Welcome
Wednesday, January 26, 2022
Computer Courses
காலத்தின் தேவை... கம்ப்யூட்டர் படிப்புகள்!
நவீனம் என்ற முறையில் இன்று அனைத்துத் துறைகளும் கணினிமயமாகிவிட்டன. இதனால் கணினி படிப்புகளுக்கும் சமீப காலத்தில் அதிகமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. எந்தவொரு துறையானாலும் எந்தவொரு வேலையானாலும் கணினி தொடர்பின்றி எதுவும் இல்லை என்ற நிலை வந்துவிட்டது. வேலையை எளிதாகச் செய்யவும் தரவுகளைச் சேமித்து அதனை நொடிப்பொழுதில் பயன்படுத்தவும் கணினிமயம் அவசியமே.
அந்தவகையில், அனைத்து நிறுவனங்களும் தங்கள் துறைகளில் சமீபத்திய தொழில்நுட்பங்களைத் தெரிந்தவர்களையே வேலைக்கு அமர்த்துவதில்
முன்னுரிமை கொடுத்து வருகின்றன.
தொழில்நுட்பங்களிலும் தொடர்ந்து வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருப்பதால் மிகவும் வேகமாக அவற்றை நாம் கற்றுக் கொள்ள வேண்டியதுஅவசியமாகிறது.
இனி வரும் காலங்களில் இளைஞர்கள் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய கணினி தொடர்பான முக்கிய படிப்புகள் எவை என்று பார்ப்போம்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியரிங் வரும் காலத்தில் இன்னும் கணினிமயமாகும் சூழலில் கண்டிப்பாக ஐடி துறை மேலும் வளர்ச்சி காணும் வாய்ப்பு அதிகம். வளர்ச்சி இல்லை எனினும் இதே நிலையிலாவது இருக்கும். எனவே, பொறியியல் படிக்க விரும்புபவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ்என்ஜினியரிங் படிப்பைத் தேர்வு செய்யலாம். இது 4 ஆண்டு இளங்கலைப் பட்ட படிப்பாகும். வன்பொருள், மென்பொருள், நெட்வொர்க்கிங், கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது இந்தப் படிப்பு.
அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் உள்ள இந்த படிப்பை ஐஐடி போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் படிக்க விரும்பினால் ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும்.
டேட்டா சயின்ஸ்டிஜிட்டல்மயமாக்கலின் ஒரு முக்கியமான வேலை, தரவுகளைச் சேமித்து வைப்பது. அத்துடன் தேவைப்படும் தரவுகளை, தேவைப்படும் நேரத்தில் தரவிறக்கம் செய்வது.
அனைத்துத் துறைகளும் தற்போது தரவுகளைகணினியில்/ஆன்லைனில் சேமித்து வைப்பதாலும்தரவுகளின் அளவு அதிகரித்து வருவதாலும் வரும் காலத்தில் டேட்டா சயின்ஸ் படிப்புக்கான தேவைஇன்னும் அதிகரிக்கும்.
இந்தப் படிப்பின்கீழ், பகுப்பாய்வு, மாடலிங், தரவு காட்சிப்படுத்துதல், இயந்திர கற்றல் உள்ளிட்டவை பற்றி படிக்கலாம். படிப்பை முடித்த பிறகு, பகுப்பாய்வு மேலாளர், தரவு ஆய்வாளர், புள்ளியியல் நிபுணர் போன்ற பணிகள் காத்திருக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தகவல் தொழில்நுட்பம், வங்கிகள் என அனைத்து துறைகளிலும் வேலைகளிலும் இன்று ஆன்லைனில் ஒரே நேரத்தில் அனைவரும் கையாளக் கூடிய விஷயங்கள் அனைத்துக்கும் காரணம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் வரைபடிப்புகள் உள்ளன. பட்டயப் படிப்பு முடித்தவர்கள், சான்றிதழ் படிப்புகளையும் படிக்கலாம்.
