Welcome

WELCOME to Education++

Sunday, September 7, 2025

IIT madras உள்நுழைவது அத்தனை கடினமா?


IIT madras உள்நுழைவது அத்தனை கடினமா?

என் மகன் ஆதில் முஹம்மத் முதலாம் ஆண்டு கல்லூரி சேருவதற்கு முன் அவனை சென்னை ஐஐடியில் சேர்த்துவிட வேண்டும் என்பது எனது பெரிய ஆசையாக இருந்தது. ஆனால் ஆதில் இதுபற்றி தீர்மானமாகவே இருந்தான். ஐஐடி எல்லாம் சேர வேண்டும் என்றால் 10 &12 மதிப்பெண்கள் 75% இருக்கவேண்டும். அதுபோக அங்கு B.tech  சேர JEE exam எழுதி  JoSSA என்ற கல்வி நிறுவனம் நடத்தும் கவுன்சிலிங்கில் தேர்ச்சி பெற வேண்டும் என்றான். 

பத்தாம் வகுப்பு கோவிட் நேரம் என்பதால் ஆல் பாஸ் கேட்டகிரியில் சென்றுவிட்டது. பனிரண்டாம் வகுப்பில் 87% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப்பெற்றாலும் அவனுக்கு பிடெக் அல்லது மருத்துவம் படிக்கவெல்லாம் விருப்பம் இல்லாதிருந்தது. அவனது ஒரே விருப்பம் வணிகவியல் தான், நம் பேராசிரியர் Ali MA அவர்களிடம் தொலைப்பேசி கவுன்சிலிங் பெற்ற பிறகும் அவன் காமர்ஸ் தான் வேண்டும் என அடம்பிடிக்க ,அருகிலுள்ள புதுக்கல்லூரியில் சேர்த்துவிட்டோம். 

அவனது விருப்பம் என்பதை காட்டிலும் அதில் தனக்கு இருந்த ஆர்வத்தை அவனது துறையில் விடா முயற்சியில் கடந்த  இரண்டாண்டுகளிலும்  முதல் மதிப்பெண்ணுக்கான தங்கப்பதக்கங்கள் பெற்றது அவனது அந்த துறையில் இருக்கும் ஈடுபாட்டினை  எடுத்துரைக்க போதுமாக இருந்தன. 

இப்போதும் என்னிடம் ஐஐடியில் சேர என்ன கல்வித்தகுதி என கேட்போர் இருக்கவே செய்கின்றனர். பணமோ அலைச்சலோ எங்களுக்கு பெரிதல்ல, உலக பிரசித்தம் பெற்ற சென்னை ஐஐடியில் எங்கள் பிள்ளை படிக்க வேண்டும் என்ற பேரார்வம் உடைய மக்கள் அதுபற்றி கேட்கும் போது நாம் இவற்றை சுட்டிக்காட்டினால் கொஞ்சம் தலைசுற்றித்தான் போகின்றனர்.

12 ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் எடுத்துக்கொண்டு ஐஐடியில் அட்மிஷன் போட உங்களுக்கு இவை எல்லாம் தேவை.

B.tech : 12th 75% marks with JEE exam , Jossa counselling

B.sc data science - 10 and 12  , English and Mathematics marks 
with IIT entrance exam

M.tech - UG marks should be 60% with GATE exam + COAP counselling

MBA - UG degree with 60% marks with CAT exam + interview and Reflective writing 
(பிரதிபலிக்கும் எழுத்து என்றால், "ஒரு தனிப்பட்ட அனுபவத்தை விவரித்து, பின்னர் புதிய நுண்ணறிவுகளையும் அறிவையும் பெற பகுப்பாய்வு ரீதியாக கேள்வி கேட்பது, விளக்குவது மற்றும் மதிப்பீடு செய்வது, பெரும்பாலும் அதை அறிவுசார் கோட்பாட்டுடன் இணைத்து எதிர்கால செயல்களைத் தெரிவிப்பது ஆகும்")

M.sc - UG + IIT JAM exam 

PhD - PG degree with GATE exam or 
UGC/CSIR NET JRF scores + 
 Personal Interview.

B.sc -  without JEE - online BSc in Data Science and Applications and online BSc in Electronic Systems programs marks with a entrance exam , 12 mathematics marks is must

மற்றபடி பிராமண குருகுலத்தில் ஐந்து வருடம் படித்து தேறிய ஒரு மாணவர் JEE உள்ளிட்ட இதர தேர்வுகள் எதுவும் எழுதாமலே ஐஐடியில் சேர முடியும் என்ற விபரம் பற்றி எனக்கு விரிவான விளக்கம் தெரியாது. மொத்தத்தில் ஒரு மாணவர் ஐஐடியில் சேர எட்டாம் வகுப்பு முதலாகவே ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களில் சிறந்து விளங்க வேண்டும் . பத்தாம் வகுப்பு மற்றும் பனிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கு எட்டாம் வகுப்பு முதலாகவே தங்களை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைத் தான் இதன் வாயிலாக இங்கே சொல்ல முனைகிறேன்.

என் மகன்கள் இருவருமே படிப்பில் மிக கெட்டி, அண்ணனை பின்பற்றி தம்பியும் எப்போதும் வகுப்பில் முதல் மதிப்பெண்ணை தக்க வைத்துக்கொண்டே வருவார்கள், ஓரிரு மதிப்பெண்களில் முதல் ரேங்க் என்பதை என்றாவது கோட்டைவிட்டால் அவர்கள் அடையும் சோகமும் அழுகையும் நமக்கு பெண் குழந்தைகளையே ஞாபகப்படுத்தும். பள்ளியில் முதல் மாணவர்கள் என்றாலும் நாம் நினைத்தபடி ஐஐடியில் நுழைந்துவிட முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது . நுழைவுத்தேர்வுகளுக்கான போதிய ஆற்றலும் முயற்சியும்  நமக்குத் தேவை.

நான் சிறுவயதாக இருந்தபோது மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் படிப்பது தான் பெருமை என சொல்லப்பட்டு வந்தோம். அங்க படித்தாலே தனிவிதமான மதிப்பு, மரியாதை அதுபோக அந்த மாதிரி பாரம்பரியமிகு ஒரு கல்லூரியில் படிப்பது என்பது இறைவன் நமக்களிக்கும் அருட்கொடை என்றெல்லாம் எங்களது பள்ளி ஆசிரியர்கள் எங்களுக்கு ஆர்வமூட்டுவார்கள். 

ஆனால் நான் B.sc Geology படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னை பல்கலையில் இணைந்தபோது அங்கு சந்தித்த ஒரு நற்பேராசிரியர் நெப்போலி அவர்களிடம் இதுபற்றி கேட்டபோது, ஆம்! அது உண்மைதான், ஆனால் அங்கே Geology, Geography, Climatology இப்படி Fields of Geography படிப்பிற்கு Departments இல்ல , அந்த Programmes எதுக்கும் அங்க வேலையே இல்லை என்றார். நாம் கற்க நினைக்கும் ஒரு பாடம் மாபெரும் கல்விசாலையில் கற்பிக்கப்படுவதில்லை என்பது எத்தனை சோகம்?

B.sc geology பாடத்தில் Climatology assignment எழுதக்கூறிய பேரா.நெப்போலியிடம் குர்ஆனில் இருந்து வசனம் எடுத்து காற்று குறித்த ஒரு விபரத்தை எழுதித் தந்த அந்தக் கட்டுரை Reflective writing என எனக்கு அறிவித்து பாராட்டியவர், உனக்கு அங்கல்லாம் இடமே கிடைக்காது என்று கூறியதை நினைவுபடுத்தி, நமக்குப் பிடித்த பாடத்தை தேர்ந்தெடுத்துப் படித்தால் மட்டுமே அதில் நாம் Excellency யை காண்பிக்க முடியுமே தவிர படிக்கப் போகும் நிறுவனங்களால் அதனை நம்மிடம் உருவாக்க முடியாது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

கல்வி கற்பதற்கான ஆசையை வளர்த்துக்கொள்ளுங்கள், என்னென்ன பாடப்பிரிவுகள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள், காகிதங்களிலும் டிஜிட்டல் எழுத்துக்களிலும் தியரியாக படிப்பதைக் கடந்து எதுவொன்றையும் பிராக்டிகல் ஆய்வு செய்ய கற்றுக்கொள்ளுங்கள் அல்லது நீங்கள் சதா ஆராய்ச்சி செய்துகொண்டே இருக்கும் ஒன்றினைப் பற்றி ஆழமாக தெரிந்துகொள்ளும்படியான படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்க கற்றுக்கொள்ளுங்கள். ஐஐடி மட்டுமல்ல உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் உங்களை இருகைநீட்டி வரவேற்றுக்கொள்ளும்.

Sunday, August 31, 2025

அறிவோம் துணைமருத்துவ பட்ட படிப்புகள்: பி.எஸ்சி. - மருத்துவ ஊட்டச்சத்தியல் (B.Sc., Clinical Nutrition)


அறிவோம் துணைமருத்துவ பட்ட படிப்புகள்: பி.எஸ்சி. - மருத்துவ ஊட்டச்சத்தியல் 
(B.Sc., Clinical Nutrition)

இந்த பி.எஸ்சி. பட்டபடிப்பு நான்கு வருட படிப்பு. மூன்று வருடங்கள் படிப்பும் ஒரு வருடம் பயிற்சியுமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்வியில் அடிப்படை & மேம்பட்ட ஊட்டச்சத்தியல் , அடிப்படை & மேம்பட்ட உணவியல் , உடல் இயங்குவியல், ஊட்டச்சத்து சார்ந்த உயிர் வேதியியல், உணவுத் துறை சார்ந்த நுண்ணியிரியியல், உணவுத்துறை அறிவியல்,  சமூக ஊட்டச்சத்தியல், உணவு சார்ந்த பரிந்துரை வழங்குதல் போன்றவை குறித்து களப்பயிற்சி வழங்கப்படும். 

பல்வேறு இணைநோய் கொண்ட மக்களுக்கு எவ்வாறு உணவு பரிந்துரை வழங்க வேண்டும் என்பது குறித்த கல்வி பயிற்றுவிக்கப்படும் 

எதிர்காலம் - மருத்துவமனைகளில் மருத்துவம் சார்ந்த ஊட்டச்சத்து மற்றும் உணவியல் பரிந்துரையாளராக பணிபுரியலாம்.  சுயமாகவும் ஊட்டச்சத்து சார்ந்த உணவுமுறை பரிந்துரை செய்யும் நிபுணராக விளங்க முடியும். 

கல்வித் தகுதி

அறிவியல் பாடங்களுடன் மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MPCB அல்லது PCBZ அடங்கிய பாடதொகுப்பில் மேல்நிலை (10+2) கல்வி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவியல் பாடத்தொகுப்பில் அல்லது பயோமேத்ஸ் பாடத்தொகுப்பில் ஆங்கிலம் உட்பட பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

எங்கு படிப்பது?

தமிழகத்தில் எண்ணற்ற பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. பெரும்பாலான தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் இந்த படிப்பு வழங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளிலும் படிக்கலாம். 

கட்டணம்:

அரசு மருத்துவ கல்லூரியில் ஆண்டுக்கு ₹ 3000/- மட்டும்.
 
அரசு ஒதுக்கீட்டில் கலந்தாய்வு மூலம் தனியார்/சுயநிதி கல்லூரியில் சேந்தால், ஆண்டுக்கு ₹ 35000/- - 40,000/-.

சுயநிதி கல்லூரியில் தேரடி/மேனேஜ்மென்ட் சீட்டில் சேர்ந்தால், ஆண்டுக்கு 1,00,000/-.

கூடுதல் தகவல்களுக்கு: 

The Tamil Nadu Dr. M.G.R. Medical University
https://www.tnmgrmu.ac.in

Directorate of Medical Education and Research, Selection Committee

https://tnmedicalselection.net

The B.Sc. in Clinical Nutrition, Dietetics & Food Science is a 4-year undergraduate program, including a full-time internship in the final year. This interdisciplinary course blends medical nutrition therapy, public health dietetics, and food science to prepare students for careers in hospitals, wellness clinics, research, and food industries.

Highlights:
*  3 years academic + 1 year clinical internship
*  Practical training in hospitals and food labs
*  UGC/AICTE-approved curriculum
*  Real-world exposure to therapeutic nutrition and diet planning

Program Objectives:
 
1.  Understanding the function and role of nutritionists and dieticians in hospitals, clinics, nursing homes, gyms, corporate sectors, food industries, and other healthcare institutions.
2.  Developing knowledge, abilities, and a comprehensive understanding of the subject to prepare for a career as a teacher at the secondary, college, or university levels after completing advanced studies in a related field.
3.  Planning diets for both healthy and ill members of society to improve health management and disease prevention.
4.  Fostering an entrepreneurial mindset so that one can one day own their own successful business.
5.  Gaining a thorough understanding of the human body.

