Welcome

WELCOME to Education++

Wednesday, January 26, 2022

TAMIL NADU FISHERIES UNIVERSITY


 மீன்வள அறிவியல் படிப்பு 160 இடங்களாக அதிகரிப்பு


ஜெயலலிதா மீன்வள பல்கலையில், இளங்கலை மீன்வள அறிவியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள், 120ல் இருந்து, 160 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

நாகபட்டினத்தில் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலை செயல்படுகிறது. இதன் கீழ் உள்ள, துாத்துக்குடி மீன்வள கல்லுாரி; பொன்னேரி மற்றும் தலைஞாயிறு எம்.ஜி.ஆர்., மீன்வள கல்லுாரிகளில், இளநிலை மீன்வள அறிவியல் பாடப்பிரிவில், 120 இடங்கள் இருந்தன. இதில், மீனவர் சமுதாய மாணவர்களுக்கு, 5 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன.
கூடுதலாக 15 சதவீத மிகை இடங்களை, மீனவ மாணவர்களுக்குஒதுக்கீடு செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நடப்பாண்டு மீன்வள இளநிலை அறிவியல் மாணவர் சேர்க்கையில், இப்பல்கலையால் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட, 120 இடங்கள் 160 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

கடந்த 2012 ஆம் ஆண்டு, நாகப்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டது தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகம் (TNJFU- TamilNadu Dr.J. Jayalalithaa Fisheries University, Nagapattinam). அகில இந்திய அளவில் தொடங்கப்பட்ட முதல் மீன்வளப் பல்கலைக்கழகம் இதுவாகும்.

இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் தூத்துக்குடி, பொன்னேரி, தலைஞாயிறு, வாணியஞ்சாவடி உள்ளிட்ட 10 இடங்களில் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் உள்ள 330 இடங்கள் உள்ளன.

இப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பிஎப்எஸ்சி, பிடெக் (மீன்வள பொறியியல்), பிடெக் (ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்), பிடெக் (நாட்டிக்கல் டெக்னாலஜி), பிடெக் (பயோ டெக்னாலஜி), பிடெக் (உணவு தொழில்நுட்பம்), பிபிஏ (மீன்வள வணிக மேலாண்மை) உள்ளிட்ட 8 பட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.

அடுத்த 5 ஆண்டுகளில் கடல் உணவு மற்றும் மீன் ஏற்றுமதியில் பலமடங்கு அதிகரிக்கும் என்பதால் இத்தகைய படிப்புகளை முடிக்கும் மாணவர்கள் அதிக லாபம் ஈட்டமுடியும் என்கின்றனர்.

மீன்வள படிப்பை படித்து முடித்த மாணவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாக மீன் வாளர்ப்பு சுய தொழில் செய்ய முன்வந்தால், அரசு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக அமைச்சர் ஜெய்குமார் கூறியுள்ளார்.

பொறியியல் போன்ற படிப்புகளை முடித்துவிட்டு உரிய வேலை கிடைக்காமல், ஏதோ ஒரு வேலையை செய்யும் இளைஞர்களுக்கு மத்தியில் இதுபோன்று பிரத்தியேகமான படிப்புகளை படித்து சுய தொழில் மூலம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்து.

TNJFU பல்கலைக்கழகத்தில், மீன் வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் பிடித்தல், மீன் உயிர்தொழில்நுட்பம், மீன்வள பொருளாதாரம், மீன்கள் வாழும் சூழ்நிலையியல், மீன்வள விரிவாக்கம், மீன்வள தொழில்நுட்பம், மீன்வள பொறியியல் மற்றும் மீன்கள் பதப்படுத்தல் குறித்தான படிப்புகள் உள்ளது. மாணவர்கள் இப்பல்கலைகழகத்தில் பொது நுழைவுத்தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறுகிறது.

மீன் வள இளங்கலைப் படிப்புகளில் மீனவ குடும்பங்களைச் சேர்ந்த மாணவ - மாணவிகளுக்கு 5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

🔹 நான்காண்டு இளநிலை மீன்வள அறிவியல் பட்டம் (பி. எப். எஸ்சி - B.F. Sc)

🔹 எட்டு படிப்புகளில் இரண்டாண்டு முதுநிலை மீன்வள அறிவியல் பட்டம் (எம். எப். எஸ்சி - M.F. Sc)

🔹 நான்கு படிப்புகளில், மூன்றாண்டு முனைவர் பட்டப்படிப்பு (Ph.D.)

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள், பயிற்சி மற்றும் ஆய்வு மையங்கள்:

1 மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு மையம், தூத்துக்குடி

2 மீன்வள தொழில்நுட்ப கழகம், பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்

3 மீன்வள பொறியியல் கல்லூரி, நாகப்பட்டினம்

4 மீன்வள் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையபல, மாதவரம்

5 மீன்வள பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தஞ்சாவூர்

6 மீன்வள பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், பரக்கை, கன்னியாகுமரி மாவட்டம்

பிற மையங்கள்:

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக்த்தின் பிற இரண்டு மையங்கள் சென்னையில் அமைந்துள்ளது.

பணியாளர் பயிற்சி நிறுவனம், சென்னை

மீன்வள தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி நிறுவனம், (FITT) சென்னை

TNJFU ranked as No. 1 State Agricultural University in Tamil Nadu and 25th among the SAUs in India by the ICAR, New Delhi

The University has the following colleges under it:

FC&RI, Thoothukudi
FC&RI, Ponneri COFEE
COFE, Nagapattinam
Dr. M.G.R. FC&RI, Thalaignayiru
IPGS, Chennai
IFBT, Chennai
TNFU-BS, Chennai

Related links:

https://www.tnjfu.ac.in

https://www.sarvgyan.com/.../science/fisheries-aquaculture

https://www.getmyuni.com/.../tamil-nadu-fisheries

No comments:

Post a Comment

Gate Exam - Topper's Tips

GATE 2022: தேர்வுக்கு எப்படி தயார் ஆகப் போறீங்க? டாப்பர்ஸின் டிப்ஸ் இதோ! GATE மாதிரி தேர்வுகளை பல பயிற்சி மையங்கள் நடத்தி வருகின்றன. முடிந்...