நிரலாக்கம், இயற்கணிதம், புள்ளியியல்,அல்காரிதம் மற்றும் தொழில்நுட்பத்தில் சிக்கலைத்தீர்க்கும் நுட்பங்கள் குறித்த படிப்பு. பெங்களூருமற்றும் ஹைதராபாத்தில் இதற்கென தனித்துவம் பெற்றகல்லூரிகள் உள்ளன.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் - எஸ்இஓடிஜிட்டல்
மார்க்கெட்டிங் என்பது எஸ்இஓ எனப்படும் சர்ச் என்ஜின் ஆப்டிமேஷன் பணியையும்உள்ளடக்கியது. தங்கள் நிறுவனங்களின் இணையதளங்கள் எந்த அளவுக்கு மக்களைச் சென்றடைந்துள்ளன, கூகுள் தேடலில் முன்னுரிமை கிடைக்க வழிகள், சமூக வலைதளங்களில் மார்க்கெட்டிங் உள்ளிட்டதகவல்களைத் தெரிந்து கொள்ள இந்தப் படிப்பு உதவும்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறைக்குச் செல்பவர்கள் கண்டிப்பாக இது குறித்த அடிப்படை அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.
கணினிமயமாக்கலில் எஸ்இஓ பணிகளுக்கான வேலைவாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. எனினும் புதிதாக பணியைத் தொடங்குபவர்கள் அதிக
ஊதியத்தை எதிர்பார்க்க முடியாது.
நெட்வொர்க் அண்ட் சைபர் செக்யூரிட்டி
எந்தவொரு துறை வளர்ச்சி அடைகிறதோ அந்தஅளவுக்கு அச்சுறுத்தல்களும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் முழுக்க முழுக்க தொழில்நுட்பங்கள் மூலமாக இயங்கும் கணினியில் அதே மாதிரியானமற்றொரு தொழில்நுட்பம் மூலமாக பாதுகாப்புஅச்சுறுத்தல்களும் வரும். எனவே, வேறு யாரும் நமது தரவுகளை பயன்படுத்தா வண்ணம் பாதுகாக்கவே நெட்ஒர்க் அண்ட் சைபர் செக்யூரிட்டி படிப்புகள் பயன்படுகின்றன.
பாதுகாப்பான ஆன்லைன் பரிவர்த்தனைகள் முதல் ஆன்லைன் வணிகம் வரை அனைத்தும் இதில்அடங்கும். இதற்கான ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளும் தற்போது அதிகம் இருக்கின்றன.
மொபைல் அப்ளிகேஷன் டெவலப்மெண்ட்
செல்லிட பேசிகளின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், பயனர்கள் எளிதாகப் பயன்படுத்தும் பொருட்டும், ஆன்லைன் தளங்களைப் போலவே செல்லிட பேசிகளுக்கான செயலிகளும் அதிகரித்துவிட்டன. செல்லிட பேசியில் பயன்படுத்துவதெற்கென பிரத்யேகமாக செயலிகள் வடிவமைக்கப்படுகின்றன.
"அப்ளிகேஷன் டெவலப்பர்' எனும் இந்த பணியில் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் போன்ற ஓ.எஸ். தொழில்நுட்பங்களில் இணையதளங்களுக்கான செயலிகளை வடிவைமைக்க வேண்டும்.
இதற்காக சி, சி++, ஜாவா போன்ற கணினி மொழிகளை அறிந்திருக்க வேண்டும். கணினி அறிவியல் தொடர்பான ஒரு பட்டப்படிப்பை முடித்த பின்னர்தனியார் கல்வி நிறுவனங்களில் இந்த படிப்பைபடிக்கலாம்.
வெப் டிசைனிங் அண்ட் டெவலப்மென்ட்
வணிக நிறுவனங்களுக்காகவோ தனிப்பட்ட பயன்பாட்டுக்காகவோ ஓர் இணையதளத்தை உருவாக்கும் வேலையே வெப் டிசைனிங் அண்ட் டெவலப்மென்ட் . மொபைல் செயலிகளுக்கே அடித்தளமாக இருப்பவை இணையதளங்களே.