Thursday, August 28, 2025

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க ஆசையா? இந்தியாவில் டாப் கல்லூரிகள் இவைதான்!


மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க ஆசையா? இந்தியாவில் டாப் கல்லூரிகள் இவைதான்!

கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு இணையாக விரும்பப்படும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்; என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை, வேலை வாய்ப்பு அடிப்படையில் இந்தியாவில் டாப் கல்லூரிகளின் பட்டியல் இங்கே...

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், ஜே.இ.இ மெயின் (JEE Main) போன்ற பொறியியல் நுழைவுத் தேர்வுகளை 1.5 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் எழுதுகிறார்கள். குறிப்பாக ஜே.இ.இ மெயின் மற்றும் ஜே.இ.இ அட்வான்ஸ்டு (JEE Advanced) போன்ற சிறந்த போட்டித் தேர்வுகளுக்கு கிட்டத்தட்ட 1.2 மில்லியன் பேர் எழுதுகிறார்கள். இந்த விண்ணப்பதாரர்களிடையே முக்கிய போட்டி இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (IIT) சேர்க்கையை மையமாகக் கொண்டுள்ளது, குறிப்பாக கணினி அறிவியலின் பிரபலம் அதிகரித்து வரும் போதிலும் பாரம்பரிய விருப்பமானதாகத் தொடரும் இயந்திர பொறியியல் போன்ற விரும்பத்தக்க துறைகளில் சேர மாணவர்கள் விரும்புகின்றனர்.

இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

மைய பொறியியல், வடிவமைப்பு, எரிசக்தி அமைப்புகள், ரோபாட்டிக்ஸ், வெப்ப அறிவியல் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் அதன் பரந்த நோக்கம் காரணமாக, ஐ.ஐ.டி.,களில் மட்டுமல்ல, சமீபத்திய என்.ஐ.ஆர்.எஃப் (NIRF) தரவரிசைகளால் அங்கீகரிக்கப்பட்ட பல மதிப்புமிக்க ஐ.ஐ.டி அல்லாத நிறுவனங்களிலும் இயந்திர பொறியியல் ஒரு விருப்பமான துறையாக உள்ளது.

என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை 2024 இன் படி இயந்திர பொறியியலில் பி.டெக் படிப்புக்கான முதல் 10 ஐ.ஐ.டி அல்லாத நிறுவனங்களின் பட்டியல் இங்கே

தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு

வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் தமிழ்நாடு

ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் மேற்கு வங்கம்

அண்ணா பல்கலைக்கழகம் (CEG) தமிழ்நாடு

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் கர்நாடகா, சூரத்கல் கர்நாடகா

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ரூர்கேலா ஒடிசா

பிர்லா தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அறிவியல் நிறுவனம், பிலானி ராஜஸ்தான்

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் வாரங்கல் தெலுங்கானா

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி (NIT Trichy) 

1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி (NIT Trichy), மிகவும் பிரபலமான இயந்திர பொறியியல் துறைகளில் ஒன்றாகும், இது அதன் ஆரம்பகால பிரிவுகளில் ஒன்றாகும். இந்தத் துறை இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகளை வழங்குகிறது, வெப்ப அறிவியல் மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற துறைகளில் கடுமையான கல்வி மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சியுடன்.

என்.ஐ.டி திருச்சியின் இயந்திர பொறியியல் பட்டதாரிகள், முக்கிய மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் இருந்து சிறந்த ஆட்சேர்ப்பு செய்பவர்களை தொடர்ந்து ஈர்க்கின்றனர், சமீபத்திய வேலைவாய்ப்பு விகிதங்கள் சுமார் 91% மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான சராசரி சம்பளம் ஆண்டுக்கு சுமார் ரூ.9.5 லட்சமாக உள்ளது.

வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் (VIT)

1984 இல் நிறுவப்பட்ட வேலூர் தொழில்நுட்ப நிறுவனம், ஒரு இயந்திர பொறியியல் பள்ளியைக் கொண்டுள்ளது. அதன் வலைத்தளத்தின்படி, இந்த நிறுவனம் அதிநவீன ஆய்வகங்கள், தொழில்துறையுடன் ஒத்துழைப்பு மற்றும் பல துறை ஆராய்ச்சியில் கவனம் செலுத்துகிறது. வி.ஐ.டி நிறுவனத்தின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றான இந்தத் துறை, மாணவர்கள் புதுமையான திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளில் பங்கேற்க உதவுகிறது.

வேலைவாய்ப்பு முடிவுகள் அதன் தொழில் வலையமைப்பைப் பிரதிபலிக்கின்றன, இயந்திர பொறியியல் மாணவர்கள் சராசரியாக ரூ.9.9 லட்சம் தொகுப்புகளைப் பெறுகிறார்கள் மற்றும் அதிகபட்ச தொகுப்பு ஆண்டுக்கு ரூ.88 லட்சத்தைத் தொடும் என்று கூறப்படுகிறது; துறையின் கிட்டத்தட்ட பாதி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தொழில்நுட்ப மற்றும் வாகன ஆட்சேர்ப்பு செய்பவர்களுடன் பணிபுரிகின்றனர்.

ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்

1955 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், இந்தியாவின் பழமையான இயந்திர பொறியியல் துறைகளில் ஒன்றைக் கொண்டுள்ளது, இதன் தோற்றம் 1906 ஆம் ஆண்டுக்கு முந்தையது. இந்தத் துறை அதன் மதிப்புமிக்க முன்னாள் மாணவர்கள், ஆராய்ச்சி மற்றும் புதுமை கலாச்சாரம் மற்றும் விரிவான கல்வி சலுகைகளுக்காக நாடு தழுவிய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு பருவத்தில், இந்தத் துறை 100% வேலைவாய்ப்பு விகிதத்தைப் பதிவு செய்தது, சிறந்த உள்நாட்டு தொகுப்புகள் ரூ.57 லட்சம் வரை மற்றும் சராசரியாக ரூ.11 லட்சம் சலுகைகளுடன், முக்கிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் வலுவான உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை (CEG)

கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ரீதியாக 1978 இல் நிறுவப்பட்டது, இருப்பினும் அதன் தோற்றம் 1794 இல் நிறுவப்பட்ட பொறியியல் கல்லூரியில் இருந்து அறியப்படுகிறது.
சமீபத்திய தரவுகளின்படி, வேலைவாய்ப்பு விகிதங்கள் சுமார் 95% ஆக உள்ளன, இயந்திர பட்டதாரிகளுக்கான தொகுப்புகள் ரூ.8 லட்சம் முதல் ரூ.39 லட்சம் வரை, புகழ்பெற்ற இந்திய மற்றும் உலகளாவிய நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.

கர்நாடகா தேசிய தொழில்நுட்ப நிறுவனம், சூரத்கல் (NITK)

1960 இல் நிறுவப்பட்ட என்.ஐ.டி சூரத்கலின் இயந்திர பொறியியல் துறை, கல்வி கடுமை மற்றும் தொழில் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் நெருங்கிய ஈடுபாடு மூலம் அதன் நற்பெயரைப் பெற்றுள்ளது.

துறையின் சமீபத்திய வேலைவாய்ப்பு பதிவு அதன் வலிமையைக் காட்டுகிறது: 85% இயந்திர பொறியியல் பட்டதாரிகள் இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் மற்றும் ஆலோசனை நிறுவனங்களில் சிலவற்றில் ஆண்டுக்கு ரூ.16 முதல் ரூ.24 லட்சம் வரை சராசரி சம்பளம் பெற்றனர்.

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ரூர்கேலா

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ரூர்கேலா, 1961 இல் நிறுவப்பட்டது, இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி திட்டங்களை வழங்குகிறது.

அடிப்படை மற்றும் வேகமாக வளர்ந்து வரும் துறைகள் இரண்டிலும் துறையின் கவனம், 2024 இல் 98% சிறந்த வேலைவாய்ப்புகளுக்கு பங்களித்துள்ளது, சராசரியாக ஆண்டுக்கு ரூ.16 லட்சம் மற்றும் கோர் பொறியியல் நிறுவனங்களிடமிருந்து ரூ.26 லட்சத்தை எட்டிய முதல் சலுகையும் உள்ளது.

பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனம், பிலானி (பிட்ஸ் பிலானி)

பிட்ஸ் பிலானி (BITS PILANI) 1964 இல் நிறுவப்பட்டது, ஆனால் அதன் இயந்திர பொறியியல் திட்டம் 1946 ஆம் ஆண்டுக்கு முந்தையது, இது நாட்டின் பழமையான நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்தத் துறை கோட்பாட்டு கடுமையை நடைமுறை தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி வெளிப்பாட்டுடன் இணைப்பதற்கும், 90% க்கும் அதிகமான வேலைவாய்ப்பு விகிதங்களைப் பராமரிப்பதற்கும் பெயர் பெற்றது. இயந்திர பட்டதாரிகள் சமீபத்தில் சராசரியாக ரூ.18 லட்சம் சம்பளம் பெற்றனர், முக்கிய பொறியியல், பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேர்ந்தனர்.

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் வாரங்கல்

வாரங்கல் தேசிய தொழில்நுட்ப நிறுவனம், 1959 இல் நிறுவப்பட்டது, கல்வி மற்றும் ஆராய்ச்சியில் புதுமை மற்றும் தலைமைத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட இயந்திர பொறியியல் துறையைக் கொண்டுள்ளது.

2024 வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள்: இயந்திர பட்டதாரிகளில் 83% பேர் பணிகளில் தேர்ச்சி பெற்றனர், சராசரியாக ஆண்டுக்கு ரூ.13.6 லட்சம் மற்றும் அதிகபட்ச தொகுப்பு ஆண்டுக்கு ரூ.34.1 லட்சம் வரை சென்றது.

ஆங்கில அறிவை சோதிக்கும் ‘டோபல்’ தேர்வும், அதன் தனித்துவமும்...


ஆங்கில அறிவை சோதிக்கும் ‘டோபல்’ தேர்வும், அதன் தனித்துவமும்...

(TOEFL - Test of English as a Foreign Language)

ஒரு மாணவரின் ஆங்கில மொழித்திறனை சிறப்பாக அளவிட விரும்பும் கல்வி நிறுவனங்களுக்கு, ஏறக்குறைய 50 வருடங்களாக ‘டோபல் தேர்வு’ என்பது ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. ஒரு மாணவரின், ஆங்கில மொழித் திறமையினை, படித்தல், பேசுதல், எழுதுதல் மற்றும் கவனித்தல் ஆகிய அம்சங்களில் இத்தேர்வு அளவிடுகிறது. மேற்கூறிய திறன்கள்தான், ஒரு மாணவர், வகுப்பறையில் சிறந்து விளங்க தேவையானவை.

ஒரு மாணவர், ஏதேனும் ஒரு பத்தியை படித்துக் காட்டுமாறு கேட்கப்படலாம் மற்றும் அதே தலைப்பில், ஒரு விரிவுரையை கேட்குமாறு சொல்லப்படலாம் மற்றும் இரண்டையும் இணைத்து, பேசுமாறோ அல்லது எழுதுமாறோ கேட்கப்படலாம்.

டோபல் தேர்வு என்பது, நடைமுறை வாழ்வுக்கு தேவையான ஆங்கிலத் திறன்களை மதிப்பிடுகிறது. எனவே, வகுப்பறை செயல்பாட்டில் தேவைப்படும் திறன்கள் எவை என்பதை பற்றி மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

வேறு எந்த ஆங்கில மொழித்திறன் தேர்வுகளை விடவும், டோபல் தேர்வே, உலகெங்கிலும் அதிகளவில் ஏற்கப்படும் ஒன்றாக திகழ்கிறது. இன்றைய நிலையில், 130-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த, 8500-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், இத்தேர்வை ஏற்றுக்கொள்கின்றன மற்றும் அவைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.

உலகளாவிய அளவில், ஏராளமான கல்வி நிறுவனங்களால், இத்தேர்வு ஏற்கப்படுவதால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளின் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் மாணவர்கள், இத்தேர்வை மட்டும் எழுதினால் போதுமானது. இதனால், ஒரு மாணவருக்கு நேரமும், உழைப்பும் மிச்சமாகிறது. மொத்தம் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில், 4500-க்கும் மேற்பட்ட டோபல் தேர்வு மையங்கள் உள்ளன. அரை நாளில், மாணவர்கள், மதிப்பீட்டை நிறைவு செய்ய முடியும். எனவே, கூடுதலாக, தங்குமிடம் மற்றும் போக்குவரத்திற்கு செலவு செய்ய வேண்டியதில்லை.

