட்டோவை ரீசைஸ் (Resize) செய்வது, போட்டோவின் பிக்சல் (Pixel) அளவை குறைப்பது, இன்வர்ட் செய்வது போன்ற பயன்பாடுகளை கொண்டிருக்கும்.
ஸ்மார்ட்போன் பில்டர் ஆப்ஸ்கள்
போட்டோக்களை வித விதமாக மாற்றுவதற்கு ஆன்ட்ரோய்ட் ஆப்ஸ்கள் (Android Photo App) நிறைய வந்துவிட்டன. ஸ்மார்ட்போனில் எடுக்கப்படும் படங்களை உடனுக்குடன் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் பில்டர் ஆப்சன்களை பயன்படுத்தி அழகூட்ட முடியும்.
முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குவது, முகத்தை பளபளப்பாக மாற்றுவது, ரெட் ஐ ரீமூவல் (Red Eye Removal) , லிப்ஸ்டிக் பூசுவது, கண்களின் பிரைட்னஸ் அதிகமாக்குவது என நிறைய வசதிகள் அதிலேயே உள்ளடங்கி வந்துவிட்டது.
வேடிக்கையான போட்டோ பில்டர்கள்:
ஆன்லைன் வசதிகளிலும் சரி, ஆன்ட்ராய்ட் ஆப்களிலும் சரி, முகத்தின் தன்மையை மாற்றக்கூடிய ஆப்ஸ்கள், பயன்பாடுகள் நிறைய வந்துவிட்டன.
ஒருவரின் முகத்தை வயதான தோற்றத்தில் எப்படி இருக்கும் என்பதை மாற்றிட முடியும். பெண் தோற்றத்தில் (face look) எப்படி காட்சியளிக்கும் என மாற்ற முடியும். சினிமா கேரக்டர்களில் மாற்ற முடியும், ஓவியமாக மாற்ற முடியும், 3D படமாக மாற்ற முடியும். இப்படி கணக்கிலடங்கா வசதிகள் வந்துவிட்டன.
இப்படிப்பட்ட வசதிகள் அருமையாக இருக்கும். இருப்பினும் அனைவருக்கும் அது திருப்தியை தருமா என்றால், நிச்சயமாக இருக்காது. ஏனெனில் அவர்கள் விரும்பும் தனிப்பட்ட விஷயத்தை அதுபோன்ற ஆப்ஸ்களால் கொடுக்க முடியும்.
அதற்கு ஒரே வழி போட்டோஷாப் மென்பொருள்தான். தனிப்பட்ட முறையில், மிகச் சிறப்பாக கற்பனைக்கு ஏற்றவாறு போட்டோக்களை மாற்றிட பயன்படும் ஒரு மென்பொருள் உண்டென்றால் கண்டிப்பாக அது Adobe Photoshop மென்பொருள் தான். போட்டோஷாப் அடிப்படைகளை கற்றுக்கொள்ள மிக மிக எளிதாக இருக்கும் மென்பொருள் Adobe Photoshop தான்.
- வெங்கி
கூடுதல் தகவல்களுக்கு:
https://www.adobe.com/products/photoshop.html
https://en.m.wikipedia.org/wiki/Adobe_Photoshop
Subscribe to:
Posts (Atom)
IIT madras உள்நுழைவது அத்தனை கடினமா?
IIT madras உள்நுழைவது அத்தனை கடினமா? என் மகன் ஆதில் முஹம்மத் முதலாம் ஆண்டு கல்லூரி சேருவதற்கு முன் அவனை சென்னை ஐஐடியில் சேர்த்து...
-
அறியப்படாத படிப்புகளை பற்றி அறிந்து கொள்வோமா..? பலரும் அதிகம் அறிந்திடாத, அதேவேளையில் அன்றாட பயன்பாட்டுடன் தொடர்பில் இருக்கும் விஷயங்களை உ...
-
அறிவோம் துணைமருத்துவ பட்ட படிப்புகள்: பி.எஸ்சி. - மருத்துவ ஊட்டச்சத்தியல் (B.Sc., Clinical Nutrition) இந்த பி.எஸ்சி. பட்டபடிப்ப...
-
IIT madras உள்நுழைவது அத்தனை கடினமா? என் மகன் ஆதில் முஹம்மத் முதலாம் ஆண்டு கல்லூரி சேருவதற்கு முன் அவனை சென்னை ஐஐடியில் சேர்த்து...