சிறு, குறு தொழில் செய்வோரும் தங்கள் பொருள்களை ஆன்லைனில் விளம்பரப்படுத்த, விற்க இணையதளங்கள் அவசியம். எனவே, வரும் காலத்தில் வெப் டிசைனிங் அண்ட் டெவலப்மென்ட் படிப்பின் தேவை அதிகமாகவே இருக்கும். இதற்காக பிஎச்பி, பைதான், ஏஎஸ்பி.நெட், ஜாவா, அடோப் போட்டோஷாப் போன்றவற்றைப் படிக்க வேண்டும். கணினி அறிவியல் தொடர்பான பட்டப்படிப்பு முடித்து இதனையும்சான்றிதழ் படிப்பாக முடித்திருக்க வேண்டும்.
விஃஎப்எக்ஸ் அண்ட் அனிமேஷன்
ஆன்லைன் கேமிங் துறை, 3டி தொழில்நுட்பம் ஆகியவற்றில் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் அனிமேஷனின் பயன்பாடு பெரிதும் முக்கியமானது. இதற்காக விஎப்எக்ஸ் மற்றும் அனிமேஷன் படிப்புகளை முடித்த பின்னர் மாயா, அடோப் போட்டோஷாப் மற்றும் சினிமா 4டி ஆகியவற்றைப் பயன்படுத்துவது உங்கள் திறமைகளை வளர்க்க உதவும்.
இது தொடர்பான டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.
கம்ப்யூட்டர் ஹார்ட்வேர்
ஒரு மென்பொருள் இயங்க கணினி சரியானநிலையில் இருக்க வேண்டும். தரவுகளை செயல்படுத்தும் மதர்போர்டுகள், சேமித்து வைக்கும் ஹார்ட் டிஸ்க்குகள் என கணினியின் செயல்பாடுகளைக் கண்காணித்து சரி செய்யக் கூடிய பணியைச் செய்ய விரும்புபவர்கள், பட்டப்படிப்பை முடித்த பிறகு கணினிவன்பொருள் படிப்பை முடிக்க வேண்டும். குறைந்தது 6 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை படிக்க வேண்டியதிருக்கும்.
டேலி அண்ட் எம்எஸ் ஆபீஸ்
எம்எஸ் ஆபீஸ் என்பது கணினியில் வேலை செய்வதற்கான அடிப்படை அறிவாகும். அதுபோன்று அக்கவுண்ட்ஸ் பணிகளைச் செய்வதற்கு அவசியம் டேலி படிக்க வேண்டும்.
அதிகபட்சமாக மூன்று மாதங்களில் கற்றுக்கொள்ளலாம். பட்டப்படிப்பு முடித்த பின்னர் இந்த பயிற்சிகளையும் கற்றுக் கொண்டால் எளிதாக வேலைகிடைக்கும்.
- இளைஞர்மணி
SSC - Staff Selection Commission
மத்திய அரசில் 7,500க்கும் அதிகமான குரூப் 'பி', 'சி' வேலைவாய்ப்புகள்: எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 7500க்கும் மேற்பட்ட குரூப் 'பி', 'சி' பணியிடங்களுக்கானபுதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குரூப் 'பி' மற்றும் 'சி' பணி விவரம்:
பணி: Assistant Audit Officer
பணி: Assistant Accounts Officer
பணி: Assistant Section Officer
பணி: Assistant Section Officer
பணி: Assistant Section Officer
பணி: Assistant Section Officer
பணி: Assistant Section Officer
பணி: Assistant Section Officer
பணி: Assistant Other
பணி: Assistant Section Officer
பணி: Inspector of Income Tax
பணி: Inspector, (CGST & Central Excise)
பணி: Inspector (Preventive Officer)
பணி: Inspector (Examiner)
பணி: Assistant Enforcement Officer
பணி: Sub Inspector
பணி: Inspector
பணி: Inspector
பணி: Assistant
பணி: Assistant
பணி: Assistant (NCLAT)
பணி: Research Assistant (NHRC)
பணி: Divisional Accountant Offices
பணி: Sub Inspector (NIA)
பணி: Junior Statistical Officer (JSO)
பணி: Statistical Investigator Grade-II
குரூப் 'சி' பணி:
பணி: Auditor Offices under C&AG Group “C” 18-27 years
பணி: Auditor Other
பணி: Auditor Offices under CGDA
பணி: Accountant Offices under C&AG Group “C” 18-27 years
பணி: Accountant/ Junior Accountant
பணி: Senior Secretariat Assistant/ Upper Division Clerks
பணி: Senior Secretariat Assistant/ Upper Division Clerks
பணி: Tax Assistant CBDT
பணி: Tax Assistant CBIC
பணி: Sub-Inspector
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வை அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு மற்று சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.01.2022
மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in அல்லது https://ssc.nic.in/.../UploadedF.../notice_CGLE_23122021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

Digital Marketing
இணையவழி சந்தைப்படுத்துதல்... புதிய உத்திகள்!