சர்வதேச மதிப்பில் 165 டாலர்களும், இந்திய மதிப்பில் ரூ.7,500-ம் செலவாகிறது. இந்திய மாணவர்கள் விரும்பினால், ஆன்லைன் பதிவு அமைப்பின் மூலமாக, பணமாகவே, கட்டணத்தை செலுத்தும் வசதி, தற்போது செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், தேர்வு தேதியை மாற்ற விரும்பினாலோ, மறுமதிப்பீட்டிற்கு கோரினாலோ, கூடுதல் மதிப்பெண் பட்டியல் தேவைப்பட்டாலோ, அவைகளுக்கான கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

என்ன ஸ்பெஷல்?

டோபல் தேர்வை அங்கீகரிக்கும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை, பிற தேர்வுகளை விட மிகவும் அதிகம். இத்தேர்வு, ஒரு மாணவரின் ஆங்கிலத் திறனை, மிக நுட்பமாக அளவிடுகிறது. வாசித்தல் மற்றும் சுருக்கி எழுதுதல் போன்ற நடைமுறை உலகின் கல்வி சவால்களை இத்தேர்வு பிரதிபலிக்கிறது. மேலும், டோபல் தேர்வானது, சோதிப்பது மற்றும் அதை குறிப்பெடுப்பது போன்ற செயல்பாடுகளினால் தனித்துவம் பெறுகிறது. இதன் மூலம், மதிப்பெண் வழங்கும் செயல்முறையானது, நேர்மையாக நடப்பது, உறுதி செய்யப்படுகிறது.

மதிப்பெண் செயல்முறையானது, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக பின்பற்றப்படுகிறது. இதைத்தவிர, டோபல் மதிப்பாய்வு செயல்பாடானது, ஒவ்வொரு தேர்வருக்கும், பலவிதமான மதிப்பீட்டாளர்களின் மதிப்புரைக்கு அனுப்பப்படுகிறது. இதன்மூலம், ஒரே நபரின் கருத்தின் மூலம் முடிவு செய்வது தவிர்க்கப்படுகிறது. உதாரணமாக, பேசுதல் பகுதியானது, 3 முதல் 6 ஆங்கிலப் புலமையுள்ள நிபுணர்களால் மதிப்பிடப்படுகிறது.

இத்தேர்வில் பின்பற்றப்படும், மனிதர் மற்றும் தானியங்கி மதிப்பெண் முறையால், இதன் மதிப்பிடும் முறை, மிகவும் தரமானதாகவும், நம்பத்தகுந்ததாகவும் இருக்கிறது. இதன் மூலம், டோபல் தேர்வில் ஒருவர் பெறுகின்ற மதிப்பெண், உண்மையிலேயே, அவரின் திறமைக்கு கிடைத்ததுதான் என்பதை எளிதாக உறுதி செய்யலாம்.

https://www.ets.org

TOEFL 
Test of English as a Foreign Language is a standardised test to measure the English language ability of non-native speakers wishing to enroll in English-speaking universities. The test is accepted by more than 11,000 universities and other institutions in over 190 countries and territories. 

Fee: iBT: US$ 185 and up, depending on the country.

Year started: 1964; 58 years ago

Prerequisites / eligibility criteria: No official prerequisite. Intended for non-native English speakers

Countries / regions: 4,500 test centers in over 190 countries and territories.

Score / grade validity: 2 years

Scores / grades used by: More than 11,000 colleges, agencies and other institutions in over 150 countries.

Annual number of test takers: 2.3 million

(இது ஒரு மீள் பதிவு)

ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி.யில் சேர்ந்து படிப்போமா...!


ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி.யில் சேர்ந்து படிப்போமா...!

ஐ.ஐ.டி., என்.ஐ.டி.யில் என்ஜினீயரிங் படிப்பது என்பது பல மாணவர்களின் கனவு. ஆனால், அது இறுதிவரை பலருக்கும் கனவாகவே இருந்துவிடும். ஏனெனில் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் வழிதவறிவிடுவார்கள். அப்படி ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி. பற்றிய புரிதலை உண்டாக்கும் தொகுப்பாக இதை பதிவு செய்கிறோம்.

ஐ.ஐ.டி (IIT - Indian Institute of Technogy): 

மற்ற பொறியியல் கல்லூரிகளைப் போல வெறும் பிளஸ்-2 மதிப்பெண்களை மட்டுமே வைத்துக்கொண்டு மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் நுழைந்து விட முடியாது. இதற்கென்று தனியாக நுழைவுத்தேர்வுகள் இருக்கின்றன. ஜே.இ.இ. மெயின் தேர்வினை எழுதி, அதில் அதிக கட்- ஆப் மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றால்தான், ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி.களில் நுழைய முடியும்.

பாடப்பிரிவுகள்:

பி.டெக்., இளநிலையில் ஏரோஸ்பேஸ், விவசாயம், செராமிக், எனர்ஜி, தாது வளங்கள், நேவல் ஆர்கிடெக்‌ஷர், ஓஷன் என்ஜினீ யரிங், பயோ டெக்னாலஜி, கெமிக்கல், பயோ மெடிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் டெலி கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமெண்டேஷன், இண்டஸ்டிரியல் என்ஜினீயரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, இன்ஸ்ட்ருமெண்டேஷன், மெட்டலார்ஜிக்கல், மெக்கானிக்கல், மைனிங், புரொடெக்‌ஷன் அண்ட் இண்டஸ்டிரியல், டெக்ஸ்டைல், இயற்பியல் மற்றும் பெட்ரோலியம் ஆகிய துறைகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

ஐ.ஐ.டி.,க்கள் எங்கெங்கு உள்ளன?: 

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி., தமிழகத்தில் சென்னையில் உள்ளது. தவிர, மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், காரக்பூர், ரூர்க்கி, வாரணாசி, தன்பாத் ஆகிய இடங்களிலும் உள்ளன.

வேலைவாய்ப்பு: 

ஐ.ஐ.டி.,க்களில் பி.டெக்., தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து எம்.டெக்., எம்.பி.ஏ., போன்ற உயர்கல்வி படிக்கலாம். பெரும்பாலும், ஐ.ஐ.டி.க்களில் இறுதி ஆண்டு படித்து கொண்டிருக்கும்போதே வளாக தேர்வு மூலம் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் அவர்களை அழைத்து போய்விடுவதுண்டு.

இணையதளம்:

ஜே.இ.இ., மெயின் மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வுகள் பற்றிய கூடுதல் விவரங்களை www.jeemain.nic.in மற்றும் www.jeeadv.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்து அறியலாம்.

என்.ஐ.டி.

ஐ.ஐ.டி., போல என்.ஐ.டி. என்பதும் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனம்தான். இங்கும் ஐ.ஐ.டி.போல பலவிதமான பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன. என்.ஐ.டி.யில் சேர்ந்து படிக்கவும், ஜே.இ.இ. தேர்வு அவசியமாகிறது.

தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில், துவாகுடியில் என்.ஐ.டி. உயர்கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும், புதுச்சேரி, குருஷேத்ரா, கொல்கத்தா, டெல்லி, அகர்தலா, துர்காபூர், கோவா, போபால், ஜெய்ப்பூர், அலகாபாத், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, ஜலந்தர், ஜாம்ஷெட்பூர், நாக்பூர், பாட்னா, ராஜ்பூர், ரூர்கேலா, சிக்கிம், சில்சார், ஸ்ரீநகர், சூரத், சூரத்கல், உத்தரகாண்ட், வாரங்கல், அருணாச்சல பிரதேசம், ஹமீர்பூர் ஆகிய இடங்களில் என்.ஐ.டி. உயர்கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகின்றன. ஐ.ஐ.டி.யில் படித்தால் என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்குமோ அதே வரவேற்பு என்.ஐ.டி.யில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கும் உண்டு.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஐ.ஐ.டி., என்.ஐ.டி.யில் படித்த மாணவர்களுக்கே முன்னுரிமை அளித்து வேலைக்குத் தேர்வு செய்கின்றன. சுயதொழிலும் தொடங்கலாம். மேலும், எம்.டெக்., மற்றும் எம்.பி.ஏ., போன்ற முதுநிலை தொழில்படிப்புகளையும் தொடரலாம்.

(இது ஒரு மீள் பதிவு)

ஜே.இ.இ.தேர்வும், வழிகாட்டுதலும்...!


ஜே.இ.இ.தேர்வும், வழிகாட்டுதலும்...!

இந்தியாவின் பொறியியல் படிப்புக்கு புகழ்பெற்ற என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் சேர ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு (JEE - Joint Entrance Exam) அவசியமாகிறது. அதுபற்றிய விரிவான விளக்கங்களை வழங்குகிறார், ஸ்ரீராம். தஞ்சாவூரை சேர்ந்தவரான இவர், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த வழிகாட்டுதல் பணியை கடந்த 5 வருடமாக, இலவசமாக செய்து வருகிறார். அவரிடம், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு பற்றிய சிறு நேர்காணல்... 

ஜே.இ.இ.தேர்வு பற்றி கூறுங்கள்? 

இந்தியாவின் தலைசிறந்த பேராசிரியர்கள், உலக தரத்திலான சோதனை கூட வசதிகள் இருக்கும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ந்து படிக்க, இந்த ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு வழிகாட்டுகிறது. 

யாரெல்லாம் எழுதலாம்? 

பிளஸ்-2 வகுப்பில் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடம் பயின்றவர்கள் யார் வேண்டுமானாலும், தமிழ் உள்பட 13 விருப்ப மொழிகளில் இந்த தேர்வினை எழுதலாம். குறிப்பாக சி.பி.எஸ்.இ., அரசுப்பள்ளி, மெட்ரிக்குலேஷன்... என எல்லா விதமான பாடத்திட்டங்களில் பயின்றவர்களும், இந்த தேர்வினை எழுதலாம். 

எப்போது, இந்த தேர்வு நடைபெறும்? 

முன்பு ஒரு ஆண்டிற்கு, இரு முறை நடத்தப்பட்ட ஜே.இ.இ.தேர்வு, இப்போது 4 முறை நடத்தப்படுகிறது. பிளஸ்-2 மாணவர்கள், நான்கு முறையும் எழுதலாம். நான்கு தேர்விலும், அதிகபட்ச மதிப்பெண் பெறும் தேர்வினை தகுதியாக எடுத்துக் கொள்வார்கள். 

இதில் தேர்ச்சி பெற்றால், எங்கெல்லாம் படிக்கலாம்? 

மெட்ராஸ் ஐ.ஐ.டி., திருச்சி என்.ஐ.டி. போன்று இந்தியா முழுக்க இருக்கும் 23 ஐ.ஐ.டி., 31 என்.ஐ.டி., 19 மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், பல தனியார் கல்லூரிகள் என பல கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில, இந்த தேர்வு வழிவகுக்கும். 

என்னென்ன பொறியியல் படிப்புகளை படிக்கலாம்? 

60-க்கும் மேற்பட்ட படிப்புகளில் சேர இந்தத் தேர்வு அரிய வாய்ப்பு அளிக்கிறது. பி.டெக். பி.பிளானிங், பி.டிசைன், பி.ஆர்க்., போன்ற இளநிலை பொறியியல் படிப்புகளில் சேரலாம். எம்.பிளானிங், எம்.எஸ்சி., எம்.டெக்., எம்.பி.ஏ., போன்ற இரட்டை பட்டப்படிப்புகளிலும் சேர்ந்து படிக்கலாம். ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளிலும் சேரலாம். 

பிளஸ்-2 மாணவர்கள் எழுதலாமா? ஆம்...! 

பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள்கூட, எதிர்காலத்தை கட்டமைக்கும் நோக்கில் இத்தேர்வை எழுதலாம். அதேபோல 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இத்தேர்வை எழுதலாம். அதாவது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்டிலும் அடுத்த இரண்டு ஆண்டுகளிலும் ஜே.இ.இ. தேர்வை எழுத முடியும். 

தேர்வு நடைமுறை எப்படி இருக்கும்? 

இரண்டு கட்டமாக ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படும். முதல் தேர்வு ஜே.இ.இ. மெயின் (JEE Main) எனப்படுகிறது. இரண்டாம் தேர்வு ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் (JEE Advanced) என அழைக்கப்படுகிறது. இரண்டும் இரு தாள்களைக் கொண்டது. முதலில் ஜே.இ.இ.மெயின் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றுவிட்டால், என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. (I.I.I.T-International Institute of Information Technology) நிறுவனங்களில் சேர்ந்து படிக்கலாம். ஆனால் ஐ.ஐ.டி. (I.I.T-Indian Institute of Technology) கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க, ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வையும் முடித்திருக்க வேண்டும். அதாவது... இந்தியாவின் ஒட்டுமொத்த பிளஸ்-2 மாணவர்களில் இருந்து சிறப்பானவர்களை தேர்ந்தெடுக்க ஜே.இ.இ. மெயின் தேர்வு உதவுகிறது என்றால், இதில் தேர்ச்சி பெற்றவர்களில் மிக சிறப்பானவர்களை தேர்ந்தெடுத்து ஐ.ஐ.டி.வளாகங்களுக்குள் அனுப்ப ஜே.இ.இ.அட்வான்ஸ்ட் வழிகாட்டும். 