இணையவழியில் சந்தைப்படுத்துதல் (டிஜிட்டல் மார்க்கெட்டிங்) தற்போது மிகவும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள் ஆகியவற்றின் வாயிலாகப் பொருள்களையும் சேவைகளையும் விளம்பரப்படுத்துவதே இதற்கு முன்பு அதிகமாக இருந்து வந்தது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தற்போது இணையத்தில் செலவிடும் நேரம் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகஇணையவழி சந்தைப்படுத்துதல் அதிகமாகி வருகிறது.
நிறுவனங்களும் இணையவழி விளம்பரப்படுத்துதலை அதிகப்படுத்தி வருகின்றன. யூ டியூப், கூகுள்உள்ளிட்டவற்றிலும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் விளம்பரங்கள் அதிகமாகி வருவதைக் காண முடிகிறது. செய்தி ஊடக நிறுவனங்களின் வலைதளங்கள் உள்ளிட்டவற்றிலும் கூட விளம்பரங்கள்தனியிடம் பெறுகின்றன.
பல்வேறு வழிகளில் தற்போது இணையவழிச்சந்தைப்படுத்துதல் வளர்ந்துள்ளது. எத்தகைய நிறுவனங்களாக இருந்தாலும், இணையவழியில் விளம்பரப்படுத்தாவிடில் அந்நிறுவனம் இளைஞர்கள் உள்ளிட்டோரைச் சென்றடைய முடிவதில்லை. எனவே, இணையவழி சந்தைப்படுத்துதலில் நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
பல்வேறு காரணங்களால் இணையவழி விளம்பரப் படுத்துதல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. முதலில் அதிக எண்ணிக்கையிலான நபர்களை இணையவழியில் சென்றடைய முடிகிறது. தற்போது இளைஞர்களில் பெரும்பாலானோர் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களைத் தொடர்பு கொள்வதற்கு இணையமே சிறந்த வழியாக உள்ளது. எனவே, இணையவழி சந்தைப்படுத்துதல் மூலமாக அவர்களைக் கவர்வது எளிதாகிறது. மற்ற வழக்கமான சந்தைப்படுத்துதல் முறைகளை விட இணையவழி விளம்பரப்படுத்துதலில் கூடுதல் நபர்களைச் சென்றடைய முடிகிறது.
மேலும் இணையவழி சந்தைப்படுத்துதல் முறையில் செலவு குறைவாக உள்ளது. மரபு வழியான விளம்பர நடைமுறைகளில் செலவு அதிகமாக உள்ளது. அதுவே இணையவழியில் விளம்பரத்தின் செலவு குறைவாக உள்ளது.
விளம்பரங்களால் யார் அதிகமாக ஈர்க்கப்படுகிறார்கள்? எந்த நேரத்தில் விளம்பரம் அதிகமாகப் பார்க்கப்படுகிறது உள்ளிட்டவற்றை இணையவழியில் எளிதில் கண்காணிக்க முடியும். அதன் மூலமாக விளம்பரப்படுத்துதலை மேலும் வலுப்படுத்த முடியும். இந்த வசதி மரபு வழி விளம்பரங்களில் இல்லை.
இணையவழி விளம்பரங்கள் மூலமாக வாடிக்கையாளர்களை எளிதில் கவர முடிகிறது. விளம்பரத்தைக் காணும் வாடிக்கையாளர்கள், அப்பொருளையோ
அல்லது சேவையையோ உடனடியாக இணையவழியிலேயே வாங்கும் முயற்சிகளை மேற்கொள்வார்கள். எனவே, இணையவழி சந்தைப்படுத்துதல்
முக்கியத்துவம் பெறுகிறது.
இணையவழி விளம்பரப்படுத்துதலிலும் பல்வேறு முறைகள் உள்ளன. விளம்பரப்படுத்தப்படும் பொருள்கள் குறித்தோ சேவை குறித்தோ விரிவான விவரங்களை விளம்பரங்களில் வழங்குவது அவற்றில் ஒன்று. தற்போதைய வாடிக்கையாளர்கள் பொருள்கள் மற்றும் சேவைகளின் தரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
தாங்கள் வாங்கும் பொருள் அதிக தரமாகவும், நீடித்து உழைக்கும் வகையிலும் இருக்க வேண்டுமென விரும்பும் வாடிக்கையாளர்கள், அப்பொருள்கள் குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள விழைகின்றனர். எனவே, பொருள்கள் குறித்த விரிவான விவரங்களை விளம்பரங்களில் தெரிவிப்பது
பலனளிக்கும்.
ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக விளம்பரப்படுத்தினால் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை எளிதில் சென்றடையும். பல நிறுவனங்கள் தற்போது மின்னஞ்சல் மூலமாக விளம்பரப்படுத்துவதை அதிகரித்துள்ளன. இத்தகைய விளம்பரங்கள் அதிகப்படியான வாடிக்கையாளர்களுக்குச் சென்றடைவதோடு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட நிறுவனத்துடனான வாடிக்கையாளர்களின் தொடர்பை வலுப்படுத்தவும் உதவுகிறது.
குறிப்பிட்ட நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்படும் புதிய பொருள்கள், புதிய சேவைகள், மாற்றப்பட்ட விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து வாடிக்கையாளர்களுக்கு எளிதாக மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த முடிகிறது. எனவே, பல்வேறு நிறுவனங்கள் மின்னஞ்சல் வாயிலான சந்தைப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றன.
தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதற்கேற்ப விளம்பரப்படுத்தும் உத்திகளும் மாறி வருகின்றன. புதிய வாடிக்கையாளர்களைக் கவர வேண்டுமெனில் நிறுவனங்கள் அந்த உத்திகளைக் கையாள வேண்டியது அவசியமாகிறது. புதிய நிறுவனங்களைத் தொடங்கும் இளைஞர்கள் இதில் கவனம் செலுத்தினால் வாடிக்கையாளர்களை எளிதில் அணுக முடியும்.
Veterinary and Animal Sciences University
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகள்...
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (Tamilnadu Veterinary and Animal Sciences University) கீழ் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசுக் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கால்நடைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கும் ஆராய்ச்சி மற்றும் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளில், 2021 - 2022 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
படிப்புகள்:
எம்.வி.எஸ்சி., (M.V.Sc.)
எம்.டெக்., - (M.Tech.) புட் டெக்னாலஜி, டயரி டெக்னாலஜி / டயரி கெமிஸ்ட்ரி, பொல்ட்ரி டெக்னாலஜி.
பிஎச்.டி., - (Ph.D.) வெட்டெரினரி அண்டு அனிமல் சயின்சஸ், புட் டெக்னாலஜி, பயோடெக்னாலஜி
பி.ஜி.டிப்ளமா - (Post graduate diploma) வெட்டெரினரி லேபரோட்டரி டயாக்னசிஸ், கம்பேனியன் அனிமல் பிராக்டீஸ், டயரி புராசசிங் அண்டு குவாலிட்டி சிஸ்டம், புட் டாக்சிகாலஜி அண்டு சேப்டி மேனேஜ்மெண்ட், ஸ்மால் அனிமல் எமர்ஜென்சி அண்டு கிரிக்டிக்கல் கேர் மெடிசின், ஸ்மால் அனிமல் டர்மட்டாலஜி.
கல்வித்தகுதி:
பொதுவாக, துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். எனினும், படிப்பிற்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். விரிவான தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 13.
விபரங்களுக்கு: https://tanuvas.ac.in/

முனைவர் பட்டப் படிப்பும் உதவித்தொகையும்!