வினாத்தாள் தயாரிப்பு எப்படி இருக்கும்? 

300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்திட்டத்தில் இருந்து, தலா 30 கேள்விகள் கேட்கப்படும். அதில் முதல் 20 கேள்விகள், கொள்குறி வினாக்களாக இருக்கும். கடைசி 10 வினாக்கள் கோடிட்ட இடங்களை நிரப்புவதாக இருக்கும். கேட்கப்படும் 90 கேள்விகளில், 75 கேள்விகளுக்கு கட்டாயம் பதில் அளிக்க வேண்டும். 

தேர்வுக்கு தயாராவது எப்படி? 

சி.பி.எஸ்.சி. மற்றும் மாநில அரசுப்பள்ளிகளின் பாடத்திட்ட அடிப்படையிலேயே கேள்வித்தாள் தயாரிக்கப்படும். கேள்வி-பதில்களை மனப்பாடம் செய்வது, இதுபோன்ற நுழைவு தேர்வுகளில் பலன் தராது. அதேபோல ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை மட்டும் தயார் செய்தால் போதாது. எந்த விதமான கேள்விக்கும் சுயமாக பதில் அளிக்கும் வகையில் பாடத்தை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். 

ஜே.இ.இ. மெயின் பற்றி விளக்கமாக கூறுங்கள்? 

இரண்டு தாள்களாக நடத்தப்படும் ஜே.இ.இ. மெயின் (JEE Main) தேர்வில் இரு தாள்களுக்கும் தேர்வு நேரம் 3 மணி நேரம். முதல் தாள் ஆன்லைன் தேர்வாக கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும். சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையில் கேள்விகள் அமையும். இதில் கணக்கு, இயற்பியல் மற்றும் வேதியியல் மூன்று பாடங்களுக்கும் சம அளவு மதிப்பெண்கள் ஒதுக்கப்படும். இரண்டாம் தாளில் கணக்கு, வரைபடம் மற்றும் ஆப்டிடியூட் ஆகியவற்றிலிருந்து கேள்விகள் இடம்பெறும். ஆப்டிடியூட் கேள்விகள் சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையில் இருக்கும். சரியான பதிலுக்கு 4 மதிப்பெண்கள் கிடைக்கும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும் (நெகட்டிவ் மார்க்). கேள்விக்கு பதில் அளிக்காமல் விட்டுவிட்டால் மதிப்பெண் குறைப்பு இல்லை. எனவே பதில் தெரியாத கேள்விக்கு பதிலளிப்பதைத் தவிர்த்துவிடலாம். 

ஜே.இ.இ. அட்வான்ஸ் பற்றி விளக்குங்கள்? 

ஜே.இ.இ. மெயின் (JEE Main) தேர்வில் வெற்றி பெற்றவர்களில் மதிப்பெண் அடிப்படையில் முதல் 54,453 பேர் மட்டுமே ஜே.இ.இ. அட்வான்ஸ் (JEE Advanced) தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு எழுதுபவர்கள் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். 2 ஆண்டுகளுக்குள் ஜே.இ.இ. மெயின் தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். முந்தைய ஆண்டிலோ நடப்பு ஆண்டிலோ 12-ம் வகுப்புத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எந்த ஐ.ஐ.டியிலும் ஏற்கனவே அட்மிஷன் பெற்றிருக்கக் கூடாது. 

ஜே.இ.இ. தேர்வில் வெற்றிபெறுவது கடினமான விஷயமா? 

இல்லை. சுலபமான ஒன்றுதான். ஆனால் தமிழ்நாட்டு மாணவர்கள் மத்தியில், கடினமான தேர்வு என்ற தவறான புரிதல் இருக்கிறது. அதனால்தான், ஜே.இ.இ. தேர்வு பற்றி தெரிந்தவர்கள்கூட, அதில் பங்கேற்பதில்லை. இன்னும் சில மாணவர்களுக்கு, இப்படி ஒரு தேர்வு இருப்பதே தெரிவதில்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் ஏராளமான மத்திய கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு என பிரத்யேக இட ஒதுக்கீடும் இருக்கிறது. இதனால் வருங்கால மாணவர்கள் ஜே.இ.இ.தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். 

சலுகைகள் எதுவும் உண்டா? 

மிகக்குறைந்த கல்வி கட்டணம், உயர்தர அறிவியல் சோதனை கூடங்கள், திறமையான பேராசிரியர்கள், கற்பனை செய்திராத கல்லூரி வாழ்க்கை இவற்றோடு, மாணவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளி மாணவர்கள், பட்டியலின மாணவர்களுக்கு குறைந்த மதிப்பெண்களே, தேர்ச்சிக்கான தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு இருக்கிறதா? 

தனியார் கல்லூரி மாணவர்களைவிட, மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அரசு/தனியார் துறைகளில் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. 3-ம் ஆண்டிலேயே, சம்பந்தப்பட்ட துறை நிறுவனங்களின் நேர்காணல் நடத்தப்பட்டு, மாதம் 50 ஆயிரத்திற்கும் குறைவில்லாத சம்பளத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள்.

சைனிக் பள்ளிகள் (Sainik school/ Military school)


சைனிக் பள்ளிகள் (Sainik school/ Military school)

சைனிக் பள்ளிகள் என்பது சைனிக் பள்ளிகள் சொசைட்டி என்ற இந்திய அரசு அமைப்பு மூலம் அமைக்கபட்டது. இது அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே.வி.கிருஷ்ண மேனன் அவர்களால் 1961 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இந்தியாவின் அனைத்துப் பகுதியிலிருந்தும் மாணவர்களை இந்திய இராணுவத்தில் சேரத் தயார்படுத்துவை முக்கிய நோக்கமாகக் இந்தப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் 28 பள்ளிகள் பல்வேறு மாநிலங்களில் உள்ளது. இந்தப் பள்ளிகளில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. 

நோக்கம் 

பள்ளியின் நோக்கம் சிறுவர்களை கல்வி, உடல் மற்றும் உளவியல் ரீதியாக தேசிய பாதுகாப்பு அகாதமி ( NDA - National Defence Academy) அல்லது பிற துறைகளில் நுழைவதற்கு தயார்படுத்துவதாகும்.

தமிழ்நாட்டில் சைனிக் பள்ளி அமராவதிநகர்

அமராவதி சைனிக் பள்ளி என்பது இந்தியாவிலுள்ள 28 சைனிக் பள்ளிகளில் ஒன்று ஆகும். இது தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணைக்கு அருகே உள்ளது. இந்தப் பள்ளியானது இந்திய ஒன்றிய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும் தமிழக அரசும் இணைந்து உண்டு உறைவிடப் (Boarding school) பள்ளியாகும். இது நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) பாடத் திட்டத்தின்படி இயங்கும் ஆங்கிலவழிப் பள்ளியாக இருந்தாலும் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்ற மும்மொழி திட்டம் பின்பற்றப்படுகிறது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. 

இங்குப் பாடத்துடன் குதிரை ஏற்றம், நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், மலையேற்றம், விமானம், கப்பல் அமைப்புகள் குறித்துக் கற்றுத் தரப்படுகின்றன. இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் இங்குள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர். பள்ளியில் வேலை செய்பவர்களின் குழந்தைகள் மட்டும் வீட்டிலிருந்து வரலாம் என்று விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 2018 ஆண்டு காலகட்டத்தில் அமராவதி சைனிக் பள்ளியில் 600 மாணவர்கள் பயில்கின்றனர்.

வரலாறு

அமராவதி நகர் சைனிக் பள்ளி, சமுதாயத்தின் ஒரு பகுதியாக 16 ஜூலை 1962 இல் தொடங்கப்பட்டது. இது 1975 வரை சைனிக் பள்ளி, மெட்ராஸ் (எஸ்.எஸ்.எம்) என அழைக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு அகாதமியில் சேர மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் சைனிக் பள்ளி, உருவாக்கப்பட்டது. என்.டி.ஏ (என்.டி.ஏ இந்தியாவில் உள்ள மூன்று படைகளிலும் நுழையும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கிறது ). இந்திய கடற்படை அகாதமி (ஐ.என்.ஏ) இந்திய கடற்படைக்குள் நுழையும் கடற்படை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.

சேர்க்கை

6 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு (அகில இந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு- AISSEE) மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பொதுப் பள்ளி கல்வி வழங்கப்படுகிறது. தலைமைத்துவ திறன் கொண்ட மாணவர்கள் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் அதிகாரிகளாக ஆக பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். இந்திய குடிமக்கள் மட்டுமே பள்ளிக்குள் நுழைய தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

இந்தப் பள்ளியில் சேர ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 6ஆம் வகுப்பில் சேர, 10இல் இருந்து 11 வயதுக்குள் இருக்க வேண்டும். 9ஆம் வகுப்பில் சேர 13- இருந்து 14 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் 9ஆம் வகுப்பில் சேரத் தகுதி உண்டு. இந்தப் பள்ளியில் சேர்வதற்குத் தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றும், நேர்முகத் தேர்விலும் உடல் தகுதியிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

இந்தப்பள்ளியில் பட்டியல் வகுப்பினருக்கு 15 விழுக்காடும் பழங்குடி வகுப்பினருக்கு 7.5 விழுக்காடும் படை வீரர்கள், ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படையினரின் குழந்தைகளுக்கு 25 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

வளாகம்

என்.டி.ஏ-வில் சேருவது பெரும்பாலான மாணவர்களின் லட்சியமாகும். அதனால் இப் பிரிவில் பணி செய்ய விரும்பும் மாணவர்கள் இங்கு சேர்ந்து படிக்கின்றனர்.

* மூன்று படைகளுக்கும் ஒரே போட்டித் தேர்வின் மூலம் என்.டி.ஏ தேர்வு இரண்டு நிலைகளில் செய்யப்படுகிறது, அதைத் தொடர்ந்து தேர்வு வாரியம் நடத்தும் நேர்காணல் மூலமாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

* இப்பள்ளியின் மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு திறந்த முறையில் நடத்தப்படுகிறது.

The National Defence Academy (NDA) is the joint services academy of the Indian Armed Forces, where cadets of the three services, the Army, the Navy and the Air Force train together before they go on to respective service academy for further pre-commission training. The NDA is located in Khadakwasla, Pune, Maharashtra. It is the first tri-service academy in the world.

https://en.m.wikipedia.org/wiki/National_Defence_Academy_(India)

அறிவோம் துணைமருத்துவ பட்ட படிப்புகள்: பி.எஸ்சி


அறிவோம் துணைமருத்துவ பட்ட படிப்புகள்: பி.எஸ்சி. - இதய நுரையீரல் ரத்த ஓட்ட தொழில் நுட்பம். (B.Sc., Cardio Pulmonary Perfusion Technology) 

இந்த பி.எஸ்சி. பட்டபடிப்பு நான்கு வருட படிப்பு. மூன்று வருடங்கள் படிப்பும் ஒரு வருடம் பயிற்சியுமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த படிப்பு சார்ந்த இதயம் மற்றும் நுரையீரலுக்கான அடிப்படை மருத்துவ  கல்விபுகட்டப்படும்.

இத்துடன் இதயம் மற்றும் நுரையீரல் சார்ந்த அறுவை சிகிச்சைகளில் குறிப்பாக பைபாஸ் அறுவை சிகிச்சைகளில் உபயோகப்படுத்தப்படும் இதய நுரையீரல் இயந்திரத்தை கையாளுவது குறித்த நேரடி பயிற்சி வழங்கப்படும். 

இதயத்தில் அறுவை சிகிச்சை நடக்கும் போது இதய அறுவை சிகிச்சை நிபுணருக்கு உதவியாக ஹார்ட் லங்க் மெஷினை கையாளும் நுட்புணராக பணிசெய்ய வேண்டும். 

அந்த இயந்திரத்தை சுத்தம் செய்வது , தொற்று நீக்கம் செய்வது, பராமரிப்பது போன்ற விஷயங்கள் கற்றுத் தரப்படும். 

எதிர்காலம் - இதயம் சார்ந்த  பைபாஸ் அறுவை சிகிச்சைகள் / இதய அறுவைசிகிச்சை நடைபெறும் இடத்தில் இதய நோய் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு உதவும் குழுவில்  நுட்புணர்களாக பணி புரியலாம். 

கல்வித் தகுதி

அறிவியல் பாடங்களுடன் மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MPCB அல்லது PCBZ அடங்கிய பாடதொகுப்பில் மேல்நிலை (10+2) கல்வி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவியல் பாடத்தொகுப்பில் அல்லது பயோமேத்ஸ் பாடத்தொகுப்பில் ஆங்கிலம் உட்பட பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

எங்கு படிப்பது?

தமிழகத்தில் எண்ணற்ற பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. பெரும்பாலான தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் இந்த படிப்பு வழங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளிலும் படிக்கலாம். 

கட்டணம்:

அரசு மருத்துவ கல்லூரியில் ஆண்டுக்கு ₹ 3000/- மட்டும்.
 
அரசு ஒதுக்கீட்டில் கலந்தாய்வு மூலம் தனியார்/சுயநிதி கல்லூரியில் சேந்தால், ஆண்டுக்கு ₹ 35000/- - 40,000/-.

சுயநிதி கல்லூரியில் தேரடி/மேனேஜ்மென்ட் சீட்டில் சேர்ந்தால், ஆண்டுக்கு 1,00,000/-.

கூடுதல் தகவல்களுக்கு: 

The Tamil Nadu Dr. M.G.R. Medical University
https://www.tnmgrmu.ac.in

Directorate of Medical Education and Research, Selection Committee

https://tnmedicalselection.net

Perfusion Technology is a branch of science which deals with the study of physiology, pathology and associated equipment used to support and/or assume the function of the heart and/or lungs during medical procedures.

B.Sc. Cardio Pulmonary Perfusion Care Technology

The Cardio- Thoracic surgeon needs to work on a Stopped Heart for certain surgeries and it is necessary to temporarily replace the patient's heart and lung function. It is the responsibility of the perfusionist (A candidate completing the B. Sc (Cardio Pulmonary Perfusion care Technology Course), a specialized healthcare professional, to assume the function of the heart and/or lungs during these surgical procedures.
A perfusionist operates a heart-lung machine, which is an artificial blood pump, which propels oxygenated blood to the patient's tissues while the surgeon operates on the heart. The perfusionist manages the physiological and metabolic demands of the patient while the cardiac surgeon operates on the heart. It is also the perfusionist's responsibility to deliver the drug that stops the heart.
A perfusionist generally spends 90% of his or her time in the operation theatre for cardiac cases, but the responsibilities extending to the areas such as cardiovascular intensive care unit and catheterization laboratory.

https://youtu.be/xgLb3-FxYyg?si=ChqFmUEIxeZcvc0D

Wednesday, August 27, 2025

மருத்துவ துறையில் படிப்புகள் ஏராளம்!


மருத்துவ துறையில் படிப்புகள் ஏராளம்!

பிளஸ் 2வில், அறிவியல் பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்து படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் கனவு எம்.பி.பிஎஸ்., அல்லது பி.டி.எஸ்.,! மருத்துவத் துறையில் இந்த படிப்புகளையும் கடந்து, வாய்ப்புகள் மிகுந்த பல்வேறு துணைமருத்துவ (Paramedical or allied health) பட்டப்படிப்புகள் உள்ளன. அவற்றை இங்கே காண்போம்...

மெடிக்கல் ரேடியாலஜி டெக்னாலஜி

கதிரியக்க தொழில்நுட்பத்தை பற்றி படிக்கும் சிறந்த படிப்பு. மனித உடல் உறுப்புகளின் அமைப்புகள் மற்றும் அதன் செயல்நிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்ள, இந்த படிப்பு உதவுகிறது. இதில், தேர்ச்சி பெற்றவர்கள் ‘ரேடியாலஜிஸ்ட்’ என்று அழைக்கப்படுவர். 

கதிர்வீச்சினை (எக்ஸ்ரே) மனித உடம்புக்குள் செலுத்தி, குறிப்பிட்ட உறுப்புக்களை துல்லியமாக்க படம் எடுத்து, நோய்களை கண்டறிவதும் மற்றும் காயங்கள் அல்லது எலும்பு முறிவுகளை அளவிடுவதும் இவர்கள் தான். ரேடியாலஜி படிப்பில், எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. தொழில்நுட்பம் போன்றவற்றை பயன்படுத்தும் மற்றும் பரிசோதனை செய்யும் முறைகள் பற்றி விரிவாகப் படிக்கலாம்.

ஆப்தொமெட்ரி

கண்களின் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளை பற்றி படிக்கும் முதன்மை படிப்பு ஆப்தொமெட்ரி. பார்வை குறைபாடு தொடர்பான பரிசோதனை, கண் நோய்களை கண்டறிதல், கண் சிகிச்சை உள்ளிட்டவற்றை இப்படிப்பின் மூலம் கற்றுக்கொள்ளலாம். 
பார்வை தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளை விலக்கி, கிட்டப் பார்வை அல்லது தூரப் பார்வை உடையவர்கள் என்ன மாதிரியான கண்ணாடிகளை அணிய வேண்டும் என்பது உட்பட கண் தொடர்பான கோளாறுகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதற்கு முன் அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து, அதற்கேற்ற சிகிச்சை குறிப்புகளை வழங்குபவர்கள், ‘ஆப்தொமெட்ரிஸ்ட்’. 
நான்கு ஆண்டுகள் கொண்ட இளநிலை பட்டப்படிப்புடன், கிளினிக்கல் அனுபவம் பெற இன்டர்ன்ஷிப் பயிற்சியை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் கண் மருத்துவர்களுக்கு உதவியாளர்களாக இவர்களால் செயல்பட முடியும்.

மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி

மருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனைகள் மூலம் நோய்களை கண்டறிதல், நோயினை பகுத்து ஆராய்தல், மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப ஆய்வுக்கூடத்தில் அனைத்துப் பணிகளையும் ஒருங்கே செய்து கொடுப்பதை பற்றி படிக்கும் படிப்பு. 
உடலில் உள்ள நீர், ரத்தத்தின் அளவு, சதை, கெமிக்கல் அனாலிஸ், உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கையை கண்டறியும் முறைகள் பற்றி முழுமையாக இந்த படிப்பின் மூலம் மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம். ஹெமாட்டாலஜி, இம்யூனலாஜி, கிலினிக்கல் பெதாலஜி, பிலெட் பேங் டெக்னாலஜி, மாலிக்குலர் பெதாலஜி, பயோ கெமிஸ்டரி, மைக்ரோபயாலஜி மற்றும் சிரோலஜி உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்ற முடியும்.

ஆக்குபேஷனல் தெரபி 

இயல்பு நிலையிலிருந்து மாறுபட்ட மனிதர்களின் செயல்பாடுகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது ‘ஆக்குபேஷனல் தெரபி’. மனநலம் சார்ந்த இந்தப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு பாலிகிளினிக், மருத்துவமனைகள், மாற்றுத் திறனாளிப் பள்ளிகள், மனநல சிகிச்சை மையங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் வேலை வாய்ப்புகள் உள்ளன. இயந்திரங்களாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய மனித சமுதாயத்துக்கு ‘ஆக்குபேஷனல் தெரபி’ படித்தவர்களின் சேவை அதிகம் தேவைப்படுவதால், இத்துறையில் வாய்ப்புகள் அதிகம். இத்துறையில், பிஎஸ்.சி., எம்எஸ்.சி., மற்றும் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன.

பிசியோதெரபி (பி.பீ.டி.,)

துணை மருத்துவப் படிப்புகளில், அதிக முக்கியத்துவம் நிறைந்த படிப்பாக கருதப்படும் படிப்பு இது. முறையாக செயல்படாமல் இருக்கும் உடல் இயக்கத்தை சீர் செய்ய மருந்துகளோடு சேர்த்து பிசியோதெரபி சிகிச்சையும் அவசியமான ஒன்றாகி உள்ளது. எலும்பு முறிவு, சதைப் பிடிப்பு, மூட்டு வலி போன்றவற்றுக்கு சிகிச்சை அளித்து வலியைப் போக்குவதில் பிசியோதெரபிஸ்டுகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மருத்துவர்களுக்கு எங்கெல்லாம் வாய்ப்புகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் ‘பிசியோதெரபிஸ்ட்’களுக்கும் வாய்ப்பு உண்டு. இப்பிரிவில், பிஎஸ்.சி., எம்எஸ்.சி., மற்றும் டிப்ளமோ படிப்புகள் உள்ளன.

நியூரோ டெக்னாலஜி

மருத்துவத் துறையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் துறை ‘நியூரோ டெக்னாலஜி’! நியூரோ சயின்ஸ், செல்லுலார் இன்ஜினியரிங் மற்றும் சிக்னல் பிராசசிங் உள்ளிட்டவற்றை விரிவாகப் படிப்பதினால், நரம்பியல் மருத்துவர்க்கு இணையாக, இத்துறையில் பட்டப்படிப்பை படித்தவர்கள் செயல்படுகின்றனர். எலக்ட்ரோ டயக்னாஸ்டிக் முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இத்துறை மிகவும் முக்கியத்துவம் நிறைந்ததாக கருதப்படுகின்றது. இதில், பிஎஸ்.சி., மற்றும் டிப்ளமோ படிப்புகள் உள்ளன. 

பெர்பியூஷன் டெக்னாலஜி

அனைத்து விதமான இதய அறுவை சிகிச்சையின் போதும் உடலின் ரத்த ஓட்டம், நின்றுவிடாமல் இருக்கவும், சீராக செயல்படுகின்றதா என்பதை கண்காணிக்கவும், மயக்கவியல் வல்லுநர்களுக்கும் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் ‘பெர்பியூஷனிஸ்ட்’ பெரிதும் உதவுகின்றனர். அதனால், ‘பெர்பியூஷனிஸ்ட்’ இல்லாமல் இருதய அறுவை சிகிச்சை என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. மூன்று ஆண்டுகள் கொண்ட பிஎஸ்.சி.,- பெர்பியூஷன் டெக்னாலஜி படிப்பை படிக்கும் மாணவர்கள், மருத்துவர்களுக்கு நிகராக செயல்பட முடியும். அதனால், மருத்துவ துறையில் இவர்களுக்கான தேவைகள் அதிகம். மேலும், ஒரு சில தனியார் கல்லூரிகள், இன்டர்ன்ஷிப் படிப்புடன் நான்கு ஆண்டுகள் கொண்ட பிஎஸ்.சி., பட்டப்படிப்பை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னாலஜி

அறுவை சிகிச்சை அறையில் தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் பற்றி முழுவதுமாக படிக்கும் முக்கியத்துவம் நிறைந்த படிப்பு. அறுவை சிகிச்சையின் போது, மருத்துவருக்கு இணையாகவும், அறுவை சிகிச்சைக்கு முன், அறை மற்றும் தேவைப்படும் கருவிகளை சுத்தப்படுத்தி வைப்பது என பல்வேறு வேலைகளை மேற்கொள்கின்றனர், ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னீஷியன்ஸ். இதில், ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, ஆப்ரேஷன் தியேட்டர் மேனேஜ்மென்ட், ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னிக்ஸ் மற்றும் சர்ஜரிக்கல் டெக்னாலஜி ஆகிய பிஎஸ்.சி., படிப்புகளும், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகிறது.

டயாலிசஸ் டெக்னாலஜி

மனித உடலின் ஆரோக்கியத்திற்கு, இரத்தத்தை சுத்தப்படுத்தும் சிறுநீரகத்தின் பங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சிறுநீரகங்கள் நன்கு வேலை செய்கையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், சிறுநீரகங்கள் சேதமடைதல், பிற நோய் தொற்றுகளால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பு போன்ற காரணங்களால் சிறுநீரகங்கள் செயல் இழந்தால், மேற்கொள்ளப்படும் சிகிச்சை தான் டயாலிசஸ். இந்த சிகிச்சைக்கு, டயாலிசஸ் டெக்னிஷியன்களின் தேவை அவசியம். அதனால், அனைத்து மருத்துவம் மற்றும் சுகாதார துறைகளில் வேலைவாய்ய்புகளை எளிதில் பெற முடியும். 

பிஎஸ்.சி., டயாலிசஸ் டெக்னாலஜி படிப்பில், டயாலிசஸ் இயந்திரத்தை பொருத்துதல், ஸ்டெர்லிலைசேஷன் கலவை தயாரித்தல், நோயாளியை கண்காணித்தல், டயாலிசஸ் இயந்திரத்தை இயக்குதல், மேற்பார்வை செய்தல், இரத்த ஓட்டத்தை கணக்கிடுதல், இயந்திரத்தை சுத்தம் செய்தல் மற்றும் ஆய்வு செய்தல் உள்ளிட்டவற்றை படிக்கலாம்.