முழுநேர முனைவர் பட்டப் படிப்பும் உதவித்தொகையும்!
பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) பரிந்துரையின் படி இன்னும் இரண்டு ஆண்டுகளில் அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்வதற்கு முனைவர் பட்டம் கட்டாயமாக்கப்படும் என்ற அறிவிப்பு 2 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்டது. கரோனாவின் தாக்கம் காரணமாக 2023, அக்டோபரிலிருந்து இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என்று யூ.ஜி.சி. சமீபத்தில் அறிவித்திருக்கிறது. இதனால் முன்பு இருந்ததை விடவும் முனைவர் பட்டப் படிப்புக்கான அனுமதி சேர்க்கை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது.
அதேபோல, ஏற்கெனவே தனியார் கல்லூரிகள், ஆய்வகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் பலரும் வேலையை விட்டுவிட்டு முழுநேர முனைவர் பட்டம் பயில்வதற்குச் சேர்கின்றனர். முழுநேர முனைவர் பட்டம் பெற்றால் மட்டுமே தொழிற்கல்விப் பட்டப் படிப்பைப் பயிற்றுவிக்கும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கும், அரசின் ஆராய்ச்சி மையங்களில் விஞ்ஞானி பணிக்கும் சேர முடியும் என்ற விதிமுறை அமலுக்கு வந்துள்ளதன் விளைவே இது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில்தான் அதிகமான அளவில் முனைவர் பட்டம் பெறுகிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். கேரள மத்திய பல்கலைக்கழகம் முழுநேர முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களிடத்தில் நடத்திய ஆய்வில் 70%-க்கும் அதிகமான மாணவர்கள் மனச்சோர்வுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கான காரணிகளாக போதிய உதவித்தொகை இல்லாமை, ஆய்வு வழிகாட்டியின் ஒத்துழைப்பின்மை, குடும்பப் பொருளாதாரச் சூழல், அதிக நேர உழைப்பு போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக உதவித்தொகை என்பது பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
முனைவர் பட்டம் பயிலும் மாணவர்கள் 25 வயதுக்கும் மேற்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். அந்த வயதில் உடன் படித்தவர்கள் எல்லாம் பெரும்பாலும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் நிலையில் இருக்கும்போது வீட்டில் பணம் பெற்றுப் படிப்பது என்பதே சங்கடமான சூழல்தான். அதிலும் உதவித்தொகை இல்லாமல் கல்லூரிக் கட்டணம், விடுதி உணவுக் கட்டணம், ஆய்வுக்குச் செலவாகும் தொகை, ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுவதற்குத் தேவையான கட்டணம் உள்ளிட்ட அனைத்துக்கும் பெற்றோரைச் சார்ந்திருப்பது என்பது ஏழ்மையான பின்னணியிலிருந்து வரும் மாணவர்களைப் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.
சீனா, பிரேசில் போன்ற நமக்கு இணையான நாடுகளில் ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் ஒதுக்கீடு செய்யும் தொகையில் கால் பங்குகூட இந்திய அரசு ஒதுக்குவதில்லை. ஒரு நாடு ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதைப் பொறுத்தே அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், இந்திய அரசு ஏனோ ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் தொகை ஒதுக்குவதில் சுணக்கம் காட்டிவருவதால் மேலும் நாம் ஆய்வில் பின்னோக்கிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். மத்திய அரசு வழங்கும் யூ.ஜி.சி. கல்வி உதவித்தொகை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வழங்கும் உதவித்தொகை குறைவான நபர்களுக்கே வழங்கப்படுவதால் பல முழுநேர முனைவர் பட்ட மாணவர்களின் படிப்பு என்பது மாநில அரசின் உதவித்தொகையை நம்பித்தான் இருக்கிறது.
சமீபத்தில் தமிழ்நாடு அரசு முழுநேர முனைவர் பட்டம் பயிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை ஆண்டுக்கு ரூ.50,000-லிருந்து ரூ. ஒரு லட்சமாக உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கான மாணவர்களின் குடும்பத்தின் வருமான வரம்பையும் ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தியுள்ளது. ஆனால், முழுநேர முனைவர் பட்டம் பயிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையானது மிகவும் குறைவாகவே வழங்கப்பட்டுவருகிறது.