ஆடியாலஜி அண்ட் ஸ்பீச் லேங்குவேஜ் பெதாலஜி

கேட்பதில் மற்றும் பேசுவதில் குறைபாடுள்ள குழந்தைகள், கேட்கும் திறன் பேசும் திறனை இழந்தவர்கள், திக்குவாய் போன்ற பிரச்சனைக்கு உட்பட்டவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களது குறைபாடுகளை கண்டறிந்து, அதைக் குணப்படுத்தும் சிகிச்சை முறைகள் பற்றி கற்றுக் கொடுக்கும் படிப்பு இது! 
பிளஸ் 2வில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை முதன்மை பாடமாக படித்து, தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மூன்று வருட பி.எஸ்சி., படிப்புடன், ஒரு வருட இன்டன்ஷிப் பயிற்சியும் சேர்த்து மொத்தம் 4 ஆண்டுகள், இந்த படிப்பை படிக்க வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் காது கேளாதோர் கல்வி நிறுவனங்களில், ஆடியாலஜிஸ்ட் மற்றும் ஸ்பீச் தெரபிஸ்ட்களுக்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், இத்துறையில் பட்டப்படிப்பை படித்தவர்கள் தனியாக கிளினிக் வைக்கலாம் அல்லது தனிப்பட்ட முறையில் குறைபாடு இருக்கிறவர்களின் வீடுகளுக்குச் சென்று சேவை செய்யலாம். வெளிநாட்டிலும் நல்ல வேலைவாய்ப்பு உள்ளது.

மெடிக்கல் ரெக்காடு சயின்ஸ்

நர்சிங் ஹோம் தொடங்கி சூப்பர் மல்டி ஸ்பேஷாலிட்டி ஹாஸ்பிட்டல்கள் அனைத்திலும், நோயாளிகளின் விவரங்கள் மற்றும் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் பற்றின முழு விவரங்களை பதிவு செய்து வைத்திருப்பது கட்டாயம். எனவே, தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்றவாரு, மின்னணு சாதன அமைப்பில் எவ்வாறு விவரங்களை பதிவு செய்வது, அதன் விதிமுறைகள், எத்தகைய தகவல்கள் இடம்பெற வேண்டும் உள்ளிட்டவற்றை பற்றி படிக்கும் படிப்பு!
வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கும் இத்துறையில், பி.எஸ்சி., பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2வில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவை எடுத்து படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கவனம் சிதறாமல் வேலை பாக்கும் திறன், நேரத்தை நிர்வகிக்கும் திறன், தகவல்களை சேகரிக்கும் திறன்களை வளர்த்து கொள்வது அவசியம்.

ரெஸ்பிரேடரி தெரபி 

புற்றுநோய், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா மற்றும் இருதய நோய்களால் ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வுகாண கூடிய துணை மருத்துவ படிப்பு இது. மருந்துகளை நிர்வகித்தல், கார்டியோ பல்மோனாரரி சிகிச்சை தொடர்பான உபகரணங்களை கையாள்வது, ஆக்ஸிஜன் மற்றும் பிற வாயுக்களின் அளவை தீர்மானிப்பதற்கு இரத்த மாதிரிகள் பகுப்பாய்வு செய்தல், செயற்கை மூச்சுக் குழாய்களை நிர்வகித்தல், ஜெஸ்ட் எக்ஸ்ரேஸ், முக்கிய சுவாச அறிகுறிகளை மதிப்பீடு செய்தல், நோயாளிகளுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் என பல்வேறு பிரிவுகளைப் பற்றி விரிவாக கற்றுக் கொடுக்கும் படிப்பு. இதில், இன்டர்ன்ஷிப் பயிற்சியுடன் பி.எஸ்சி., பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

அனஸ்திஸ்யா டெக்னாலஜி 

நோயாளிகளின் உடல் தகுதிகளை ஆராய்ந்து, அறுவை சிகிச்சையின் போது அவர்களுக்கு போடப்படும் மயக்க மருந்தின் அளவை நிர்ணயிக்கும் முக்கிய பணியினை மேற்கொள்பவர்கள் தான் அனஸ்திஸ்யா டெக்னாலஜிஸ்ட்கள்! மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும், தீவிர மருத்துவ பராமரிப்பு பிரிவுகளிலும் இவர்களது பணி பெறும் அளவில் தேவைப்படுகிறது.
மயக்க மருந்து உபகரணங்கள், மயக்க மருந்தின் நுட்பங்கள் மற்றும் நோயாளிகளின் உடல் தகுதிக்கு ஏற்றவாறு மயக்க மருந்தின் அளவை கணக்கிடும் முறைகள் மற்றும் மயக்க மருந்தை செலுத்தியவுடன் கண்காணிக்கும் விதிமுறைகள் போன்றவை, இளநிலை பி.எஸ்சி.,-அனஸ்திஸ்யா டெக்னாலஜி பட்டப்படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. சி.சி.யு., மற்றும் ஐ.சி.யு., பிரிவிலும், அறுவை சிகிச்சைக்கு முன் மயக்க மருந்து வழங்கும் மயக்க மருந்து வல்லுநர்களாகவும், அறுவை சிகிச்சை அறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் இணைந்தும் வேலை செய்யலாம். எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு பிறகு அனஸ்திஸ்யா பிரிவில் ஸ்பெஷலைஸ் செய்பவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசம்.

கார்டியோ வாஸ்குலர் டெக்னாலஜி

இதயம் மற்றும் அதன் தொடர்பான வாஸ்குலர் பிரச்சினைகளை கண்டறிந்து, அதற்கு தகுந்த சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு, கார்டியோ வாஸ்குலர் டெக்னாலஜிஸ்ட்கள் (சி.வி.டி.,) உதவுகின்றனர். இரத்த ஓட்ட நிலைகள் மற்றும் இருதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை மிக துல்லியமாக கண்காணித்து மருத்துவ அறிக்கையை தயார் செய்வதும் இந்த கார்டியலஜி தொழில்நுட்ப வல்லுநர்களே!

அல்ட்ராசவுண்ட் மூலம் இதய படங்களை எடுக்கும் தொழில்நுட்ப முறைகள், எடுத்த படங்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் நோய் கண்டறியும் செயல்முறைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர். இவர்களுக்கான தேவைகள் மருத்துவ துறைகளில் மிக அதிகம். அதனால், இப்பாடப் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பின்மை என்பது இல்லை.

Friday, August 22, 2025

UPSC விருப்பப் பாடங்கள் பட்டியல்


UPSC விருப்பப் பாடங்கள் பட்டியல்

😳😳😳😳😳😳😳😳😳😳😳😳

1. UPSC விருப்பப் பாடங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது

2. சிவில் சர்வீஸ் விண்ணப்பதாரர்களுக்கான UPSC விருப்பப் பாடங்கள்

3. தேர்வு வெற்றியில் UPSC விருப்பப் பாடங்களின் முக்கிய பங்கு

4. UPSC விருப்பப் பாடங்களின் பட்டியல்

5. பின்வரும் மொழிகளில் ஏதேனும் ஒன்றின் இலக்கியம்

6. UPSC தேர்வுக்கு சிறந்த விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான உதவிக்குறிப்புகள்

7. UPSC தேர்வில் எத்தனை விருப்பப் பாடங்கள் அனுமதிக்கப்படுகின்றன?

8. UPSCக்கான சிறந்த விருப்பப் பாடம்

9. UPSC தேர்வு வெற்றிக்கு மிகவும் விருப்பமான விருப்பப் பாடங்கள்

10. முடிவுரை

உங்களின் UPSC தேர்வுக்கான சரியான பாடத்தைத் தீர்மானிப்பது இந்தத் தேர்வில் வெற்றி பெற மிகவும் முக்கியமானது. இது ஒரு பெரிய முடிவு, ஏனென்றால் தேர்வில் நீங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறீர்கள், எந்த வகையான வேலையைப் பெறலாம் என்பதை இது தீர்மானிக்கும். இந்தக் கட்டுரையில், எந்த UPSC விருப்பப் பாடம் உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதைக் கண்டறிய நாங்கள் உங்களுக்கு உதவப் போகிறோம். நாங்கள் அனைத்து விருப்பங்களையும் உடைத்து, சரியான முடிவை எடுப்பதற்கான உதவிக்குறிப்புகளை வழங்குவோம்.
UPSC விருப்பப் பாடங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது
UPSC தேர்வு இந்தியாவில் மிகவும் மதிப்புமிக்கது. இந்தியத் துணைக் கண்டத்தில் இது மிகவும் கடினமான தேர்வு. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். ஆனால் ஒரு சிலர் இறுதித் தேர்வை மேற்கொள்கின்றனர். நீங்கள் நன்றாகச் செய்தால், IAS, IFS அல்லது IPS போன்ற முக்கியமான வேலைகளில் சேரலாம். இவை அனைத்தும் சிவில் சேவைகளின் ஒரு பகுதியாகும்.
இந்தத் தேர்வில், UPSC விருப்பப் பாடங்களின் தேர்வு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது உங்கள் UPSC பயணத்தை வடிவமைப்பதில் பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. மனிதநேயம் முதல் அறிவியல் வரையிலான பல்வேறு துறைகளில் UPSCயின் அதிகாரப்பூர்வ பட்டியலில் பல UPSC விருப்ப பாடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, நன்கு அறியப்பட்ட முடிவை எடுப்பது முக்கியம். Upsc 48 விருப்ப பாடங்களை அங்கீகரித்துள்ளது (இந்திய மொழிகளின் இலக்கியம் உட்பட). இந்தக் கட்டுரையில், UPSC விருப்பப் பாடங்கள் தொடர்பான ஒவ்வொரு பரிமாணத்தையும் ஆராய்வோம் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு மிகவும் பொருத்தமானதைத் தேர்ந்தெடுப்பதற்கான விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளை வழங்குவதற்கான தேர்வுகளின் குழுவைப் புரிந்துகொள்வோம்.

சிவில் சர்வீஸ் விண்ணப்பதாரர்களுக்கான UPSC விருப்பப் பாடங்கள்
UPSC (யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ) தேர்வு இந்தியாவின் போட்டி நிலப்பரப்பில் சிறந்து விளங்கும் மற்றும் கடுமையின் உச்சமாக உள்ளது. முதல்நிலை, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று நிலைகளைக் கொண்ட இந்தத் தேர்வு மதிப்புமிக்க சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான நுழைவாயிலாக செயல்படுகிறது. பூர்வாங்க நிலை அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தரப்படுத்தப்பட்ட வடிவமைப்பைப் பின்பற்றுகிறது, முதன்மை நிலை ஒரு விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுக்கும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
UPSC ஆனது மனிதநேயம், சமூக அறிவியல், அறிவியல் மற்றும் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பல்வேறு விருப்ப பாடங்களை வழங்குகிறது. வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், சமூகவியல் மற்றும் பொது நிர்வாகம் ஆகிய துறைகளிலிருந்து இலக்கியம் (ஆங்கிலம், இந்தி, முதலியன), தத்துவம், மானுடவியல், பொருளாதாரம், கணிதம் மற்றும் அதற்கு அப்பால், ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அவர்களின் ஆர்வங்கள் மற்றும் திறன்கள்.

தேர்வு வெற்றியில் UPSC விருப்பப் பாடங்களின் முக்கிய பங்கு
ஒரு வேட்பாளரின் ஒட்டுமொத்த மதிப்பெண்ணுக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதால், UPSC விருப்பப் பாடங்கள் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. சரியான விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் ஒரு உயர் பதவி மற்றும் விரும்பிய கேடரைப் பெறுவதற்கான வாய்ப்புகளைத் தீர்மானிக்க முடியும். UPSC முதன்மைத் தேர்வில் மொத்த 2025 மதிப்பெண்களில் விருப்பத் தாள் 500 மதிப்பெண்களைக் கொண்டுள்ளது . எனவே, ஒருவரின் பலம், ஆர்வங்கள் மற்றும் கல்விப் பின்புலத்துடன் ஒத்துப்போகும் விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
UPSC விருப்பப் பாடங்களின் பட்டியல்:
UPSC விருப்பப் பாடங்களின் பட்டியலைத் தேடும் ஆர்வலர்களுக்கு, ஏராளமான ஆதாரங்கள் உடனடியாகக் கிடைக்கின்றன. அதிகாரப்பூர்வ UPSC இணையதளம் ஒரு முதன்மை களஞ்சியமாக செயல்படுகிறது, ஒவ்வொரு பாடத்திற்கும் விரிவான பாடத்திட்டங்களுடன் விரிவான பட்டியல்களை வழங்குகிறது. கூடுதலாக, பல பயிற்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி இணையதளங்கள் முழுமையான பட்டியல்களை உருவாக்குகின்றன, வேட்பாளர்கள் புதுப்பிக்கப்பட்ட தகவல் மற்றும் ஆதாரங்களுக்கான அணுகலை உறுதி செய்கின்றன.
யுபிஎஸ்சி பல்வேறு துறைகளில் இருந்து பலவிதமான விருப்பப் பாடங்களை வழங்குகிறது. UPSC விருப்ப பாடங்களின் பட்டியலில் பின்வருவன அடங்கும்:

1. வேளாண்மை
2. கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல்
3. மானுடவியல்
4. தாவரவியல்
5. வேதியியல்
6. சிவில் இன்ஜினியரிங்
7. வணிகம் மற்றும் கணக்கியல்
8. பொருளாதாரம்
9. மின் பொறியியல்
10. நிலவியல்
11. புவியியல்
12. வரலாறு
13. சட்டம்
14. மேலாண்மை
15. கணிதம்
16. இயந்திர பொறியியல்
17. மருத்துவ அறிவியல்
18. தத்துவம்
19. இயற்பியல்
20. அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள்
21. உளவியல்
22. பொது நிர்வாகம்
23. சமூகவியல்
24. புள்ளிவிவரங்கள்
25. விலங்கியல்
26. கீழே கொடுக்கப்பட்டுள்ள இலக்கியப் பாடத்திட்டம்:
பின்வரும் மொழிகளில் ஏதேனும் ஒன்றின் இலக்கியம் 
அசாமிய இலக்கியப் பாடத்திட்டம் மராத்தி இலக்கியப் பாடத்திட்டம்
போடோ இலக்கியப் பாடத்திட்டம் ஒடியா இலக்கியப் பாடத்திட்டம்
பெங்காலி இலக்கியப் பாடத்திட்டம் நேபாளி இலக்கிய பாடத்திட்டம்
டோக்ரி இலக்கியப் பாடத்திட்டம் சமஸ்கிருத இலக்கியப் பாடத்திட்டம்
குஜராத்தி இலக்கியப் பாடத்திட்டம் பஞ்சாபி இலக்கியப் பாடத்திட்டம்
ஹிந்தி இலக்கிய பாடத்திட்டம் சிந்தி இலக்கியப் பாடத்திட்டம்
காஷ்மீரி இலக்கியப் பாடத்திட்டம் சந்தாலி இலக்கியப் பாடத்திட்டம்
கன்னட இலக்கியப் பாடத்திட்டம் தமிழ் இலக்கியப் பாடத்திட்டம்
மலையாள இலக்கியப் பாடத்திட்டம் தெலுங்கு இலக்கியப் பாடத்திட்டம்
கொங்கனி இலக்கியப் பாடத்திட்டம் ஆங்கில இலக்கியப் பாடத்திட்டம்
மணிப்பூரி இலக்கியப் பாடத்திட்டம் உருது இலக்கியப் பாடத்திட்டம்
மைதிலி இலக்கியப் பாடத்திட்டம் 

UPSC தேர்வுக்கு சிறந்த விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான உதவிக்குறிப்புகள்
உகந்த விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுப்பது பல முக்கிய காரணிகளின் முழுமையான மதிப்பீட்டை உள்ளடக்கியது:
* ஆர்வம் மற்றும் பின்னணி: உங்கள் ஆர்வங்கள், கல்விப் பின்னணி மற்றும் உள்ளார்ந்த பலம் ஆகியவற்றுடன் எதிரொலிக்கும் பாடத்தைத் தேர்வு செய்யவும். பாடத்தில் உண்மையான ஆர்வம், தயாரிப்பு கட்டத்தில் நீடித்த உந்துதல் மற்றும் ஆழ்ந்த ஈடுபாட்டிற்கு ஒரு ஊக்கியாக செயல்படுகிறது.
* பாடத்திட்டம் மற்றும் வளங்கள்: பாடத்திட்டத்தின் விரிவான தன்மை மற்றும் ஒவ்வொரு விருப்பப் பாடத்திற்கும் பொருத்தமான ஆய்வுப் பொருட்கள் கிடைப்பதை மதிப்பீடு செய்தல். பாடப்புத்தகங்கள், ஆய்வு வழிகாட்டிகள் மற்றும் ஆன்லைன் தளங்கள் உட்பட பல்வேறு வகையான வளங்களுக்கான அணுகல், கட்டமைக்கப்பட்ட மற்றும் பயனுள்ள தயாரிப்பு உத்தியை எளிதாக்குகிறது.
* மதிப்பெண் சாத்தியம்: ஒவ்வொரு விருப்பப் பாடத்துடனும் தொடர்புடைய வரலாற்றுப் போக்குகள் மற்றும் மதிப்பெண் முறைகளைக் கவனியுங்கள். சில பாடங்கள் அதிக மதிப்பெண் வாய்ப்புகளை வழங்கினாலும், இந்த காரணியை உங்கள் தனிப்பட்ட திறமை மற்றும் பாடத்தில் உள்ள ஆர்வத்துடன் சமநிலைப்படுத்துவது அவசியம்.
* பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்: நீங்கள் தேர்ந்தெடுத்த விருப்பப் பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற புகழ்பெற்ற பயிற்சி நிறுவனங்கள் அல்லது அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகளிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறவும். அவர்களின் நுண்ணறிவு, உத்திகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதல் ஆகியவை உங்கள் தயாரிப்பு பயணத்தை கணிசமாக அதிகரிக்கலாம் மற்றும் உங்கள் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.
UPSC தேர்வில் எத்தனை விருப்பப் பாடங்கள் அனுமதிக்கப்படுகின்றன?
யுபிஎஸ்சியில் மொத்தம் 48 விருப்பப் பாடங்கள் இருந்தாலும், முதன்மைத் தேர்வுக்கு ஒரு விருப்பப் பாடத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று UPSC கட்டாயப்படுத்துகிறது. இந்த ஒற்றை விருப்பப் பாடம் இரண்டு தாள்களை உள்ளடக்கியது, ஒவ்வொன்றும் 250 மதிப்பெண்களின் வெயிட்டேஜைக் கொண்டுள்ளது, இதன் மூலம் ஒட்டுமொத்த முதன்மை மதிப்பெண்ணுக்கு மொத்தம் 500 மதிப்பெண்கள் பங்களிக்கின்றன. இதன் விளைவாக, விருப்பப் பாடத்தின் தேர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது தேர்வின் இறுதி முடிவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

UPSCக்கான சிறந்த விருப்பப் பாடம்
எளிதான விருப்பத்தேர்வு அல்லது கடினமான விருப்பத்தேர்வு போன்ற பிரிவுகள் எதுவும் இல்லை, சில பாடங்கள் ஒருவருடைய பின்னணி அல்லது உறவின் அடிப்படையில் மிகவும் அணுகக்கூடியதாகத் தோன்றலாம், உங்கள் ஆர்வங்கள் மற்றும் திறன்களுடன் சீரமைப்பதற்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். உணரப்பட்ட எளிமையைத் தீர்மானிப்பதற்குப் பதிலாக, உங்களுடன் எதிரொலிக்கும் மற்றும் உகந்த கற்றல் சூழலை வளர்க்கும் ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துங்கள்.
UPSC தேர்வு வெற்றிக்கு மிகவும் விருப்பமான விருப்பப் பாடங்கள்
UPSC தேர்வுக்கு UPSC விருப்பப் பாடங்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது உங்கள் மதிப்பெண்ணையும், நீங்கள் தரவரிசையில் நிற்கும் இடத்தையும் பாதிக்கும். உங்களுக்கான சிறந்த பாடமானது நீங்கள் விரும்புவது, உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவை மற்றும் நீங்கள் எதில் சிறந்தவர் என்பதைப் பொறுத்தது. பெரும்பாலான விண்ணப்பதாரர்களால் விரும்பப்படும் சில பிரபலமான விருப்பப் பாடங்கள் இங்கே உள்ளன.
* புவியியல்- புவியியல் அதன் இடைநிலைத் தன்மை மற்றும் பொது ஆய்வுகள் (ஜிஎஸ்) தாள்களுக்குப் பொருத்தமாக இருப்பதால் பிரபலமான தேர்வாகும். இது உடல் புவியியல், மனித புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் புவியியல் போன்ற பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியது.
* வரலாறு- யுபிஎஸ்சி ஆர்வலர்களிடையே வரலாறு பாரம்பரியமாக விரும்பப்படுகிறது. இதற்கு வரலாற்று நிகழ்வுகள், காலவரிசை மற்றும் பகுப்பாய்வு திறன்கள் பற்றிய நல்ல புரிதல் தேவை. இது பண்டைய, இடைக்கால மற்றும் நவீன இந்திய வரலாற்றையும் உலக வரலாற்றையும் உள்ளடக்கியது.
* பொது நிர்வாகம்- பொது நிர்வாகம், நிர்வாகம், பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகத்தில் ஆர்வமுள்ள வேட்பாளர்களுக்கு ஏற்றது. இது GS ஆவணங்களுடன் மேலெழுகிறது மற்றும் அரசாங்கம் மற்றும் நிர்வாக அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.
* சமூகவியல்- சமூகவியல் y என்பது சமூகம், சமூக நிறுவனங்கள் மற்றும் சமூக இயக்கவியல் பற்றிய ஆய்வுகளைக் கையாளும் ஒரு சமூக அறிவியல் பாடமாகும். இது சமூகப் பிரச்சினைகள் மற்றும் சமூகத்தில் நிலவும் சவால்கள் பற்றிய ஆழமான புரிதலை வேட்பாளர்களுக்கு வளர்க்க உதவுகிறது.
* அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள்- அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் என்பது அரசியல், ஆளுகை மற்றும் சர்வதேச விவகாரங்களில் ஆர்வமுள்ள வேட்பாளர்களுக்கு பிரபலமான பாடமாகும். இது அரசியல் கோட்பாடுகள், இந்திய அரசியல், சர்வதேச உறவுகள் மற்றும் உலகளாவிய அரசியல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
* இலக்கியம் (ஆங்கிலம், இந்தி, முதலியன)- வலுவான பின்னணி மற்றும் இலக்கியத்தில் ஆர்வமுள்ள வேட்பாளர்களால் இலக்கியப் பாடங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்தி மாநிலங்களில் இந்தி இலக்கியம் பிரபலமான தேர்வுகளில் ஒன்றாகும். இந்த பாடங்களுக்கு இலக்கிய நூல்கள், விமர்சனம் மற்றும் பகுப்பாய்வு பற்றிய ஆழமான புரிதல் தேவை.
* மானுடவியல் - மானுடவியல் என்பது மனித சமூகங்கள், கலாச்சாரங்கள் மற்றும் காலப்போக்கில் அவற்றின் வளர்ச்சி பற்றிய ஆய்வு ஆகும். இது சமூக அமைப்பு, உறவினர், பழங்குடி சமூகங்கள் மற்றும் மனித பரிணாமம் போன்ற தலைப்புகளை உள்ளடக்கியது.
* உளவியல் - உளவியல் மனித நடத்தை மற்றும் மன செயல்முறைகள் பற்றிய ஆய்வைக் கையாள்கிறது. இது ஆளுமை, கற்றல், சமூக உளவியல் மற்றும் உளவியல் கோளாறுகள் போன்ற தலைப்புகளை உள்ளடக்கியது.

முடிவுரை
UPSC தேர்வுக்கான விருப்பப் பாடங்களைத் தேர்ந்தெடுப்பது, நுணுக்கமான விவாதம் மற்றும் தகவலறிந்த முடிவெடுப்பதைக் கோருகிறது. பாடத்திட்டத்தைப் புரிந்துகொண்டு, உங்கள் ஆர்வங்கள், பின்னணி மற்றும் கிடைக்கக்கூடிய ஆதாரங்களை மதிப்பீடு செய்வதன் மூலம், வேட்பாளர்கள் உங்கள் UPSC பயணத்தை நம்பிக்கையுடனும் தெளிவுடனும் தொடங்கலாம். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுப்பது ஒரு தேர்வு மட்டுமல்ல, உங்கள் வெற்றியைத் தேடுவதற்கான ஒரு மூலோபாய முதலீடு.

Sunday, August 17, 2025

ஆங்கில அறிவை சோதிக்கும் ‘டோபல்’ தேர்வும், அதன் தனித்துவமும்...


ஆங்கில அறிவை சோதிக்கும் ‘டோபல்’ தேர்வும், அதன் தனித்துவமும்...