குறிப்பாக, நாம் வேளாண்மையைத்தான் முக்கியத் தொழிலாகக் கருதுகிறோம். அதற்குக் காரணம் நம் நாட்டில் 60%-க்கும் அதிகமானோர் நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ வேளாண்மை மற்றும் அதுசார்ந்த தொழிலில் ஈடுபட்டுவருகிறார்கள். அப்படிப்பட்ட இன்றியமையாத வேளாண்மைத் துறையின் மேம்பாட்டுக்காக ஆய்வு மேற்கொள்ளும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ. 4,000 மட்டுமே உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இங்கு முதுநிலைப் பட்டம் பயிலும் மாணவர்களுக்கே ரூ.17,000 உதவித்தொகை வழங்கும் நிலையில் அதற்கும் மேல் படிக்கும் முனைவர் பட்டத்துக்குக் குறைவான உதவித்தொகையை அரசு வழங்குவது மாணவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
மேற்கு வங்கம், கேரளம், சத்தீஸ்கர், குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகங்களிலும், மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் முனைவர் பட்டம் பயில்வதற்குச் சேர்ந்தவுடன் மாதந்தோறும் ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை உதவித்தொகை அந்தந்த மாநில அரசுகளாலும் மத்திய அரசாலும் வழங்கப்படுகிறது. இதைவிட வேறு ஏதாவது அதிகமான உதவித்தொகைக்கு விண்ணப்பித்து அதை பெறும்வரை அந்த மாணவர் மாநில அரசின் உதவித்தொகையைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு அமைகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இப்படியான சூழல் இல்லை என்பதுதான் நிதர்சனம். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கல்விக் கட்டணமும் இங்கு அதிகமாகவே இருக்கிறது.
இதனால் பணவசதி படைத்தவர்கள் மட்டுமே முனைவர் பட்டம் பயிலக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. ஆர்வமும் திறமையும் இருந்தும் பணவசதி இல்லாத காரணத்தால் பலர் முனைவர் பட்டம் பயில முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு முழுநேர முனைவர் பட்டம் பயிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கும் உதவித்தொகையை மற்ற மாநிலங்களுக்கு இணையாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.
அதுதான் ஏற்கெனவே பயிலும் மாணவர்களுக்கும், புதிதாய் முனைவர் பட்டம் பயில்வதற்குச் சேரும் மாணவர்களுக்கும் உத்வேகமாய் இருக்கும். மாணவர்களின் நலனுக்காக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் அரசு இந்த விஷயத்திலும் நல்ல முடிவை எடுப்பது பலரது வாழ்வில் வெளிச்சத்தை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.
- மு. ஜெயராஜ், வேளாண் ஆராய்ச்சியாளர். தொடர்புக்கு: jayarajm96@gmail.com
நன்றி: இந்து தமிழ் திசை

Subscribe to:
Posts (Atom)
IIT madras உள்நுழைவது அத்தனை கடினமா?
IIT madras உள்நுழைவது அத்தனை கடினமா? என் மகன் ஆதில் முஹம்மத் முதலாம் ஆண்டு கல்லூரி சேருவதற்கு முன் அவனை சென்னை ஐஐடியில் சேர்த்து...
-
அறியப்படாத படிப்புகளை பற்றி அறிந்து கொள்வோமா..? பலரும் அதிகம் அறிந்திடாத, அதேவேளையில் அன்றாட பயன்பாட்டுடன் தொடர்பில் இருக்கும் விஷயங்களை உ...
-
அறிவோம் துணைமருத்துவ பட்ட படிப்புகள்: பி.எஸ்சி. - மருத்துவ ஊட்டச்சத்தியல் (B.Sc., Clinical Nutrition) இந்த பி.எஸ்சி. பட்டபடிப்ப...
-
IIT madras உள்நுழைவது அத்தனை கடினமா? என் மகன் ஆதில் முஹம்மத் முதலாம் ஆண்டு கல்லூரி சேருவதற்கு முன் அவனை சென்னை ஐஐடியில் சேர்த்து...