(TOEFL - Test of English as a Foreign Language)

ஒரு மாணவரின் ஆங்கில மொழித்திறனை சிறப்பாக அளவிட விரும்பும் கல்வி நிறுவனங்களுக்கு, ஏறக்குறைய 50 வருடங்களாக ‘டோபல் தேர்வு’ என்பது ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. ஒரு மாணவரின், ஆங்கில மொழித் திறமையினை, படித்தல், பேசுதல், எழுதுதல் மற்றும் கவனித்தல் ஆகிய அம்சங்களில் இத்தேர்வு அளவிடுகிறது. மேற்கூறிய திறன்கள்தான், ஒரு மாணவர், வகுப்பறையில் சிறந்து விளங்க தேவையானவை.

ஒரு மாணவர், ஏதேனும் ஒரு பத்தியை படித்துக் காட்டுமாறு கேட்கப்படலாம் மற்றும் அதே தலைப்பில், ஒரு விரிவுரையை கேட்குமாறு சொல்லப்படலாம் மற்றும் இரண்டையும் இணைத்து, பேசுமாறோ அல்லது எழுதுமாறோ கேட்கப்படலாம்.

டோபல் தேர்வு என்பது, நடைமுறை வாழ்வுக்கு தேவையான ஆங்கிலத் திறன்களை மதிப்பிடுகிறது. எனவே, வகுப்பறை செயல்பாட்டில் தேவைப்படும் திறன்கள் எவை என்பதை பற்றி மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

வேறு எந்த ஆங்கில மொழித்திறன் தேர்வுகளை விடவும், டோபல் தேர்வே, உலகெங்கிலும் அதிகளவில் ஏற்கப்படும் ஒன்றாக திகழ்கிறது. இன்றைய நிலையில், 130-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த, 8500-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், இத்தேர்வை ஏற்றுக்கொள்கின்றன மற்றும் அவைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.

உலகளாவிய அளவில், ஏராளமான கல்வி நிறுவனங்களால், இத்தேர்வு ஏற்கப்படுவதால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளின் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் மாணவர்கள், இத்தேர்வை மட்டும் எழுதினால் போதுமானது. இதனால், ஒரு மாணவருக்கு நேரமும், உழைப்பும் மிச்சமாகிறது. மொத்தம் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில், 4500-க்கும் மேற்பட்ட டோபல் தேர்வு மையங்கள் உள்ளன. அரை நாளில், மாணவர்கள், மதிப்பீட்டை நிறைவு செய்ய முடியும். எனவே, கூடுதலாக, தங்குமிடம் மற்றும் போக்குவரத்திற்கு செலவு செய்ய வேண்டியதில்லை.

சர்வதேச மதிப்பில் 165 டாலர்களும், இந்திய மதிப்பில் ரூ.7,500-ம் செலவாகிறது. இந்திய மாணவர்கள் விரும்பினால், ஆன்லைன் பதிவு அமைப்பின் மூலமாக, பணமாகவே, கட்டணத்தை செலுத்தும் வசதி, தற்போது செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், தேர்வு தேதியை மாற்ற விரும்பினாலோ, மறுமதிப்பீட்டிற்கு கோரினாலோ, கூடுதல் மதிப்பெண் பட்டியல் தேவைப்பட்டாலோ, அவைகளுக்கான கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

என்ன ஸ்பெஷல்?

டோபல் தேர்வை அங்கீகரிக்கும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை, பிற தேர்வுகளை விட மிகவும் அதிகம். இத்தேர்வு, ஒரு மாணவரின் ஆங்கிலத் திறனை, மிக நுட்பமாக அளவிடுகிறது. வாசித்தல் மற்றும் சுருக்கி எழுதுதல் போன்ற நடைமுறை உலகின் கல்வி சவால்களை இத்தேர்வு பிரதிபலிக்கிறது. மேலும், டோபல் தேர்வானது, சோதிப்பது மற்றும் அதை குறிப்பெடுப்பது போன்ற செயல்பாடுகளினால் தனித்துவம் பெறுகிறது. இதன் மூலம், மதிப்பெண் வழங்கும் செயல்முறையானது, நேர்மையாக நடப்பது, உறுதி செய்யப்படுகிறது.

மதிப்பெண் செயல்முறையானது, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக பின்பற்றப்படுகிறது. இதைத்தவிர, டோபல் மதிப்பாய்வு செயல்பாடானது, ஒவ்வொரு தேர்வருக்கும், பலவிதமான மதிப்பீட்டாளர்களின் மதிப்புரைக்கு அனுப்பப்படுகிறது. இதன்மூலம், ஒரே நபரின் கருத்தின் மூலம் முடிவு செய்வது தவிர்க்கப்படுகிறது. உதாரணமாக, பேசுதல் பகுதியானது, 3 முதல் 6 ஆங்கிலப் புலமையுள்ள நிபுணர்களால் மதிப்பிடப்படுகிறது.

இத்தேர்வில் பின்பற்றப்படும், மனிதர் மற்றும் தானியங்கி மதிப்பெண் முறையால், இதன் மதிப்பிடும் முறை, மிகவும் தரமானதாகவும், நம்பத்தகுந்ததாகவும் இருக்கிறது. இதன் மூலம், டோபல் தேர்வில் ஒருவர் பெறுகின்ற மதிப்பெண், உண்மையிலேயே, அவரின் திறமைக்கு கிடைத்ததுதான் என்பதை எளிதாக உறுதி செய்யலாம்.

https://www.ets.org

TOEFL 
Test of English as a Foreign Language is a standardised test to measure the English language ability of non-native speakers wishing to enroll in English-speaking universities. The test is accepted by more than 11,000 universities and other institutions in over 190 countries and territories. 

Fee: iBT: US$ 185 and up, depending on the country.

Year started: 1964; 58 years ago

Prerequisites / eligibility criteria: No official prerequisite. Intended for non-native English speakers

Countries / regions: 4,500 test centers in over 190 countries and territories.

Score / grade validity: 2 years

Scores / grades used by: More than 11,000 colleges, agencies and other institutions in over 150 countries.

Annual number of test takers: 2.3 million

(இது ஒரு மீள் பதிவு)

Saturday, August 16, 2025

பி.காம் எனும் இளநிலை வணிகவியல்: இது படிச்சா இவ்வளவு வாய்ப்புகளா?

பி.காம் எனும் இளநிலை வணிகவியல்: இது படிச்சா இவ்வளவு வாய்ப்புகளா?

கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் மத்தியில் பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் படிப்படியாக குறைந்து அவர்களின் பார்வை கலை அறிவியல் படிப்புகள் மீது திரும்ப ஆரம்பித்துள்ளது. கலை அறிவியல் படிப்புகளில் குறிப்பாக பி.காம் போன்ற படிப்புகள் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். 

இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஐடி துறைகளிலும் பி.காம் தேவை அதிகரித்திருப்பதே. பல ஐ.டி. நிறுவனங்கள், நிதிச்சேவைகள், தகவல் பாதுகாப்பு பிரிவுகளுக்கு பி.காம், பிபிஏ படித்தவர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து பணியமர்த்திக் கொள்கின்றன. 

பி.காம் படித்தால் என்ன வேலை இருக்கு ? 

பி.காம். (B. Com எனும் Bachelor of Commerce) படித்ததும் பல்வேறு துறைகளில் பணியாற்ற வாய்ப்பு ஏற்படுத்தித் தரக்கூடிய பட்ட மேற்படிப்புகள் உள்ளது. பி.காம். முதலாண்டு படிக்கும்போதே பட்ட மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு தயாராக வேண்டியது கட்டாயம். பி.காம். படித்ததும் எம்.காம்., பி.எட் படித்து ஆசிரியர் பணியிடத்துக்குக் கூட செல்லலாம். வங்கி, நிதி நிறுவனங்களிலும் இவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. 

போட்டித் தேரிவுகளில் பி.காம்..! 

பி.காம். படிப்பவர்களுக்கு காலை, மாலை உள்ளிட்ட பல வசதியான நேரங்களில் கல்வி நிறுவனங்கள் மேற்படிப்புகளை வழங்குகின்றன. இதுபோன்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் போட்டித் தேர்வுகளுக்கும் தயாராக முடியும். அப்படிச் செய்தால் நல்ல நிறுவனங்களில் உயர் பதவியை எளிதில் அடையமுடியும். 

பி.காம். படித்து முடித்து எம்.பி.ஏ. படிப்பவர்களுக்கு பெரிய நிறுவனங்களில் பணி வாய்ப்பு அதிகம் உள்ளது. 

உலக வங்கியில் பி.காம் மாணவர்கள்..! 

தாய்மொழி மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பிற கூடுதல் மொழிகளையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர்களுக்கு உலக வங்கிகளிலும் வேலைவாய்ப்பு அதிகளவில் கிடைக்கிறது. 

பி.காம். படித்து முடித்தவர்கள் சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., செகரட்டரிஷிப் போன்ற படிப்புகளையும் தேர்வு செய்து படிக்கலாம். இதன்மூலம் பெரிய நிறுவனங்களில் உயர்ந்த பதவிக்கு செல்ல எளிமையான வழிகள் கிடைக்கும். இதற்கான முயற்சியை பி.காம். பட்டப்படிப்பில் சேர்ந்த முதலாண்டில் இருந்து தொடங்குவது கட்டாயமாகும். 

நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் பி.காம்.! 

தற்போதுள்ள போட்டிகள் நிறைந்த உலகில் நிறுவனங்களுக்கு மட்டும் விதிவிலக்கில்லை. தங்களுடைய நிறுவனத்தின் விற்பனையை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. எனவே, பொருளை சந்தைப்படுத்துதல் துறையில் கூடுதல் பணி வாய்ப்புகள் பி.காம் மாணவர்களுக்கே உள்ளன. எனவே, மாஸ்டர் இன் ஃபைனான்சியல் மேனேஜ்மென்ட், மாஸ்டர் ஆஃப் மார்க்கெட்டிங் மேனேஜர், மாஸ்டர் இன் ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பி.காம் தொடர்புடைய மேற்படிப்புகளைப் படிப்பது நல்லது. 

வங்கிகளை ஆட்டிப்படைக்கும் பி.காம்..! 

கணினித்துறை சார்ந்த பணி வாய்ப்புகளுக்கு முயற்சி மேற்கொள்ளும் மாணவர்கள் எம்.சி.ஏ. பட்ட மேற்படிப்பை எவ்வித தயக்கமும் இன்றி தேர்வு செய்து படிக்கலாம். மாஸ்டர் இன் பேங்கிங் மேனேஜ்மென்ட் ஓராண்டு மற்றும் இரு ஆண்டு படிப்புகளாக வழங்கப்படுகிறது. பெரும்பாலான வங்கிகள் இத்துறையில் அனுபவம் மிக்கவர்களை வேலைக்கு தேர்வு செய்கிறது. இதைப் படிப்பதன்மூலம் வங்கி, நிதி நிறுவனங்களில் நல்ல பணி வாய்ப்பை பெற முடியும். 

உங்கள் கையில் பங்குச் சந்தை! 

மாஸ்டர் இன் கேபிட்டல் மார்க்கெட் போன்ற பி.காம் தொடர்புடைய பட்ட மேற்படிப்பினை மும்பை பங்குச் சந்தை மூலம் வழங்கப்படுகிறது. இதற்கும் நல்ல எதிர்காலம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. காப்பீட்டுத் துறை சார்ந்த பணி வாய்ப்புக்கு செல்ல விரும்புபவர்கள் காப்பீட்டு மேலாண்மை, ஹெல்த் மேனேஜ்மென்ட், ரிஸ்க் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளைப் படிக்கலாம். 

பி.காம்., படிக்க என்ன தகுதிகள் தேவை ! 

மூன்று ஆண்டு படிப்பான இதை படிக்க காமர்ஸ் பாடத்தொகுப்பில ்12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். இந்த படிப்பு வணிகவியலில் ஒரு ஆழமான அறிவை புகட்டும். இந்த வகையான படிப்பை கல்லூரியில் சென்று படிக்கலாம் அல்லது தொலைதூரக் கல்வி மூலம் வீட்டில் இருந்தே கூட படிக்கலாம். 

வளமான வாழ்வு நிச்சயம்..! 

அனைத்துத் துறைகளிலுமே வேலை வாய்ப்புகள் உள்ளது. அவற்றில், பி.காம். என்பது மிகவும் சாதகமான ஓர் அம்சமாக தற்போது உருபெற்றுள்ளது. பி.காம். படிப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான துறையைத் தேர்வு செய்து மேற்படிப்பு மேற்கொண்டால் வளமான வேலை வாய்ப்பைப் பெறலாம்.

#AKV #அடியற்கை கல்வி வழிகாட்டி

IIT madras உள்நுழைவது அத்தனை கடினமா?

IIT madras உள்நுழைவது அத்தனை கடினமா? என் மகன் ஆதில் முஹம்மத் முதலாம் ஆண்டு கல்லூரி சேருவதற்கு முன் அவனை சென்னை ஐஐடியில் சேர்த்து...